Monday, 10 February 2020

அல்லாஹ்வைத் தவிர. யாரிடமும் கையேந்தாமல் இருக்க ...அழகிய வரலாறு....

அல்லாஹ்வைத் தவிர. யாரிடமும் கையேந்தாமல்  இருக்க ...

இன்னுமோர் அழகிய எடுத்துக் காட்டு….

بعد غزوة حنين سأل حكيم بن حزام رسول الله من الغنائم فأعطاه، ثم سأله فأعطاه، حتى بلغ ما أخذه مائة بعير، وكان يومئذ حديث عهد بالإسلام، فقال له النبي : " يا حكيم، إن هذه الأموال حلوة خضرة، فمن أخذها بسخاوة نفس بورك له فيها، ومن أخذها بإشراف نفس لم يبارك له فيها، وكان كالذي يأكل ولا يشبع واليد العليا خير من اليد السفلى " فلما سمع حكيم بن حزام ذلك من النبي قال : (واللهِ يا رسول الله، والذي بعثك بالحق لا أسأل أحدا بعدك شيئا، ولا آخذ من أحد شيئا بعدك حتى أفارق الدنيا) وبر حكيم بقسمه أصدق البر، ففي عهد أبي بكر دعاه الصديق أكثر من مرة لأخذ عطاء من بيت مال المسلمين فأبى أن يأخذه، ولما آلت الخلافة إلى الفاروق دعاه مرة ثانية إلى أخذ عطاء فأبى أن يأخذه، فقام عمر في الناس وقال : (أشهدكم يا معشر المسلمين، أني أدعو حكيما إلى أخذ عطائه فيأبى) وظل حكيم كذلك لم يأخذ من أحد شيئا حتى فارق الحياة
مات سنه اربع وخمسين من الهجرة وقيل أنه عاش 120 سنه ستون في الجاهلية وستون في الإسلام

ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அறிவிக்கின்றார்கள்; 

“நான் இறைத்தூதர் {ஸல்} அவர்களிடம் ( தருமம் ) கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகும் நபி {ஸல்} அவர்களிடம் கேட்டேன். நபி {ஸல்} அவர்கள் கொடுத்தார்கள்.

பிறகு என்னிடம், ”ஹகீமே! இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். இதை தாராள மனத்துடன் ( பேராசையின்றி ) எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அருள் வளம் (பரக்கத்) வழங்கப்படுகிறது.

இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார். ( கொடுக்கும் ) மேல் கை, ( வாங்கும் ) கீழ்க் கையை விடச் சிறந்ததாகும்" என்று கூறினார்கள்.

நான், 'இறைத்தூதர் அவர்களே! சத்திய மார்க்கத்துடன் தங்களை அனுப்பியவன் மீது ஆணையாக! தங்களுக்குப் பின் எவரிடமும் எதையும் நான் ( இந்த ) உலகைவிட்டுப் பிரியும் வரை கேட்க மாட்டேன்" என்று கூறினேன்.

இதை அறிவிக்கும் அறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) கூறுகின்றார்கள்: ”ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்களை அபூபக்ர் (ரலி) அன்பளிப்புத் தருவதற்காக அழைத்தார்கள். அவர்களிடமிருந்து எதையும் ஏற்றுக் கொள்ள அவர் மறுத்துவிட்டார்.

பிறகு, உமர் (ரலி) அவருக்கு ( அன்பளிப்புகள் சிலவற்றைக் ) கொடுப்பதற்காக அழைத்தார்கள். அதையும் ஏற்க அவர் மறுத்துவிட்டார். எனவே, உமர் (ரலி) ( மக்களிடையே ), ”முஸ்லிம்களே! இந்த (ஃபய்உ எனும்) வெற்றிச் செல்வங்களிலிருந்து அல்லாஹ் ஒதுக்கிய அவரின் உரிமையை அவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தேன். ஆனால், அதை எடுத்துக் கொள்ள அவர் மறுத்துவிட்டார்” என்று அறிவித்து விட்டார்கள்.

நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த மனிதரிடமும், ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி), தாம் மரணிக்கும் வரை ( எதுவும் ) கேட்கவில்லை.       

    ( நூல்: புகாரி )

புனித இஸ்லாத்தை ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள் தங்களின் 60 –ஆவது வயதில் ஏற்றார்கள். 120 –வது வயதில் ஹிஜ்ரி 54 –இல் மரணித்தார்கள்.

அதாவது, வயது முதிர்ந்த பருவத்தில் இஸ்லாத்தை ஏற்று மிகவும் வயது முதிர்ந்த பருவம் வரை வாழ்ந்த ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள் தேவைகள் நிறைந்த பல தருணங்களில் கூட அண்ணலாரின் அறிவுரைக்கு மதிப்பளித்து எவரிடமும் கையேந்தாமல் வாழ்ந்திருக்கின்றார்கள்.    

   ( நூல்: உஸ்துல் ஃகாபா )

No comments:

Post a Comment