உமர் இப்னு ஃகத்தாப் (ரலி) அவர்களுக்கு ஃபாரூக் என்ற பெயர் எப்படி வந்தது?”
فروى مجاهد عن ابن عباس قال : سألت عمر بن الخطاب : لأي شيء سميت الفاروق ؟ قال : أسلم حمزة قبلى بثلاثة أيام ـ ثم قص عليه قصة إسلامه . وقال في آخره : قلت ـ أي حين أسلمت : يا رسول الله، ألسنا على الحق إن متنا وإن حيينا ؟ قال : ( بلى، والذي نفسي بيده، إنكم على الحق وإن متم وإن حييتم ) ، قال : قلت : ففيم الاختفاء ؟ والذي بعثك بالحق لنخرجن، فأخرجناه في صفين، حمزة في أحدهما، وأنا في الآخر، له كديد ككديد الطحين، حتى دخلنا المسجد، قال : فنظرت إلىّ قريش وإلى حمزة، فأصابتهم كآبة لم يصبهم مثلها، فسماني رسول الله صلى الله عليه وسلم ( الفاروق ) يومئذ .
ஒருமுறை அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து உரையாடிக்கொண்டிருக்கும் போது ”உங்களுக்கு ஃபாரூக் என்ற பெயர் எப்படி வந்தது?” எனக் கேட்டார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், அதுவா? எனக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தான் ஹம்ஜா (ரலி) அவர்கள் முஸ்லிமானார்கள். நான் அதற்கு பின்னரே முஸ்லிம் ஆனேன்.
நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போது “அல்லாஹ்வின் தூதரே! நாம் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் சத்திய கொள்கையில் தானே இருக்கின்றோம்” என்று கேட்டேன்.
அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “ஆம்! என் உயிர் எவன் வசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் சத்தியத்தின் மீது தான் இருக்கின்றீர்கள்” என்று கூறினார்கள்.
அதற்கு, நான் “அப்படியென்றால் ஏன் நாம் (இவ்வளவு அவமானங்களையும், கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு) மறைவாக செயல்பட வேண்டும்.
உங்களைச் சத்திய மார்க்கத்தைக் கொண்டு அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாம் பகிரங்கமாக சத்தியத்தைக் கூறியே ஆக வேண்டும்” என்று கூறி முஸ்லிம்களை இரண்டு அணிகளாக ஆக்கி, ஓர் அணியில் நானும் இன்னொரு அணியில் ஹம்ஜாவும் இருந்து கொண்டு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களை இரு அணிகளுக்கும் நடுவில் ஆக்கிக் கொண்டோம்.
திருகையிலிருந்து மாவுத்துகள்கள் பறப்பது போன்று எங்களது அணியில் இருந்து புழுதிகள் பறந்தன. நாங்கள் கஃபாவில் நுழைந்தவுடன் என்னையும், ஹம்ஜாவையும் பார்த்த குறைஷிகளுக்கு அதுவரை ஏற்படாத கைசேதமும் கவலையும் ஏற்பட்டதை நான் கண்டேன்.
அன்று தான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எனக்கு ஃபாரூக் எனப் பெயரிட்டார்கள்.” என்று கூறினார்கள்.
No comments:
Post a Comment