பொது நலத்திற்க்கு அல்லாஹ்வின் அருள்உண்டு...
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ' بَيْنَا رَجُلٌ بِفَلَاةٍ مِنَ الْأَرْضِ، فَسَمِعَ صَوْتًا فِي سَحَابَةٍ: اسْقِ حَدِيقَةَ فُلَانٍ، فَتَنَحَّى ذَلِكَ السَّحَابُ، فَأَفْرَغَ مَاءَهُ فِي حَرَّةٍ، فَإِذَا شَرْجَةٌ مِنْ تِلْكَ الشِّرَاجِ قَدِ اسْتَوْعَبَتْ ذَلِكَ الْمَاءَ كُلَّهُ، فَتَتَبَّعَ الْمَاءَ، فَإِذَا رَجُلٌ قَائِمٌ فِي حَدِيقَتِهِ يُحَوِّلُ الْمَاءَ بِمِسْحَاتِهِ، فَقَالَ لَهُ: يَا عَبْدَ اللهِ مَا اسْمُكَ؟ قَالَ: فُلَانٌ - لِلِاسْمِ الَّذِي سَمِعَ فِي السَّحَابَةِ - فَقَالَ لَهُ: يَا عَبْدَ اللهِ لِمَ تَسْأَلُنِي عَنِ اسْمِي؟ فَقَالَ: إِنِّي سَمِعْتُ صَوْتًا فِي السَّحَابِ الَّذِي هَذَا مَاؤُهُ يَقُولُ: اسْقِ حَدِيقَةَ فُلَانٍ، لِاسْمِكَ، فَمَا تَصْنَعُ فِيهَا؟ قَالَ: أَمَّا إِذْ قُلْتَ هَذَا، فَإِنِّي أَنْظُرُ إِلَى مَا يَخْرُجُ مِنْهَا، فَأَتَصَدَّقُ بِثُلُثِهِ، وَآكُلُ أَنَا وَعِيَالِي ثُلُثًا، وَأَرُدُّ فِيهَا ثُلُثَهُ '،
صحيح مسلم
ஒரு மனிதர் பொட்டல்காடான இடத்தில் இருக்கும்போது வானத்தில் ஒரு சத்தம் இன்னாள் இடத்திற்குச்சென்று அங்கு தண்ணீர் பாய்ச்சு என ஓர் ஓசை. அதை கேட்டு அந்த மேகத்தை பின்தொடர்ந்து சென்றார். அங்கு ஒரு விவசாயி வீட்டு நிலத்தில் தண்ணீர் பாய்ச்சியது. இவரிடத்தில் அந்த மனிதர் நடந்த சம்பவத்தை எடுத்து சொல்லி இந்த சிறப்பிற்கு என்ன காரணம் என கேட்டார். ஆதற்கு அந்த விவசாயி நான் என் நிலத்தில் விழையும் பொருட்களை மூன்றாக பிறிப்பேன்.
ஒரு பங்கு என் குடுப்பத்திற்கு
இரண்டாவது பங்கு என் நிலத்திற்கு அடுத்த வருட விதைக்கு
மூன்றாவது பங்கு ஏழைகளுக்கு தானம் செய்துவிடுவேன் என்றார்கள்.
இப்படி பொதுநலச்சிந்தனையுடன் செயல்பட்டதற்காகத்தான் அந்த விவசாயிற்கு அல்லாஹ் தண்ணீர் அனுப்பிவைத்தான் என பார்க்கும்போது பொது நலத்திற்க்கு அல்லாஹ்வின் அருள்உண்டு என்பது நமக்கு தெளிவாகிறது.
நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
وَاللهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ،
ஒருவன் மற்ற சகோதரருக்கு உதவி செய்தால் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்கிறான்.
அடுத்தவர் நலனை விரும்பி வேலை செய்பவர் தன் நலத்திற்கு அல்லாஹ் பொருப்பேற்றுக்கொள்கிறான் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும்.
No comments:
Post a Comment