தொழுகையை பேணுதலோடும், உள்ளச்சத்தோடும் தொழுவது…
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ () الَّذِينَ هُمْ فِي صَلاتِهِمْ خَاشِعُونَ
“இறைநம்பிக்கையாளர்கள் திட்டமாக வெற்றி அடைந்து விட்டார்கள்; அவர்கள் எத்தகையோரென்றால் தொழுகையில் அவர்கள் உள்ளச்சம் உடையவர்களாக இருப்பார்கள்”.
(அல் குர்ஆன்: 23: 1 )
இதே தொடரில்…
وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ ()
“இன்னும், அவர்கள் தம் தொழுகைகளின் மீது பேணுதலும் கவனமும் உள்ளவர்களாக இருப்பார்கள்”.
( அல்குர்ஆன்: 23: 9 )
இவ்வுலகத்தில் மாத்திரமல்ல மறுமையிலும் வெற்றியைத் தீர்மானிக்கும் ஆற்றல் தொழுகைக்கு உண்டு.
وأخرج الترمذي رحمه الله: عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:" إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته، فإن صلحت، فقد أفلح وأنجح، وإن فسدت، فقد خاب وخسر، فإن انتقص من فريضته شيئاً، قال الرب، عز وجل: انظروا هل لعبدي من تطوعٍ، فيكمل منها ما انتقص من الفريضة؟ ثم يكون سائر أعماله على هذا" قال الترمذي حديث حسن
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “மறுமையில் ஓர் அடியானிடம் முதன் முதலாக தொழுகை குறித்தே விசாரிக்கப்படும்; அக்கேள்விக்கான பதில் சரியாக இருந்தால் அந்த அடியான் பெரும் வெற்றியை எய்தப் பெறுவார். இல்லையெனில், பெரும் தோல்வியையும், நஷ்டத்தையும் சந்திப்பார்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: திர்மிதீ )
No comments:
Post a Comment