Sunday, 16 February 2020

முஸ்லிம்கள் அன்பு செலுத்த வேண்டும் ...

بسم الله الرحمان الرحيم

முஸ்லிம்கள் அன்பு செலுத்த வேண்டும்  ...

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ 

(நபியே! மக்களிடம்) நீர் கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் பெருங்கருணையுடையவனுமாவான்.”

(அல்குர்ஆன் : 3:31)

عن أنسٍ رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ((ثلاثٌ من كن فيه وجد بهن حلاوة الإيمان، من كان الله ورسوله أحبَّ إليه مما سواهما، وأن يحب المرء لا يحبه إلا لله، وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه، كما يكره أن يقذف في النار)).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 (மூன்று தன்மைகள் அமையப் பெறாத) எவரும் இறை நம்பிக்கையின் சுவையை உணர மாட்டார்.

 (அவை)

1. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்விற்காகவே நேசிப்பது.

2. இறை மறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பிறகு மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது.

3. மற்ற எதையும் விட அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு நேசத்திற்குரியோராவது. 

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி (6041)

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

هذا حديث ضعيف

اللهم إني أسألك حبك وحب من يحبك وحب كل عمل يقربني إلى حبك

(இறைவா) உன்னை நேசிப்பதையும், உன்னை யார் நேசிப்பார்களோ அவர்களை நேசிப்பதையும், உனது நேசத்தின் பால் எந்தக் காரியம் நெருக்கி வைக்குமோ அந்த நற்காரியத்தை (நான்) விரும்புவதையும் உன்னிடத்தில் வேண்டுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)

நூல்: திர்மிதி (3159)

No comments:

Post a Comment