குர்ஆன், ஸுன்னாவை பின் பற்றி நடப்பது…
فَالَّذِينَ آمَنُواْ بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُواْ النُّورَ الَّذِيَ أُنزِلَ مَعَهُ أُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ()
“ஆகவே, எவர்கள் அவர் {முஹம்மது ஸல்} மீது நம்பிக்கை கொண்டு, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து அவருடன் இறக்கி வைக்கப் பட்டுள்ளதே அந்த வேத ஒளியைப் பின்பற்றினார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்”.
( அல்குர்ஆன்: 7: 157 )
وأخرج الإمام أحمد رحمه الله: عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه و سلم صلى الله عليه وسلم: "لكل عمل شرة ولكل شرة فترة فمن كانت فترته إلى سنتي فقد أفلح ومن كانت إلى غير ذلك فقد هلك ". وهو في الصحيح المسند للعلامة الوادعي رحمه الله وقال: هذا حديث صحيح على شرط الشيخين
அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒவ்வொரு செயலுக்கும் ஒரு வரையறை இருக்கின்றது. ஒவ்வொரு வரையறைக்கும் ஒரு (இயற்கை) மார்க்கம் இருக்கின்றது. எவருடைய (இயற்கை) மார்க்கம் என் வழியாக, நடைமுறையாக இருக்கின்றதோ அவர் வெற்றி பெறுவார்; என் வழியல்லாத, நடைமுறையல்லாத மார்க்கமாக எவருடைய மார்க்கம் இருக்கின்றதோ அவர் தோல்வியைத் தழுவுவார்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: அஹ்மத் )
No comments:
Post a Comment