Wednesday, 19 February 2020

உயிரை உறிஞ்சும் வட்டியை மாநபி {ஸல்} அவர்கள் தடை செய்தார்கள்...

உயிரை உறிஞ்சும் வட்டியை மாநபி {ஸல்} அவர்கள் தடை செய்தார்கள்...

வட்டியை தடை செய்து, வட்டியில்லா அழகிய கடன் வழங்க வான்மறை துணை நின்று வழி கோலிய அண்ணலார் (ஸல்)…..

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبا لا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ

"வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து, வட்டியைத் தடை செய்து விட்டான்.

தமது இறைவனிடமிருந்து அறிவுரை வந்தப்பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் (வட்டித் தொழில்) செய்வோர் நரகவாசிகள் ஆவர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்”.                                              

( அல் குர்ஆன்: 2: 275 )

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ.

"நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!" அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்து விடுங்கள்".                        

  ( அல் குர்ஆன்: 2: 278,279 )

عن عبد الله بن حنظلة غسيل الملائكة قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهويعلم أشد من ستة وثلاثين زنية

 (رواه أحمد)

"வட்டியின் ஒரு நாணயத்தை (அது வட்டியின் பொருள்தான் என்பதை) அறிந்த நிலையில் ஒருவன் உண்பது, முப்பத்தி ஆறு முறை விபச்சாரம் புரிவதை விட கடுமையான குற்றமாகும்" என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். 

( நூல்: அஹ்மது )

விபச்சாரத்தை விட கேடு கெட்டச் செயல் தான் ... வட்டி

عن عبد الله بن مسعود أن رسول الله صلى الله عليه وسلم

 لعن آكل الربا

 وموكله

 وشاهديه

 وكاتبه

 رواه إ بن ماجه

"வட்டியை உண்பவன்,

 அதனை உண்ணக் கொடுப்பவன்,

 அதற்கு சாட்சியம் அளிக்கும் இருவர்,

 கணக்கு எழுதுபவன்

 ஆகிய அனைவரையும் நபி {ஸல்} அவர்கள் சபித்தார்கள்".  
                                             

( நூல்: இப்னு மாஜா )

No comments:

Post a Comment