Monday, 17 February 2020

முதன்மையானவர்!!!

முதன்மையானவர்

                          سيدنا  أبو بكر الصّدّيق    
                         عبد الله بن أبي قحافة

ஆண்களில் இஸ்லாத்தை ஏற்றதில் முதலாமவர்.

திருக்குர்ஆனுக்கு முஸ்ஹஃப் என்று பெயர் சூட்டியதில் முதலாமவர்.

நபித்துவத்துக்கு பின் கிலாபத்தை ஏற்றதில் முதலாமவர்.

ஸித்தீக் எனும்  பட்டம் பெற்றதில் முதலாமவர்.

திருக்குர்ஆனை ஒன்றுசேர்த்ததில் முதலாமவர்.

தன் தந்தை ஹயாத்தாக வாழும்போதே கிலாபத் பெற்றவரில் முதலாமவர்.

பைத்துல் மாலை நிறுவியதில் முதலாமவர்.

இப்படி முழு முதலுக்கும் சொந்தக்காரர் அவர்.

இந்த முதல் போய் முடியும் இடத்தையும் அண்ணல் நபி ஸல் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

என் உம்மத்தில் எல்லோருக்கும் முதலாவதாக சுவனம் செல்பவர் சித்தீக் ரலிஅவர்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறுகின்றார்கள்.

அவர்தான் அபூபக்ர்ஸித்தீக்(ரலி)அவர்கள்

No comments:

Post a Comment