சிறப்பான அனைத்தையும் வேண்டுவது .....
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَسْأَلَة
ِ وَخَيْرَ الدُّعَاء
ِ وَخَيْرَ النَّجَاحِ
وَخَيْرَ الْعَمَل
ِ وَخَيْرَ الثَّوَاب
ِ وَخَيْرَ الْحَيَاة
ِ وَخَيْرَ الْمَمَاتِ
وَثَبِّتْنِيْ وَثَقِّلْ مَوَازِيْنِي
ْ وَأَحِقَّ إِيْمَانِي
ْ وَارْفَعْ دَرَجَتِي
ْ وَتَقَبَّلْ صَلاَتِيْ
وَاغْفِرْ خَطِيْئَتِيْ،
وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةِ .
யா அல்லாஹ்!
சிறந்த வேண்டுகோளையும் சிறந்த பிரார்த்தனையையும் சிறந்த வெற்றியையும் சிறந்த அமலையும் சிறந்த நன்மையையும் சிறந்த உயிர்வாழ்வையும் சிறந்த மரணத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.
(யா அல்லாஹ்!)
என்னை நீ உறுதிப்படுத்துவாயாக!
என்னுடைய தராசை (நன்மையால்) அதிக எடையுள்ளதாக ஆக்கியருள்வாயாக!
என்னுடைய ஈமானை (நம்பிக்கையை) உறுதிப்படுத்துவாயாக!
என் அந்தஸ்தை உயர்த்துவாயாக!
என்னுடைய தொழுகையை ஏற்றுக் கொள்வாயாக!
என் பாவத்தை மன்னித்தருள்வாயாக!
(யா அல்லாஹ்!)
சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.
(தப்ரானி)
No comments:
Post a Comment