ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாடி ஓதக் கூடிய துஆ ...
اَللَّهُمَّ أَعِنِّيْ عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ.
யா அல்லாஹ்! உன்னை நினைவு கூர்வதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எனக்கு நீ உதவி செய்தருள்வாயாக!
(அபூதாவூத், நஸாயி)
اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوْذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْقَبْرِ.
யா அல்லாஹ்! கஞ்சத்தனத்தை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன், மேலும் கோழைத்தனத்தை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன், மேலும் அதிமுதிர்ந்த வயது வரையில் எனது வாழ்வு நீடிக்கச் செய்யப்படுவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன், மேலும் உலகத்தின் குழப்பத்தை விட்டும் மண்ணறையின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
(புகாரி)
اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ، وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ.
யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்கின்றேன், மேலும் நரகத்திலிருந்து உன்னிடம் பாதுகாவலும் தேடுகின்றேன்.
(அபூதாவூத்)
No comments:
Post a Comment