Tuesday, 4 February 2020

இறைவனும், இறை உதவியும் எங்கே?

இறைவனும், இறை உதவியும் எங்கே?

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ ()

நபியே! உம்மிடத்தில் என்னைப் பற்றி என் அடியார்கள் இறைவன் எங்கிருக்கின்றான்? என்று கேட்டால், இதோ! மிகச் சமீபமாக நான் இருப்பதாக நீர் கூறிவிடுங்கள்! என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன்! (என்பதைத் தெரிவித்து விடுங்கள்!)

                                                    

  ( அல்குர்ஆன்: 2: 186 )

مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ ()

“அல்லாஹ்வுடைய உதவி எப்போது வரும்? என்று அம்மக்கள் கேட்டனர். அப்போது, துன்பத்தில் உழன்ற அம்மக்களுக்கு “இதோ! அல்லாஹ்வுடைய உதவி மிக அண்மையில் இருக்கின்றது” என்று ஆறுதல் சொல்லப்பட்டது”.

 ( அல்குர்ஆன்: 2: 214 )

இறைநேசமும்… இறைநெருக்கமும் எங்கேயோ அங்கே!!!

   عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 

“எவர் என் நேசரை பகைத்துக் கொள்கின்றாரோ அவருடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன்! எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்ப்படுத்திக் கொள்வதில்லை.

என் அடியான் உபரியான வழிபாடுகளின் மூலமாக என் பக்கம்  நெருங்கி வந்து கொண்டே இருப்பான். அதன் இறுதியில் அவனை  நான் நேசிப்பேன். அவ்வாறு அவனை  நான் நேசித்து விடும் போது , அவன் கேட்கின்ற செவியாக ,அவன் பார்க்கின்ற பார்வையாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம்  நான் அவனுக்கு  பாதுகாப்பு அளிப்பேன்.

  ( நூல்: புகாரி )

இறைநெருக்கத்தையும், இறை உதவியையும் பெற என்ன செய்ய வேண்டும் என்ற வினாவுக்கு இறை நேசத்தின் மூலமாகத் தான் பெற முடியும்க என்பதை மேற்கூறிய நபிமொழி நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகின்றது.

No comments:

Post a Comment