தவறான முறையில் பொருளை ஈட்டுவது கூடாது ...
وَيْلٌ لِّلْمُطَفِّفِيْنَۙ
அளவில் மோசடி செய்பவருக்குக் கேடுதான்!
الَّذِيْنَ اِذَا اكْتَالُوْا عَلَى النَّاسِ يَسْتَوْفُوْنَ
அவர்கள் எத்தகையோர் என்றால், மக்களிடமிருந்து அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்குகின்றார்கள்.
وَاِذَا كَالُوْهُمْ اَوْ وَّزَنُوْهُمْ يُخْسِرُوْنَ
அவர்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறைத்துக் கொடுக்கின்றார்கள்.
اَلَا يَظُنُّ اُولٰٓٮِٕكَ اَنَّهُمْ مَّبْعُوْثُوْنَۙ
திண்ணமாக, அவர்கள் ஒரு மாபெரும் நாளில் எழுப்பிக் கொண்டுவரப்படவிருக்கின்றார்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லையா?
لِيَوْمٍ عَظِيْمٍۙ
ஒரு மாபெரும் நாளில்,
يَّوْمَ يَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعٰلَمِيْنَ
அந்நாளில், அனைத்துலகின் அதிபதியின் முன்னால் மாந்தர்கள் அனைவரும் நின்றுகொண்டிருப்பார்கள்.
சாபத்திற்குரியோர்
அளவு நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடுதான்! அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது நிறைவாக வாங் கிக் கொள்கின்றனர். மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத் தால் குறைத்து விடுகின்றனர். மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.
அல்குர்ஆன்
(86 : 1 முதல் 6 வரை)
நரகம் பரிசாகும்
நபி ஸல் அவர்கள், "யார் தன்னுடைய சத்தியத்தின் மூல மாக ஒரு முஸ்லிமின் பொருளை அநியாயமாக எடுக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தை ஹராமாக்கி நரகத்தில் நுழையச் செய்கிறான்'' என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் (196)
தவறான முறையில் பொருளை ஈட்டுவதால் இறைவனின் அன்பை விட்டும் அவனின் அருளை விட்டும் தூரமானவர்களாக மாறி நகரவாதிக ளாக நாம் மாற வேண்டிய நிலை ஏற்படும். எனவே பொருளாதராத்தை இறைவன் அனுமதித்த முறையில் ஈட்ட முயற்சி செய்வோம்.
No comments:
Post a Comment