Monday, 3 February 2020

முதலில் நம் குடும்பங்களில் இருந்து தான் தொடங்க வேண்டும் ...

முதலில் நம் குடும்பங்களில் இருந்து தான் தொடங்க வேண்டும் ...

அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக இருக்கட்டும்,

 நல்லறங்களைக் கொண்டு ஏவுவதாக இருக்கட்டும், 

நரகில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாக இருக்கட்டும்

 முதலில் அதை நம் குடும்பங்களில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்று அல்லாஹ் ஆணையிடுவதை குர்ஆனில் பார்க்க முடிகின்றது.

وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ

அல்லாஹ் கூறுகின்றான்: ( நபியே! ) “உம்முடைய மிக நெருங்கிய உறவுகளை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்!”.            

( அல்குர்ஆன்: 26: 214 )

وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا

அல்லாஹ் கூறுகின்றான்: ( நபியே! ) “தொழுகையைப் பேணி வருமாறு உம்முடைய குடும்பத்தாருக்கு நீர் கட்டளையிடுவீராக! நீரும் அதை முறையாக கடை பிடித்து வருவீராக!.”  
                                     
  ( அல்குர்ஆன்: 20: 132 )

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ

அல்லாஹ் கூறுகின்றான்: “இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும், கற்களும் எரிபொருள்களாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தார்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!”.   

  ( அல்குர்ஆன்: 66: 6 )

ஆக உலக முஸ்லிம்களின் காரியங்களுக்கு முன்னால் நம்முடைய குடும்ப வாழ்க்கை சரி செய்யப்பபட வேண்டியதன் அவசியத்தை மேற்கூறிய இறை வசனங்கள் நமக்கு உணர்த்துவதை புரிந்து கொள்ள முடிகின்றது.

No comments:

Post a Comment