யாசிப்பது நிர்பந்தமான மூன்று நிலையில் உள்ளவருக்கு மட்டும் தான் அனுமதியாகும்...
யாசிப்பதை விட்டு விட்டு உழைக்கத் தூண்டிய அண்ணலார்….
இன்னொரு புறம், தங்களுடைய வறிய, ஏழ்மையான சூழ்நிலையைக் காரணம் காட்டி யாசகம் கேட்டு வாழ்வதை மாநபி {ஸல்} அவர்கள் கடுமையாக கண்டித்தார்கள்.
عن قبيصة بن مخارق الهلالي رضي الله عنه: قال:' تحمَّلت حَمَالة ، فأتيتُ رسول الله صلى الله عليه وسلم أسأله فيها ، فقال: أقِمْ حتى تأتيَنا الصدقةُ ، فنأمُرَ لك بها ، ثم قال: يا قبيصة ، إنَّ المسألةَ لا تحلّ إلا لأحد ثلاثة: رجل تحمل حمالة ، فَحلَّتْ له المسألة حتى يُصيبَها ، ثم يُمْسِكُ ، ورجُل أصابتهُ جائحة اجتاحت ، فحلّتْ له المسألة حتى يُصيب قوَاما مِنْ عَيْش - أو قال: سِدادا مِنْ عَيْش - ورجل أصابته فاقة ، حتى يقول ثلاثة من ذوي الحِجَا من قومه: لقد أصابت فلاناً فاقة ، فحلّت له المسألة ، حتى يصيبَ قَوَاما من عَيْش - أو قال: سِدَادا من عيش - فما سِوَاُهنَّ من المسألة يا قبيصة سُحْت ، يأكلها صاحبها سُحْتا '.
أخرجه مسلم وأبو داود والنسائي.
கபீஸா இப்னுல் மஃகாரிக் அல் ஹிலாலீ (ரலி) கூறுகின்றார்கள்: ”
இருவருக்கு மத்தியில் நடைபெற்ற சண்டையை சமாதானம் செய்து வைத்து, அந்த சமாதானத்தை பணத்தை கொடுப்பதன் மூலம் தீர்த்து வைத்து அப்பொறுப்பை தான் ஏற்றுக்கொண்ட நிலையில் அல்லாஹ்வின் தூதரிடம் வந்தேன். சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நான் பொறுப்பேற்ற பணத்தை கொடுக்க என்னிடம் போதுமான பண வசதி இல்லை என்று கூறி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடத்தில் பணத்தை கேட்டேன்.
அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} ”இவ்விடத்தில் நிற்பீராக, எங்களுக்கு ஸதகாக்கள் வரும் அதனை உமக்கு தருமாறு ஏவுவோம்! சற்று நிற்பீராக! என்று என்னிடம் கூறினார்கள். பிறகு ஹபீஸாவே யாசிப்பது நிர்பந்தமான மூன்று நிலையில் உள்ளவருக்குதான் அனுமதியாகும்.
”ஒருவர், இருவருக்கு மத்தியிலுள்ள சண்டையை சமாதானம் செய்து விட்டு அதில் கொடுக்க வேண்டிய பணத்தை தான் தருவதாக வாக்குறுதி அளித்தவராவார். அவரிடம் கொடுப்பதற்கு பணமில்லை எனும் நிலையில் அவர் யாசிப்பது ஹலாலாகும் அப்பணத்தைப் பெற்றவுடன் யாசிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இன்னொருவர், திடீரென ஏற்படும் பேரிடரின் காரணமாக சொத்து செல்வங்கள் அனைத்தையும் பறிகொடுத்து விட்ட ஒருவர், அவரும் யாசிப்பது அனுமதிக்கப் பட்டதாகும். இது அவர் வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ளும் வரை தான் பின்னர் அவர் யாசிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மூன்றாமவர், வறுமையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர். அவரது சமூகத்திலே உள்ள தலைவர்கள், அறிஞர்கள் அவருக்கு உதவி செய்யுமாறு பரிந்துரை செய்கின்கிறார்கள். அந்நபருக்கும் யாசிப்பது அனுமதிக்கப்பட்டதாகும். அவரும் வாழ்வாதாராத்தைப் பெற்றுக்கொள்ளும் வரை தான் பின்னர் அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இதற்குப் பின்னரும் ஒரு மனிதன் கை நீட்டுவானேயானால், யாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்வானேயானால், பிச்சை கேட்பதை தொழிலாக செய்வானேயானால் அவன் ஆகுமாக்கப்படாத ஹராமான உணவையே உண்ணுகிறான்’ என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: அஹ்மத் )
No comments:
Post a Comment