Friday, 20 August 2021

நரகத்தில் குறைந்த தண்டனையின் அளவு

நரகத்தில் குறைந்த தண்டனையின் அளவு

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَهْوَنُ أَهْلِ النَّارِ عَذَابًا رَجُلٌ فِي رِجْلَيْهِ نَعْلَانِ، يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ، وَمِنْهُمْ فِي النَّارِ إِلَى كَعْبَيْهِ مَعَ إِجْرَاءِ الْعَذَابِ، وَمِنْهُمْ مَنْ فِي النَّارِ إِلَى رُكْبَتَيْهِ مَعَ إِجْرَاءِ الْعَذَابِ، وَمِنْهُمْ مَنِ اغْتَمَرَ فِي النَّارِ إِلَى أَرْنَبَتِهِ مَعَ إِجْرَاءِ الْعَذَابِ، وَمِنْهُمْ مَنْ هُوَ فِي النَّارِ إِلَى صَدْرِهِ مَعَ إِجْرَاءِ الْعَذَابِ، وَمِنْهُمْ مَنْ قَدِ اغْتَمَرَ فِي النَّارِ ". قَالَ عَفَّانُ : " مَعَ إِجْرَاءِ الْعَذَابِ قَدِ اغْتَمَرَ ".
حكم الحديث: إسناده صحيح على شرط مسلم
நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவர், நெருப்பாலான இரு காலணிகளை அணி(விக்கப்படு)வார். உடலின் மற்ற பாகங்களும் வேதனையை அனுபவிப்பதோடு, அந்தக் காலணிகளின் வெப்பத்தால் அவரது மூளை (தகித்துக்) கொதிக்கும். அவர்களுள் சிலர் கணுக்கால் வரை - உடலின் மற்ற பாகங்களும் வேதனையை அனுபவிப்பதோடு- வேதனை செய்யப்படுவார்கள்.
அவர்களுள் சிலர் முட்டுக்கால் வரை - உடலின் மற்ற பாகங்களும் வேதனையை அனுபவிப்பதோடு- வேதனை செய்யப்படுவார்கள்.
அவர்களுள் சிலர் மூக்குநுனி வரை - உடலின் மற்ற பாகங்களும் வேதனையை அனுபவிப்பதோடு-
வேதனை செய்யப்படுவார்கள்.
அவர்களுள் சிலர் நெஞ்சு வரை - உடலின் மற்ற பாகங்களும் வேதனையை அனுபவிப்பதோடு-
வேதனை செய்யப்படுவார்கள். மேலும் அவர்களுள் சிலர் (முற்றிலும்) நெருப்புக்குள் மூழ்கிவிடுவார்கள். என்று நபி ஸல் கூறியதாக அபூ சையத் அல் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்னத் அஹ்மத் 11100 தரம் : ஸஹீஹ்

Like
Comment
Share

வித்ர் தொழுகை

                                                                                                                                                                                                                                                                                                                                                வித்ர் தொழுகை

ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் வித்ர் தொழுகை கடமையே ஜந்து ரக்அத்கள் தொழ விரும்புபவர் அதை நிறைவேற்றலாம்.
மூன்று ரக்அத்கள் தொழ விரும்புபவர் அதை நிறைவேற்றலாம் ( குறைந்தது ) ஒரு ரக்அத் வித்ர் தொழ விரும்புபவர் அதை நிறைவேற்றலாம் என்று நபி ஸல் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்ஸாரீ ( ரலி) அறிவிக்கிறார்கள்
நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 1422 தரம் : ஸஹீஹ்