யா அல்லாஹ் ! உலகத்தின் சோதனைகளை எளிதாகக் கருதச் செய்யும் (மன) உறுதியையும் எங்களுக்குத் தா என கேட்பது ...
اَللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُوْلُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيْكَ،
وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ،
وَمِنَ الْيَقِيْنِ
مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا
مُصِيْبَاتِ الدُّنْيَا
وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا
وَأَبْصَارِنَا
وَقُوَّتِنَا
مَا أَحْيَيْتَنَا
وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا
وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا
وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا
وَلاَ تَجْعَلْ مُصِيْبَتَنَا فِيْ دِيْنِنَا
وَلاَ تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا
وَلاَ مَبْلَغَ عِلْمِنَا
وَلاَ تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لاَ يَرْحَمُنَا.
யா அல்லாஹ்!
உனக்கு மாறு செய்வதை விட்டும் எங்களைத் தடுக்கக்கூடிய (உன்னைப்பற்றிய) அச்சத்தையும், உன்னுடைய சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் வழிபாட்டையும், உலகச் சோதனைகளை எளிதாகக் கருதச் செய்யும் (மன) உறுதியையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக!
(யா அல்லாஹ்!)
எங்களுடைய செவிப்புலன்களையும், பார்வைகளையும் (உடல்) சக்தியையும் நீ எங்களை உயிர்வாழ வைக்கும் காலமெல்லாம் (குறைவின்றி) இயங்கச் செய்வாயாக!
அதனையே எங்கள் வாரிசுகளுக்கும் (சந்ததிகளுக்கும்) ஆக்கியருள்வாயாக!
எங்களுக்கு அநீதம் செய்தவர்களைப் பழி வாங்குவாயாக!
எங்கள்மீது விரோதம் கொண்டவர்களுக்குப் பாதகமாக எங்களுக்கு நீ உதவி செய்வாயாக!
எங்களுடைய மார்க்கத்தில் எங்களுக்கு சோதனையை ஏற்படுத்திவிடாதே!
இவ்வுலகையே எங்கள் நோக்கமாகவும் எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்கிவிடாதே!
(எங்களின் பாவங்களினால்) எங்கள்மீது இரக்கம் காட்டாதவனை எங்களுக்கு பொறுப்பாளியாக ஆக்கிவிடாதே!
(திர்மிதி)
No comments:
Post a Comment