Thursday, 30 January 2020

யா அல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! ! !

யா அல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! 

اَللَّهُمَّ أَلْهِمْنِيْ رُشْدِيْ، 

وَقِنِيْ شَرَّ نَفْسِيْ.

யா அல்லாஹ்! 

எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக!

 என் ஆத்மாவின் கெடுதிகளிலிருந்து என்னைக் காத்தருள்வாயாக!

 (திர்மிதி)

Tuesday, 28 January 2020

நன்றி உள்ள அடியானாக இருக்க ஆசைப்படுவது ...

நன்றி உள்ள அடியானாக இருக்க ஆசைப்படுவது ...

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ وَالْعَزِيمَةَ عَلَى الرُّشْدِ

 وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ وَحُسْنَ عِبَادَتِكَ

 وَأَسْأَلُكَ قَلْبًا سَلِيْمًا وَلِسَانًا صَادِقًا 

وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ

 وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ.

 (نسائي)

யா அல்லாஹ்!

 (சகல நல்ல) காரியங்களில் நிலைத்திருப்பதையும், 
நேர்வழியில் உறுதியையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

 இன்னும் உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திடவும் உன்னை அழகிய முறையில் வணங்கிடவும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

 தூய்மையான உள்ளத்தையும் உண்மை உரைக்கும் நாவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

 உனக்குத் தெரிந்த நலவுகளை (எல்லாம்) கேட்கின்றேன். உனக்குத் தெரிந்த எல்லா கெடுதிகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

 உனக்குத் தெரிந்த (எல்லாப்) பாவங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

 (நஸாயி)

Monday, 27 January 2020

பேராசை ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பு தேடுவது ...

பேராசை ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பு தேடுவது ...

أَعُوْذُ بِكَ مِنْ طَمَعٍ يَهْدِي إِلَى طَبْعٍ.

யா அல்லாஹ்! 

உள்ளத்தில் முத்திரையிடப்படும் அளவிற்கு பேராசை ஏற்படுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

(ஷரஹுஸ்ஸுன்னா)

اََللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ 

مِنْ مُنْكَرَاتِ الْأَخْلاَق

ِ وَالْأَعْمَالِ وَالْأَهْوَاءِ.

 யா அல்லாஹ்!

 கெட்ட ஆசைகள், 

கெட்ட செயல்கள் 

இன்னும் வெறுக்கத்தக்க குணங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

(திர்மிதி)

விஷஜந்துக்களால் தீண்டப்பட்டு இறப்பதை விட்டும் பாதுகாப்புத் தேடுவது ...

விஷஜந்துக்களால் தீண்டப்பட்டு  இறப்பதை விட்டும்  பாதுகாப்புத் தேடுவது ..

اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ 

مِنَ الْهَدْم
ِ وَالتَّرَدِّي 
وَالْهَرَمِ
 وَالْغَرَقِ 
وَالْحَرِيْقِ 

وَأَعُوْذُ بِك
َ أَنْ يَتَخَبَّطَنِيَ الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ 

وَأَنْ أُقْتَلَ فِيْ سَبِيْلِكَ مُدْبِرًا وَأَنْ أَمُوْتَ لَدِيْغًا.

 யா அல்லாஹ்! 

(ஏதேனும்) இடிந்து விழுவதிலிருந்தும்,

 உயரத்திலிருந்து கீழே விழுவதிலிருந்தும், 

முதுமையிலிருந்தும், 

நீரில் மூழ்குவதிலிருந்தும்,

 எரிந்து இறப்பதை விட்டும்

 நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

 மரண நேரத்தில் ஷைத்தான் என்னைத் தீண்டுவதை விட்டும் 
நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

 உன் பாதையிலே புறமுதுகு காட்டி கொல்லப்படுவதை விட்டும்

 (விஷஜந்துக்களால்) கொட்டப்பட்டு இறப்பதை விட்டும் 

நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.

 (அஹ்மத்)

அல்லாஹ்வுடைய கோபம் நம் மீது வராமல் பாதுகாவல் தேடுவது ...

அல்லாஹ்வுடைய கோபம் நம் மீது வராமல் பாதுகாவல் தேடுவது ...

اََللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِك

َ مِنْ زَوَالِ نِعْمَتِكَ،

 وَتَحَوُّلِ عَافِيَتِكَ،

 وَفُجَاءَةِ نِقْمَتِكَ،

 وَجَمِيْعِ سَخَطِكَ.

. யா அல்லாஹ்!

 உன் அருட்கொடைகள் (என்னைவிட்டு) நீங்குவதை விட்டும்,

 நீ (எனக்கு) அளித்த ஆரோக்கியத்தன்மை (என்னை விட்டு) மாறுவதை விட்டும், 

உனது திடீர் தண்டனையை விட்டும்,

 உன்னுடைய (சகலவிதமான) கோபங்களை விட்டும் 

நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

 (முஸ்லிம்)

நான் செய்த செய்யாத பாவங்களிலிருந்து பாதுகாவல் தேடுவது ...

நான் செய்த செய்யாத பாவங்களிலிருந்து பாதுகாவல் தேடுவது ...

َاَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ،

 وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ.

 யா அல்லாஹ்!

 நான் செய்த மற்றும் செய்யாத கெட்ட செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

 (முஸ்லிம்)

ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனையிலிருந்து பாதுகாவல் தேடுவது ...

ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனையிலிருந்து  பாதுகாவல் தேடுவது ...

اَللَّهُمَّ آتِ نَفْسِيْ تَقْوَاهَا،

 وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا،

 أَنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا،

 اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ 

مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ، 

وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ،

 وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ،

 وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا.

. யா அல்லாஹ்! என் உள்ளத்தில் இறையச்சத்தை ஏற்படுத்துவாயாக!

 இன்னும் அதனைத் தூய்மைப் படுத்துவாயாக!

 நீயே அதனைத் தூய்மைப் படுத்துபவர்களில் மிகச் சிறந்தவன்!

 அதனுடைய பொறுப்பாளனும் தலைவனும் நீயே! 

யா அல்லாஹ்! 

பிரயோஜனம் இல்லாத அறிவு,

 பயப்படாத உள்ளம்,

 திருப்தியடையாத மனம் மற்றும் ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்

.(முஸ்லிம்),

யா அல்லாஹ் உன் மார்க்கத்தை விளங்க வைப்பாயாக ...

யா அல்லாஹ்  உன் மார்க்கத்தை விளங்க வைப்பாயாக ...

اََللَّهُمَّ أَصْلِحْ لِيْ دِيْنِيْ،

 وَوَسِّعْ لِيْ فِيْ دَارِيْ،

 وَبَارِكْ لِيْ فِيْ ِرزْقِيْ.

யா அல்லாஹ்! என் மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக! 

என் வீட்டை எனக்கு நீ விஸ்தீரணப்படுத்துவாயாக! 

என் உணவில் நீ அருள்புரிவாயாக!.

(முஸன்னப் இப்னு அபீ ஷைபா)

யா அல்லாஹ் ! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! !!

யா அல்லாஹ் ! எனக்கு  நேர்வழி காட்டுவாயாக! 

اَللَّهُمَّ اهْدِنِي
ْ لِأَحْسَنِ الْأَعْمَال
ِ وَأَحْسَنِ الْأَخْلاَق

ِ لاَ يَهْدِي لِأَحْسَنِهَا إِلاَّ أَنْتَ

 وَقِنِيْ سَيِّئَ الْأَعْمَال

ِ وَسَيِّئَ الْأَخْلَاق

ِ لاَ يَقِي سَيِّئَهَا إِلاَّ أَنْتَ.

யா அல்லாஹ்! 

நல் அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் உன்னைத் தவிர வேறு யாரும் நேர்வழி காட்டமுடியாதே, 

அத்தகைய நல் அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் எனக்கு நீ நேர்வழி காட்டுவாயாக! 

கெட்ட அமல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்து உன்னைத்தவிர (வேறு) யாரும் என்னை பாதுகாக்க முடியாதே, 

அத்தகைய கெட்ட செயல்கள்; மற்றும் கெட்ட குணங்களிலிருந்தும் என்னை (தடுத்து) பாதுகாப்பாயாக! 

(திர்மிதி)

ஐந்து வக்து தொழுகைக்குப்பின் ஐந்து காரியங்களிலிருந்து பாதுகாவல் தேடுவது ...

ஐந்து வக்து தொழுகைக்குப்பின் ஐந்து காரியங்களிலிருந்து பாதுகாவல் தேடுவது ...

اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ 

مِنَ الْبُخْلِ

 وَأَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ

 وَأَعُوْذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُر

ِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا

 وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ.

 யா அல்லாஹ்!

 கஞ்சத்தனத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்,

 இன்னும் கோழைத்தனத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்,

 இன்னும் தள்ளாத முதுமை வரை உயிர் வாழ்வதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். 

உலகத்தின் குழப்பத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்,

 கப்ருடைய வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.

 (புகாரி)

யா அல்லாஹ் ! உன் திருமுகத்தைப் பார்ப்பதில் அடையும் பேரின்பத்தையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். . .

யா அல்லாஹ் ! உன் திருமுகத்தைப் பார்ப்பதில் அடையும் பேரின்பத்தையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். 

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكُ الرِّضَى بَعْدَ الْقَضَاءِ وَبَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ وَلَذَّةَ النَّظَرِ فِي وَجْهِكَ الْكَرِيم

ِ وَشَوْقًا إِلَى لِقَائِكَ مِنْ غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ وَلا فِتْنَةٍ مُضِلَّةٍ ، 

أَعُوذُ بِك

َ اللَّهُم

َّ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَعْتَدِيَ أَوْ يُعْتَدَى عَلَيَّ أَوْ أكْسِبَ خَطِيئَةً مُخْطِئَةً أَوْ ذَنْبًا لا يُغْفَرُ.

. விதியை பொருந்திக் கொள்ளும் தன்மையையும் மரணத்திற்குப் பின் குளிர்ந்த (சொர்க்க) வாழ்வையும், வழிகெடுக்கும் குழப்பத்திலும் தீய விளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டுவிடாது உன்னைச் சந்திப்பதின் ஆசையையும் உன் திருமுகத்தைப் பார்ப்பதில் அடையும் பேரின்பத்தையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

 நான் யாருக்கும் அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது யாராவது எனக்கு அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது நான் அத்துமீறுவதிலிருந்தும் அல்லது யாராவது என்மீது அத்துமீறுவதிலிருந்தும் அல்லது மன்னிக்கப்படாத தவறு மற்றும் பாவத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

 (தப்ரானி)

உலகம் முழுவதும் நலவை நாடுவது ...

உலகம் முழுவதும்  நலவை நாடுவது  ...

اَللَّهُمَّ اجْعَلْ أَوَّلَ هَذَا النَّهَارِ صَلاَحًا

 وَأَوْسَطَهُ فَلاَحًا

 وَآخِرَهُ نَجَاحًا،

 وَأَسْأَلُكَ خَيْرَ الدُّنْيَا

 يَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ.

 யா அல்லாஹ்! 

இந்த பகலின் ஆரம்பத்தைச் சீர்திருத்தம் உள்ளதாகவும்

 அதன் நடுவை வெற்றியுள்ளதாகவும்

 அதன் கடைசியை லாபம் உள்ளதாகவும் ஆக்கியருள்வாயாக!

 அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! 

உலக நலவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

 (முஸன்னஃப் இப்னு அபீஷைபா)

கவலை, துயரம், இயலாமை, சோம்பலை விட்டும் பாதுகாவல் தேடுவது ...


கவலை, துயரம், இயலாமை, சோம்பலை விட்டும் பாதுகாவல் தேடுவது ...
اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذَ بِكَ
مِنَ الْهَم
ِّ وَالْحَزَنِ،

وَالْكَسَلِ،
وَالْبُخْلِ 
وَالْجُبْنِ،

وَضَلَعِ الدَّيْن
ِ وَغَلَبَةِ الرِّجَالِ
யா அல்லாஹ்!
கவலை,
துயரம்,
இயலாமை,
சோம்பல்,
கஞ்சத்தனம்,
கோழைத்தனம்,
கடனின் சுமை
மற்றும் மனிதனின் ஆதிக்கம்
அனைத்தை விட்டும் நிச்சயம் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
(புகாரி :6363 )

Sunday, 26 January 2020

எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகின்றேன் ...

எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை விட்டும்  அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகின்றேன் ..

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ اْلعَفْوَ وَالْعَافِيَةَ فِيْ دِيْنِيْ وَ دُنْيَايَ وَأَهْلِيْ وَمَالِِيْ،

 اَللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِيْ وَآمِنْ رَوْعَاتِيْ،

 اَللَّهُمَّ احْفَظْنِيْ مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِىْ، وَعَنْ يَمِيْنِيْ وَعَنْ شِمَالِيْ وَمِنْ فَوْقِيْ،

 وَأَعُوْذُ بِعَظْمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِيْ.

 யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் நலனையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

 யாஅல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைப்பாயாக! 

யாஅல்லாஹ்! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தந்தருள்வாயாக!

 யாஅல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலது புறமிருந்தும் இடது புறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக! 

எனக்கு கீழ்புறத்திலிருந்து நான் எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை உன் வல்லமையைக் கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.

(அபூதாவூத்)

யாஅல்லாஹ் ஆரோக்கியத்தைத் தந்தருள்வாயாக! ! !

யாஅல்லாஹ் ஆரோக்கியத்தைத் தந்தருள்வாயாக! ! !

اَللَّهُمَّ عَافِنِيْ فِيْ بَدَنِيْ،

 اَللَّهُمَّ عَافِنِيْ فِيْ سَمْعِيْ،

 اَللَّهُمَّ عَافِنِيْ فِيْ بَصَرِيْ،

لاَ اِلَهَ إِلاَّ أَنْتَ.

 யாஅல்லாஹ்! எனது உடலில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக!

 யாஅல்லாஹ்! எனது செவிப்புலனில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக!

 யாஅல்லாஹ்! எனது பார்வையில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! 

யாஅல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. 

(அபூதாவூத்)

வறுமையை விட்டும் பாதுகாவல் தேடுவது ...

வறுமையை விட்டும்  பாதுகாவல் தேடுவது ...

اَللََّّهُمَّ إِنِّيْ أعُوْذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ،

 اَللََّّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ،

 لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ،

 யா அல்லாஹ்! இறைநிராகரிப்பை விட்டும் வறுமையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

 யா அல்லாஹ்! மண்ணறையின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

 வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை.

 (அபூதாவூத்)

தலைவலிக்கு மருதாணியே சிறந்த மருந்து...

தலைவலிக்கு மருதாணியே சிறந்த மருந்து:

أنَّ النبى صلى الله عليه وسلم كان إذا صُدِع، غَلَّفَ رأسَه بالحنَّاءِ، ويقول: "إنَّهُ نافعٌ بإذنِ الله من الصُّداعِ (ابن ماجه)

'நபி (ஸல்) அவர்களுக்கு தலைவலி ஏற்பட்டால், மருதாணியை தலையில் பத்துபோடுவார்கள் மேலும், அல்லாஹ்வின் நாட்டத்தின் படி மருதாணி தலைவலிக்கு பலன் தரும் என்றும் கூறுவார்கள்'

(இப்னுமாஜா)

வெட்டு காயத்திற்கு மருதாணியே சிறந்த மருந்தாகும்...

வெட்டு காயத்திற்கு மருதாணியே சிறந்த மருந்தாகும்:

عَنْ عَلِيِّ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ جَدَّتِهِ سَلْمَى, وَكَانَتْ تَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: مَا كَانَ يَكُونُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرْحَةٌ وَلَا نَكْبَةٌ, إِلَّا أَمَرَنِي رَسُولُ اللَّهِ 
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَضَعَ عَلَيْهَا الْحِنَّاء

َ (ترمذى- 2054, ابن ماجه-3502)  

அலி பின் உபைதுல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்: 

'ஸல்மா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்துக்கொண்டிருந்தார்கள். நபியவர்களுக்கு (வாளால்ஏற்பட்ட) வெட்டு காயம், (கல் அல்லது முள்ளால் ஏற்பட்ட) காயம் இவை போன்றவைகளுக்கு மருதாணியை அதில் தடவுமாறு எனக்கு சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று கூறினார்கள்';.

 (திர்மிதி-2054, இப்னுமாஜா-3502)

மருதாணி இலை நாசினி. கண்ணுக்குப் புலப்படாத பல கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.

 புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. 

கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.

 மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.  ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும். இதன் வேர்ப்பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும். இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும். இரும்பு வாணலில் தேங்காய், நெய் 500 மி.லிட்டர் விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திற்காக 10 கிராம் சந்தனத்தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைத்த் தேய்க்க முடி வளரும் நரைமாறும். ஆறாத வாய்ப்புண், அம்மைப்புண் ஆகியவற்றிகு இதன் இலையை அரைத்து  நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம்.

அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம். பவுடராக வரும் இந்த மருதாணியில் எந்த அளவு அதன் மருத்துவ குணங்கள் அழிக்கபடாமல் வரும் என்பது கேள்விக்குறியே. முடிந்த அளவு மருதாணி இலைகளை பறித்து உபயோகித்துப் பாருங்கள்.

தேள்கடி விஷத்திற்கு உப்பு தண்ணீர் சிறந்த மருந்தாகும்....

தேள்கடி விஷத்திற்கு உப்பு தண்ணீர் சிறந்த மருந்தாகும்:

عنَ عَلىٍّ قاَلَ: بَيْناَ رَسُولُ اللهِ صَلىَّ اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذاَتَ لَيْلَةٍ يُصَلىِّ, فَوَضَعَ يَدَهُ عَلىَ الْاَرْضِ فَلَدَغَتْهُ عَقْرَبٌ, فَناَوَلهَاَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَليَهْ وَسَلَّمَ بِنَعْلِهِ فَقَتَلَهاَ. فَلَماَّ اِنْصَرَفَ قاَلَ: "لَعَنَ اللهُ الْعَقْرَبَ, ماَ تَدْعُ مُصَلِّياً وَلاَ غَيْرَهُ – اَوْ نَبِياًّ وَغَيْرَهُ" ثُمَّ دَعاَ بِمِلْحٍ وَماَءٍ, فَجَعَلَهُ فِى اِناَءٍ, ثُمَّ جَعَلَ يَصُبُّهُ عَلىَ اِصْبَعِهِ حَيْثُ لَدَغَتْهُ وَيَمْسَحُهاَ وَيُعَوِّذُهاَ بِالمْعُوِّذَتَيْن

ِ  (بيهقى-2575)

அலி (ரலி) அறிவிக்கிறார்கள்: 'ஒரு நாள் இரவு நபி (ஸல்) அவர்களோடு தொழுதுகொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள் தமது கையை தரையில் வைத்தபோது ஒரு தேள் அவர்களை கடித்துவிட்டது. அதை தனது காலால் பிடித்து கொண்றுவிட்டார்கள். பிறகு, எங்கள் பக்கம் திரும்பி, தேளை அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அது தொழகையாளியையோ மற்றவர்களையோ அல்லது நபியையோ மற்றவர்களையோ (கடிக்காமல்) விட்டு வைப்பதில்லை எனக்கூறினார்கள். பிறகு, உப்பையும் (சிறிது) தண்ணீரையும் கேட்டார்கள். அவையினை ஒரு பாத்திரத்தில் போட்டு (கரைத்து அந்த உப்புநீரை தேள் கடித்த) விரலின் மீது ஊற்றி நன்கு தேய்த்தார்கள். அதோடு சூரத்துல் முஅவ்விததைனைக் (குல் அவூது பிரப்பில் ஃபலக், குல் அவூது பிரப்பின் நாஸ் ஆகிய இரண்டு சூராவையும் ஓதியதைக்) கொண்டு பாதுகாவல் தேடினார்கள்';.

 (பைஹகி-2575)

கண்பார்வை தெளிவுக்கும் இமை நன்கு வளரவதற்கும் சுர்மா மருந்தாகும்...

கண்பார்வை தெளிவுக்கும் இமை நன்கு வளரவதற்கும் சுர்மா மருந்தாகும்:

عَنْ ابْنِ عَبَّاسٍ, أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اكْتَحِلُوا بِالْإِثْمِدِ, فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعْرَ. (ترمذى, 1757, ابوداود-3878)

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:

 'அஞ்சனக் (சுர்மா) கல்லால் அஞ்சனமிட்டு(சுர்மாயிட்டு)க்
கொள்ளுங்கள். அது கண்பார்வையைத் தெளிவாக்கும். இமையை முளைக்க வைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'.

 (திர்மதி-1757, அபூதாவூது-3878)

கண் வலி, கண் வீக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட கண் நோய்களுக்கு அஞ்சனம் அல்லது சுர்மா (Antimony) சிறந்த நிவாரணிகும். அஞ்சனக் கல்லை  உரசி, அதிலிருந்து வரும் தூளைக் கண்ணின் கீழ்பாகத்தில் தேய்த்துக்கொள்வது கண் நோய்க்கு நல்லது.

கடுமையான உஷ்ண காய்ச்சலுக்கு குளிர்ந்த நீரே மருந்தாகும்...

கடுமையான உஷ்ண காய்ச்சலுக்கு குளிர்ந்த நீரே மருந்தாகும்:

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ, فَأَطْفِئُوهَا بِالْمَاءِ (بخارى)

இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்:
'காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணியுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'.

 (புகாரி-5723)

சில வகைக் காய்ச்சல்கள் கடுமையாகும்போது பனிக்கட்டியை அல்லது குளிந்த நீரில் தோய்த்த துணியை நோயாளியின் நெற்றியில் வைத்து உஷ்ணத்தை தணிக்குமாறு மருத்துவர்கள் கூறுகிறார்கள். காய்ச்சல் கண்டவர்கள் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பது இந்த நபிமொழியின் கருத்தன்று. காய்ச்சல் எந்த வகையானது? அது எத்தனை டிகிரி உள்ளது? அதைக் குளிர்ந்த நீரால், அல்லது பணிக்கட்டியால் எந்த முறையில் தணிக்கலாம் என்பதையெல்லாம் அறிந்த மருத்துவர்களின் பரிந்துரைக்கேற்ப செயல்பட வேண்டும் என்பதே இங்கு கருத்தாகும். 

(ஃபத்ஹுல் பாரி)

ஈ விழுந்த பொருட்களுக்கு மருந்து என்ன?

ஈ விழுந்த பொருட்களுக்கு மருந்து என்ன?

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا وَقَعَ الذُّبَابُ فِي إِنَاءِ أَحَدِكُمْ, فَلْيَغْمِسْهُ كُلَّهُ, ثُمَّ لِيَطْرَحْهُ فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ شِفَاءً, وَفِي الْآخَرِ دَاءً 

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:

 'உங்கள் பாத்திரத்தில் 'ஈ' விழுந்துவிட்டால், அதை முழுமையாக அமிழ்த்தி எடுங்கள். பிறகு அதை எடுத்தெறிந்துவிடுங்கள். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் (அந்நோயிக்கு) நிவாரணமும் இருக்கிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'

. (புகாரி-5782)

ஈயின் ஒரு இறக்கையில் விஷமும், மற்றொன்றில் விஷமுறிவும் உண்டு. அது உணவுப்பொருட்களில் வந்து அமரும்போது விஷமுள்ள இறக்கையை அமிழ்த்துவதால் விஷமுறிவுள்ள மற்றோர் இறக்கையையும் நாம் அமிழ்த்துவிட்டால் நிவாரணம் கிடைத்துவிடும். விஷமுள்ள இறக்கை ஈயின் இடப் பக்கத்திலும், விஷமுறிவு வலப்பக்கத்திலும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

 (ஃபத்ஹுல் பாரி)

Saturday, 25 January 2020

ஒவ்வாமைக்கு ஒட்டகப் பால்...

ஒவ்வாமைக்கு ஒட்டகப் பால்:

عَنْ أَنَسٍ أَنَّ نَاسًا كَانَ بِهِمْ سَقَمٌ, قَالُوا يَا رَسُولَ اللَّهِ! آوِنَا وَأَطْعِمْنَا. فَلَمَّا صَحُّوا قَالُو: إِنَّ الْمَدِينَةَ وَخِمَةٌ فَأَنْزَلَهُمْ الْحَرَّةَ فِي ذَوْدٍ لَهُ فَقَالَ اشْرَبُوا أَلْبَانَهَا (بخارى-5685)

அனஸ் (ரளி) அறிவிக்கிறார்கள்:

 (மதீனா வந்த 'உக்ல்' மற்றும் 'உரைனா' குலத்து) மக்கள் சிலருக்கு நோய் ஏற்பட்டது. அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு அடைக்கலம் அளித்து உணவும் அளியுங்கள்' என்று கேட்டனர்.

 (அவ்வாறே அவர்களுக்கு அடைக்கலம் தந்து உணவும் அளிக்கப்பட்டது.

 பசிப்பிணி நீங்கி) அவர்கள் நலம் பெற்றபோது 'மதீனா(வின் தட்பவெப்ப நிலை) எங்களுக்கு ஒத்துவரவில்லை' என்று கூறினர்.

 அவர்களை நபி (ஸல்) அவர்கள் பாறைகள் நிறைந்த 'அல்ஹர்ரா' எனும் இடத்தில் தம் ஒட்டகங்கள் சிலவற்றுடன் தங்கச்செய்து, 'இவற்றின் பாலை அருந்துங்கள்' என்று கூறினார்கள்.

 (புகாரி-5685)

சர்க்கரை வியாதியை ஒட்டகப்பால் குறைக்குமென புதியதொரு ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.

 பிகானரியிலுள்ள 'டயபட்டிக்ஸ் அன்ட் கேர் ரிசர்ச் சென்டரில்' (Diabetes And Care Research Center) பணியாற்றும் மருத்துவர் ராஜேந்திர அகர்வாள் நடத்திய இது தொடர்பான ஆய்வில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது. 

எகிப்திலுள்ள 'கெய்ரோ பல்கலை கழகத்தில்' 54 சர்க்கரை நோயாளிக்கு நடத்திய ஆய்விலும் ஒட்டகப்பால் சர்க்கரை நோயைக் குணமாக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.

 இன்சுலின் ஊசி மருந்து தினசரி உபயோகித்துக்கொண்டிருந்த 27 பேருக்குத் தினசரி அரை லிட்டர் ஒட்டகப்பால் கொடுத்து சோதிக்கப்பட்டது. இந்த 27 பேருக்கும் சர்க்கரை வியாதி நாளுக்கு நாள் குறைந்து வருவது உறுதியானது. 

ஒட்டகப்பால் குடிக்காத மற்ற 27 நோயாளிகளின் நோயில் மாற்றமில்லை.

 ஒட்டகப்பாலில் இரும்பு, துத்தநாகம், தாமிரம் முதலான தனிமங்களும் வைட்டமின் ஊ யும் அதிக அளவில் அடங்கியுள்ளது.

 'கெய்ரோ நேசனல் நியூட்ரீசியன் இன்ஸ்டிடியூட்டில்' நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இப்புதிய கண்டுபிடிப்புக்கும் அரபு நாடுகளில் வசிப்போருக்குச் சர்க்கரை நோய் அதிக அளவில் இல்லாமல் இருப்பதற்கும் தொடர்பிருக்கலாம் என்ற கருத்து வலுவாகியுள்ளது.

அடிநாக்கு அழற்சிக்கும் விலா வலிக்கும் கோஷ்டக் குச்சி...

அடிநாக்கு அழற்சிக்கும் விலா வலிக்கும் கோஷ்டக் குச்சி:

عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ قَالَتْ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: عَلَيْكُمْ بِهَذَا الْعُودِ الْهِنْدِيِّ, فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ. يُسْتَعَطُ بِهِ مِنْ الْعُذْرَةِ, وَيُلَدُّ بِهِ مِنْ ذَاتِ الْجَنْبِ (بخارى-5692)

உம்மு கைஸ் பின் மிஹ்ஸன் (ரளி) அறிவிக்கிறார்கள்: '

நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள்.

 ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன.

 அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணையில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். (மார்புச் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலிக்கு அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாக கொடுக்கப்படும்.

 (புகாரி-5692)

நறுமணப் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படும் ஒரு வகை மரமே (ஊது) கோஷ்டம் அல்லது கோட்டம் (Costus Root) என்பது. இம்மரம் இமய மலையின் வடமேற்கு நாடுகளில் பயிராகிறது. 

இது இரு வகைப்படும்.

 1. இந்தியக் கோஷ்டம் (செய் கோஷ்டம்). இது கறுப்பாகவும் அதிக வெப்பமுள்ளதாகவும் இருக்கும். 

2. கடல் கோஷ்டம் (வெண்கோஷ்டம்). இது வெண்மையானதாக இருக்கும். இதன் குச்சியில் நெருப்பிட்டு வாசனைப் புகை பிடிக்கலாம். இதை ஊறவைத்து அதன் சாற்றைத் தண்ணீர், அல்லது தேனுடன் குடிக்கலாம். இதைத் தேய்த்து பத்துப் போடவும் செய்யலாம். இதைப் பொடியாக்கி அதன் தூளைப் பயன்படுத்தவதும் உண்டு. கோஷ்டத்தால் அநேக மருத்துவப் பலன்கள் உள்ளன. 

இந்த ஹதீஸில், கோஷ்டத்தில் ஏழு வகை நிவாரணங்கள் உள்ளதாக நபி (ஸல்) அவர்கள் தெரிவிக்கிறார்கள். தொண்டை வலிக்கும், மார்புச் சதை வாதத்தால் ஏற்படும் விலா வலிக்கும் (Pleurodynia) கோஷ்டம் நிவாரணியாகும்.

மாதவிடாய் போக்கையும் சிறுநீர் ஓட்டத்தையும் கோஷ்டம் சீராக்கும். குடற்புழுக்களைக் கொல்லும், விட்டுவிட்டு வரும் காய்ச்சல் (Quartan Fever), தோலைச் சிவக்க வைக்கும் கடுமையான காய்ச்சல் (Rose Fever) ஆகியவற்றுக்கும் கோஷ்டம் சிறந்த நிவாரணியாகும். 

இரப்பையைச் சூடாக்கிச் சீர்படுத்தும், முகப்பரு மற்றும் தேமலைப் போக்கும்.

 (நூல்: ஃபத்ஹுல் பாரி) 

கோஷ்ட வேரை மென்றாலோ, காய்ச்சி வாய் கொப்பளித்தாலோ, வாய் நாற்றம் அகலும். நீருடன் கலந்து அதை அருந்தினால் நுரையீரல் வலி, விலா வலி, குடற்புண் ஆகியவற்றுக்கு நல்லது. 5 கிராம் அளவு கோஷ்ட வேரைச் சாப்பிட்டால் இரைப்பை அழற்சிக்கு நிவாரணம் கிடைக்கும்.

 (நூல்: உம்ததுல் காரீ)

மன்னு (சமையல் காளான்) கண்ணுக்கு நல்லது...

மன்னு (சமையல் காளான்) கண்ணுக்கு நல்லது:

سَعِيدَ بْنَ زَيْدٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: الْكَمْأَةُ مِنْ الْمَنِّ, وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ

 (بخارى-5708, ترمذى-1268, ابن ماجه-3455, احمد-2:511)

சயீது பின் ஜைது (ரளி) அறிவிக்கிறார்கள்: 

'சமையல் காளான் 'மன்னு'வகையைச் சேர்ந்தது ஆகும். 

அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்

 என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 (புகாரி-5708, திர்மிதி-1268, இப்னுமாஜா-3455, அஹ்மது-2:511)

'மன்னு' (Manna) என்பது பாலைவிட வெண்மையானதும் தேனைவிட இனிமையானதுமான பனிக்கட்டி போன்றதொரு சுவையான உணவுப் பொருளாகும்.

 இது 'தீஹ்' எனும் பாலை வெளியில் பல்லாண்டு காலம் நாடோடிகளாக அலைந்து தரிந்துக்கொண்டிருந்த இஸ்ரவேலர்களுக்கு இலவசமாக இறைவன் வழங்கிய உணவாகும்.

 இது கண் நோய்க்கு நிவாரணியாகும்

 என்ற கருத்து ஹதீஸை அடிப்படையாகக் கொண்டதாகும்.

 'சமையல் காளான் (Truffle) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். 

சமையல் காளானின் சாறு கண் நோய்க்கு நிவாரணியாகும்' 

என இந்த ஹதீஸ் கூறுகிறது.

 அதாவது, 'மன்னு' எனும் உணவு இஸ்ரவேலர்களுக்கு இலவசமாகக் கிடைத்ததைப் போன்றே காளான் வகையும் இலவசமாகக் கிடைக்கிறது.

 அல்லது இஸ்ரவேலர்களுக்குக் கிடைத்துவந்த 'மன்னு' வகை உணவுகளில் சமையல் காளானும் ஒன்றாகும்.

 நீர்வளம் குறைந்த மணல் பிரதேசமான 'தீஹ்' பகுதியில் காளான் அதிகம் முளைத்தது. அதை எடுத்து அவர்கள் சமைத்து உண்டார்கள்.

சமையல் காளானைப் பிழிந்து சாறு எடுத்து, அதைக் கண் நோய் மருந்துடன் கலந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் காளானின் இதழ்களை எடுத்து தீக்கங்கின்மேல் வைத்து அதன் சாறு சூடானபின், அஞ்சனக் (சுர்மா) குச்சியால் கண்ணுக்குத் தீட்டினால் கண்நோய் விலகும். 

அஞ்சனம் போன்றவற்றுடன் காளான் சாற்றைத் கலந்தே உபயோகிக்க வேண்டும் என்றும், தனியாகக் காளான் சாற்றை பயன்படுத்தலாகாது என்றும் சிலர் கூறுகின்றனர்.

 (ஃபத்ஹுல் பாரி)

இரத்தம் வழிவதை நிறுத்த சாம்பல் சிறந்த மருந்தாகும்...

இரத்தம் வழிவதை நிறுத்த சாம்பல் சிறந்த மருந்தாகும்:

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ قَالَ: لَمَّا كُسِرَتْ عَلَى رَأْسِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيْضَةُ, وَأُدْمِيَ وَجْهُهُ, وَكُسِرَتْ رَبَاعِيَتُهُ, وَكَانَ عَلِيٌّ يَخْتَلِفُ بِالْمَاءِ فِي الْمِجَنِّ, وَجَاءَتْ فَاطِمَةُ تَغْسِلُ عَنْ وَجْهِهِ الدَّمَ, فَلَمَّا رَأَتْ فَاطِمَةُ عَلَيْهَا السَّلَام الدَّمَ يَزِيدُ عَلَى الْمَاءِ كَثْرَةً, عَمَدَتْ إِلَى حَصِيرٍ فَأَحْرَقَتْهَا وَأَلْصَقَتْهَا عَلَى جُرْحِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ, فَرَقَأَ الدَّمُ

 (بخارى-5722)

சஹ்ல் பின் ஸஃது அஸ்ஸாயிதீ (ரளி) அறிவிக்கிறார்கள்:

 '(உஹுத் போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைக் கவசம் அவர்களது தலையில் வைத்தே உடை(த்து நொறு)க்கப்பட்டது.

 அவர்களுடைய முகத்தில் இரத்தம் வழிந்தது.

 அவர்களுடைய (முன்வாய்ப் பற்களில் கீழ் வரிசையில் வலப்புறப்) பல் ஒன்று உடைக்கப்பட்டது. 

அப்போது அலீ (ரளி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர் எடுத்து வந்து போய்க்கொண்டு இருந்தார்கள்.

 ஃபாத்திமா (ரளி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் முகத்திலிருந்த இரத்தத்தை கழுவிக்கொண்டிருந்தார்கள். 

இரத்தம் தண்ணீரையும் மீறி அதிகமாகக் கொட்டுவதைக் கண்ட ஃபாத்திமா (ரளி) அவர்கள் பாய் ஒன்றை எடுத்து, அதை எரித்து (அது சாம்பலானதும்) அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காயத்தின் மீது அழுத்தி  வைத்தார்கள். உடனே இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது'. 

(புகாரி-5722, இப்னுமாஜா-3464)

அக்காலத்தில், காயத்திலிருந்து வழியும் இரத்தத்தை உடனடியாக நிறுத்த அந்த இடத்தில் சாம்பலை வைப்பார்கள்.

 பொதுவாக சாம்பல் எதுவாயினும் உடனடியாக அது இரத்த ஓட்டத்தை நிறுத்திவிடும். 

பாயை எரித்து அதன் சாம்பலை வைப்பதே அக்கால வழக்கமாக இருந்துள்ளது.

 நறுமணக் கோரப்புல் வகையால் தயாரிக்கப்பட்ட பாயாக இருப்பின் இரத்தமும் நிற்கும்¢ நறுமணமும் கிடைக்கும். 

சாம்பலில் காய்வுத் தன்மை இருக்கும் அதே நேரத்தில் கரிக்கும் தன்மை குறைவாக உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

 (ஃபத்ஹுல் பாரி)

மரணத்தைத் தவிர எல்லா நோய்களுக்கும் கருஞ்சீரகம் நிவாரணம்...

மரணத்தைத் தவிர எல்லா நோய்களுக்கும் கருஞ்சீரகம் நிவாரணம்:

فَإِنَّ عَائِشَةَ حَدَّثَتْنِي أَنَّهَا سَمِعَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ هَذِهِ الْحَبَّةَ السَّوْدَاءَ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلَّا مِنْ السَّامِ, قُلْتُ: وَمَا السَّامُ قَالَ الْمَوْتُ (بخارى-5687, مسلم-2215, ترمذى-2041, ابن ماجه-3447, احمد-2:241)

காலித் பின் ஸயீது (ரளி) அறிவிக்கிறார்கள்: 

'ஆயிஷா (ரளி) அவர்கள் என்னிடம், நபி (ஸல்) அவர்கள் இந்தக் 'கருஞ்சீரகம்' எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்.

 'சாமை'த் தவிர என்று கூறியதை நான் கேட்டுருக்கிறேன். 'சாம் என்றால் என்ன?' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள். 

(புகாரி-5687, முஸ்லிம்-2215, திர்மிதி-2041, அஹ்மது-2:241)

கருஞ்சீரகம் (Black Cumin) எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் என நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். குறிப்பாக குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்குக் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். 

கருஞ்சீரகத்தை வறுத்து தூளாக்கி எண்ணையில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் மூன்று சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோசம் குணமாகும்.

 கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்கும் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும் கருஞ்சீரகத்தை தூளாக்கி, தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். 

மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.

 கருஞ்சீரகப் பொடியை ஒரு துண்டுத்துணியில் கட்டி உறிஞ்சுவது ஜலதோசத்திற்கு நல்லது.

 தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்து பொடியாக்கி உறிஞ்சிவந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 5 கிராம் கருஞ்சீரகத்தை தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும். 

கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தை காடியுடன் (Vineger) வேகவைத்து வாய் கொப்பளித்தால் பல்வலிக்கு நல்ல பலன் தரும்.

 (ஃபத்ஹுல் பாரி)

கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவது கருஞ்ஜீரகத்தின் தனிச்சிறப்பாகும்.

 காஞ்சிரைப் பூண்டின் சாறுடன் கருஞ்ஜீரகத்தை குழைத்துச் சாப்பிட்டால் நுண் கிருமிகள் வெளியேறிவிடும்.

 கருஞ்ஜீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதை தடுக்கலாம்.

 கருஞ்ஜீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். இவையன்றி நாய்க்கடி, மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கருப்பை வலி, சிரங்கு, கண்வலி போன்ற நோய்களுக்கும் கருஞ்ஜீரம் சிறந்த நிவாரணியாகும்.

 (உம்ததுல் காரி)

Thursday, 23 January 2020

பசும்பால் எல்லா நோய்களுக்கும் நிவாரணி....

பசும்பால் எல்லா நோய்களுக்கும் நிவாரணி:

عَن ِابْنِ مَسْعُوْدٍ رَضِىَ الله ُعَنْهُ, اَن َّالنَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قاَلَ:ماَ اَنْزَلَ اللهُ داَءً اِلاَّ وَاَنْزَلَ لَهُ دَواَءً,  جَهَلَهُ مَنْ جَهَلَهُ وَعَلِمَهُ مَنْ عَلِمَهُ, وَفِى اَلْباَنِ الْبَقَرِ شِفاَءٌ مِنْ كُلِّ دَاءٍ فَعَليَكْمُ ْبِاَلْباَنِ الْبَقَرِ فَاِنَّهاَ تَرْتِمُ مِنْ كُلِّ الشَّجَرِ. (مستدرك حاكم-7529,  مصنف عبد الرزاق-17144)

இப்னு மஸ்வூது (ரளி) அறிவிக்கிறார்கள்:

 'எந்த நோயையும் அதற்குரிய மருந்துடனேயேத்தவிர அல்லாஹ் படைக்கவில்லை. 

அந்த நிவாரணியை அறிந்தவர் அறிந்துக்கொண்டார். 

அறியாதவர் அறியாமையிலேயே இருக்கிறார். 

பசுமாட்டின் பாலில் அனைத்து நோய்களுக்கும் நிவாரணமிருக்கிறது.

 ஏனெனில், அது அனைத்து மரங்களின் இலைகளையும் சாப்பிடுகிறது எனவே, அதை அருந்துங்கள்' என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

 (முஸ்தத்ரக் ஹாக்கிம்-7529, முஸன்னஃப் அப்திர் ரஜ்ஜாக்-17144)

பால் சுவையான சத்துள்ள பானமாகும்.

 மனிதர்களின் முக்கிய உணவாகும்.

 வெள்ளாடு, செம்மறியாடு, பசுமாடு, எருமை, ஒட்டகம் போன்ற விலங்குகளிலிருந்து பால் கிடைக்கிறது.

 பால் என்பது கொழுப்புக் கரைசல், நீர்மப் புரதம், கரைந்த சர்க்கரை, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுக்கள், வைட்டமின் டீ உள்ளிட்ட வைட்டமின்கள் போன்றவை கலந்து குழம்பு நிலை திரவமாகும்.

 கொழுப்பு நீக்காத பாலில் சுமார் 3.5%; கொழுப்பு இருக்கிறது.

 இதை ஒரு கொள்கலத்திட்டு, பாலாடையைத் தனியாகப் பிரித்து, கொழுப்பு குறைவான (1-2%;) பால் தயாரிக்கலாம். 

நுண்மையான துளைகளின் வழியாகப் பீச்சப்படுவதால், கொழுப்புச் சத்து சமமாகப் பரவி, எளிதில் செரிக்கக்கூடிதாகப் பால் உள்ளது.

 பாலில் இருந்து வெண்ணைய், பாலாடைக்கட்டி, தயிர் போன்ற பால் பொருட்கள் கிடைக்கின்றன.

 (பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்)

வயிற்று வலிக்கு தேன் சிறந்த மருந்தாகும்...

வயிற்று வலிக்கு தேன் சிறந்த மருந்தாகும்:

عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَخِي يَشْتَكِي بَطْنَهُ, فَقَالَ: اسْقِهِ عَسَلًا. ثُمَّ أَتَى الثَّانِيَةَ فَقَالَ: اسْقِهِ عَسَلًا. ثُمَّ أَتَاهُ الثَّالِثَةَ فَقَالَ: اسْقِهِ عَسَلًا. ثُمَّ أَتَاهُ فَقَالَ: قَدْ فَعَلْتُ فَقَالَ: صَدَقَ اللَّهُ وَكَذَبَ بَطْنُ أَخِيكَ, اسْقِهِ عَسَلًا. فَسَقَاهُ فَبَرَأَ

 (بخارى-, مسلم-, ترمذى-, احمد-

அபூ ஸயீது (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்' என்று சொன்னார். முஹம்மது (ஸல்) அவர்கள், 'அவருக்கு தேன் ஊட்டுங்கள்' என்று சொன்னார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ந்து 'தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது' என்று கூறி)டவே, மீண்டும். முஹம்மது (ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று சொன்னார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர முஹம்மது (ஸல்) அவர்கள் அப்போதும், 'அவருக்கு தேன் ஊட்டுங்கள்' என்று சொன்னார்கள்.

பிறகு (நான்காம் முறை அவர் வந்து), '(தாங்கள் சொன்னதையே) நான் செய்தேன். (ஆனால் குணமாகவில்லை)' என்றார். அப்போது முஹம்மது (ஸல்) அவர்கள், '(தேனில் நிவாரணம் இருப்பதாக குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான். உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது. அவருக்கு தேன் ஊட்டுங்கள்' என்று சொன்னார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார்கள். அதையடுத்து அவர் குணமடைந்தார். 

(புகாரி-5684, முஸ்லிம்-2217, திர்மதி-2052, அஹ்மது-3:19)

தேன் ஓர் உணவாகவும் பயன்படும், மருந்தாகவும் பயன்படும். இந்த இரண்டு முறைகளிலும் தேனை நபி (ஸல்) அவர்கள் விரும்பிப் பயன்படுத்தியுள்ளார்கள்.

 தேன் இரத்த நாளங்களிலும் குடலிலும் சேர்கின்ற அழுக்குகளை அகற்றி, கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் உடையதாகும். 

இரைப் பையின் கசடுகளைக் கழுவி, அதை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும்.

 இருதயம், ஈரல் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தும். சிறுநீர் அடைப்பு மற்றும் மலச்சிக்கலைப் போக்கும்.

 கபத்தால் ஏற்படும் இருமல் போன்ற நோய்களுக்குத் தேன் ஒரு சிறந்த நிவாரணி ஆகும். 

தேனுடன் காடியையும் (Vineger) சேர்த்துக்கொண்டால், மஞ்சள் பித்தநீர் நோய்களுக்குச் சிறந்த மருந்தாக அமையும். 

விஷக்கடி, நாய்க்கடி போன்றவற்றுக்கும் தேன் ஒரு நிவாரணி ஆகும். மேலும் பல பயன்களும் தேனில் உண்டு. 

(ஃபத்ஹுல் பாரி)

மன உளைச்சலுக்கு (தல்பீனா) பால் பாயாசம்...

மன உளைச்சலுக்கு (தல்பீனா) பால் பாயாசம்:

عَنْ عُرْوَةَ, عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا كَانَتْ تَأْمُرُ بِالتَّلْبِينِ لِلْمَرِيضِ وَلِلْمَحْزُونِ عَلَى الْهَالِكِ وَكَانَتْ تَقُولُ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ التَّلْبِينَةَ تُجِمُّ فُؤَادَ الْمَرِيضِ, وَتَذْهَبُ بِبَعْضِ الْحُزْنِ (بخارى-

உர்வா பின் அஜ்ஜுபைர் (ரளி) அறிவிக்கிறார்கள்: 

'(என் சிறிய தாயார்) ஆயிஷா (ரளி) அவர்கள் நோயளிக்கும், இறந்துபோனவரை எண்ணி வருந்துபவருக்கும் 'தல்பீனா' (பால் பாயாசம்) தயாரித்துக் கொடுக்கும்படி பணித்துவந்தார்கள். 

மேலும், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'தல்பீனா நோயாளியின் உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்கும் & கவலைகளில் சிலவற்றை போக்கும்'

 என்று கூறக்கேட்டுள்ளேன்' என்பார்கள்.

 (புகாரி-5689)

'அத்தல்பீனா' என்பது மாவு, பால் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படும்
 பாயசம் அல்லது கஞ்சியாகும்.

 பாலுக்குப் பதிலாகத் தேன் சேர்க்கப்படுவதுமுண்டு.

 இதைக் கோதுமைக் குறுணையால் தயாரிப்பதே அக்கால வழக்கமாகும்.

 இது ஒரு மிருதுவான உணவாதலால் நோயாளிக்கு ஏற்றதாகும்.

 சூடாக இதை அருந்தினால் உடல் வெப்பம் சீரடைய இது உதவும்.

 நோயாளியானாலும், துக்கத்தில் இருப்பவரானாலும் அவர்களுக்கு உணவு குறைந்துவிடுவதால் இரப்பை உள்ளிட்ட உறுப்புகளில் காய்வு நிலை காணப்படும்.

 இந்தக் கஞ்சி ஈரத்தை ஏற்படுத்தி வலுவூட்டும்.

 அத்துடன் நோயாளியின் இரைப்பையில் சேர்ந்துவிடுகிற பித்த நீர், கபம் ஆகியவற்றை இது அழித்துவிடும்.

 (ஃபத்ஹுல் பாரி)

Wednesday, 22 January 2020

வாலிப பருவத்தில்....

அனைத்தையும் பிறிந்து கூட இருந்துவிடுவார்கள்,ஆனால் பேஸ்புக்கை ( Facebook ) பிரிந்து இவர்களால் இருக்க முடியாது...

ரப்புல் ஆலமீன் நமக்கு வழங்கிய  அருட்கொடைகளில் உடல் ரீதியிலான அருட்கொடைகள் மிக அதிகம். நாம் அந்த அருட்கொடைகளை சரியாக பயன் படுத்தும் தருணம் வாலிப பருவம் தான்.

மனித வாழ்க்கையின் மூன்று பருவங்களில் வாலிபமே உயர்ந்து நிற்கிறது.

காரணம்

சிறுவயது அறியாமைக்குச்சொந்தமானது,

 வயோதிகம் இயலாமைக்குச்சொந்தமானது,

இளமையே சாதனைக்குச்சொந்தமானதாகும்.

 உலகில் சாதனையாளர்களாக வலம்வருபவர்கள் தங்களின் சாதனைக்கான விதையை வாலிபத்தில் தான் தூவினார்கள்.

இதை அழகாக விவரிக்கிற அல்குர்ஆனின் வசனங்களை சற்று உற்றுநோக்கி கவனியுங்கள். 

الَّذِي خَلَقَكُم مِّن ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِن بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِن بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً
اللَّـهُ يَخْلُقُ مَا يَشَاءُ ۖ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ

அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின், பஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன்.

வாலிப பருவம் அல்லாஹ் நமக்கு அருளிய அனைத்து நிஃமத்துக்களும் முழுமையாக செயல்படும் பருவமாகும்.அதனால் தான் அல்லாஹ் அதை பலமிக்கது என்று வர்ணிக்கிறான்.

வாலிபம் பாக்கியமானது தான்,அதேசமயம் ஆபத்தானது.இந்த பருவத்தில் நிகழும் தீய பழக்கங்களின் விளைவு முழுவாழ்வையும் சங்கடத்தில் ஆழ்த்தி விடும்.அதனால் தான், நபி ஸல் அவர்கள் நாளை மறுமையில் நடைபெறும் விசாரணை குறித்துச்சொல்லும்போது-

لن تزول قدما عبد يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفناه، وعن شبابه فيما
أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وعن علمه ماذا عمل به

நாளை மறுமையில் நான்கு கேள்விக்கு பதில் கூறாதவரை ஒரு அடியானின் கால்கள் செயல்படாது.அவைகள்
1.வாழ்நாளை எப்படி கழித்தாய்? 2.வாலிபத்தை எப்படி அழித்தாய்? 3.பொருளை எப்படி சேர்த்தாய்?எப்படி செலவு செய்தாய்? 4.கற்ற கல்வியைக்கொண்டு என்ன அமல் செய்தாய்? என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸில் கூறப்பட்ட வாழ்நாளுக்கு கீழ் வாலிபமும்வந்துவிட்டாலும் அல்லாஹ் வாலிபத்தை தனியாக விசாரிப்பான் என்பதிலிருந்து அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளலாம்.

வாலிப பருவத்தில்

!சிலருக்கு பெண் மீது பைத்தியம்-சிலருக்கு பணத்தின் மீது பைத்தியம்-சிலருக்கு அழகான ஆடையின் மீது பைத்தியம்-சிலருக்கு கம்ப்யூட்டர்,லேப்டாப் மீது பைத்தியம்-சிலருக்கு மொபைல் பைத்தியம்- வேறு சிலருக்கோ பைக்,கார் மீது பைத்தியம்.

ஒருநாளில் பெரும்பகுதியை செல்போன் பயன்பாட்டில் மட்டுமே கழிக்கிற எத்தனையோ இளைஞர்கள் உண்டு.இதுவும் ஒருவைகை போதைதான். அவர்கள் செல்போனை பிரிந்தாலோ,அல்லது அவர்களின் செல்போன் தொலந்தாலோ ஒருவகையான மனநிலைபாதிப்புக்குள்ளாகிவிடுவார்கள். இன்றைய இளைஞர்களின் கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் சவாலாக இருப்பது இணையதளங்களும்,குறிப்பாக பேஸ்புக்கும் தான் என்று சமீபத்திய கணக்கெடுப்பு கூறுகிறது.

இவர்கள் பெற்றோரை பிரிந்துகூட இருந்துவிடுவார்கள்,ஆனால் பேஸ்புக்கை பிரிந்து இவர்களால் இருக்க முடியாது.இங்கே நாம் இஸ்லாமிய இளைஞர்களை பற்றி கவலைப்படவேண்டும்.
தடம் புரளாத வாலிபனை பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்படுகிறான்

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்...

*💠அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்...💠*

ﺍﻟﺮّﺣﻤﺎﻥ - ﺍﻟﺮّﺣﻴﻢ - ﺍﻟﻤَﻠِﻚ - ﺍﻟﻘُﺪّﻭﺱ - ﺍﻟﺴّﻼﻡ - ﺍﻟﻤُﺆﻣن - ﺍﻟﻤُﻬَﻴْﻤِﻦ - ﺍﻟﻌﺰﻳﺰ - ﺍﻟﺠﺒّﺎﺭ - ﺍﻟﻤُﺘَﻜَﺒِّﺮ - ﺍﻟﺨﺎﻟﻖ - ﺍﻟﺒﺎﺭﺉ- ﺍﻟﻤُﺼَﻮِّﺭ - ﺍﻟﻐﻔّﺎﺭ - ﺍﻟﻘﻬّﺎﺭ - ﺍﻟﻮﻫّﺎﺏ - ﺍﻟﺮﺯّﺍﻕ - ﺍﻟﻔﺘّﺎﺡ - ﺍﻟﻌﻠﻴﻢ - ﺍﻟﻘﺎﺑﺾ - ﺍﻟﺒﺎﺳﻂ - ﺍﻟﺨﺎﻓﺾ - ﺍﻟﺮّﺍﻓﻊ - ﺍﻟﻤُﻌِﺰّ - ﺍﻟﻤُﺬِﻝّ - السميع- ﺍﻟﺒﺼﻴﺮ - ﺍﻟﺤﻜﻢ - ﺍﻟﻌﺪﻝ- ﺍﻟﻠﻄﻴف - ﺍﻟﺨﺒﻴﺮ - ﺍﻟﺤﻠﻴﻢ - ﺍﻟﻌﻈﻴﻢ - ﺍﻟﻐﻔﻮﺭ - ﺍﻟﺸّﻜﻮﺭ - ﺍﻟﻌﻠﻲّ - ﺍﻟﻜﺒﻴﺮ - ﺍﻟﺤﻔﻴﻆ - ﺍﻟﻤُﻘﻴﺖ - ﺍﻟﺤﺴﻴﺐ - ﺍﻟﺠﻠﻴﻞ- ﺍﻟﻜﺮﻳﻢ - ﺍﻟﺮﻗﻴﺐ - ﺍﻟﻤﺠﻴﺐ - ﺍﻟﻮﺍﺳﻊ - ﺍﻟﺤﻜﻴﻢ ؛ ﺍﻟﻮﺩﻭﺩ ؛ ﺍﻟﻤﺠﻴﺪ ؛ ﺍﻟﺒﺎﻋﺚ ؛ ﺍﻟﺸّﻬﻴﺪ - ﺍﻟﺤﻖّ - ﺍﻟﻮﻛﻴﻞ - ﺍﻟﻘﻮﻱ - ﺍﻟﻤﺘﻴﻦ - ﺍﻟﻮﻟﻲّ - ﺍﻟﺤﻤﻴﺪ - ﺍﻟﻤُﺤﺼﻲ - ﺍﻟﻤُﺒﺪﺉ - ﺍﻟﻤُﻌﻴﺪ - ﺍﻟﻤُﺤﻴﻲ - ﺍﻟﻤُﻤﻴﺖ - ﺍﻟﺤﻲّ - ﺍﻟﻘﻴّﻮﻡ - ﺍﻟﻮﺍﺟﺪ - ﺍﻟﻤﺎﺟﺪ - ﺍﻟﻮﺍﺣﺪ - ﺍﺍﻷﺣﺪ - ﺍﻟﺼّﻤﺪ - ﺍﻟﻘﺎﺩﺭ - ﺍﻟﻤُﻘﺘﺪﺭ - ﺍﻟﻤُﻘﺪِّﻡ - ﺍﻟﻤُﺆﺧّﺮ - ﺍﻷﻭّﻝ - ﺍﻵﺧﺮ - ﺍﻟﻈّﺎﻫﺮ - ﺍﻟﺒﺎﻃﻦ - ﺍﻟﻮﺍﻟﻲ - ﺍﻟﻤُﺘﻌﺎﻟﻲ - ﺍﻟﺒﺮّ - ﺍﻟﺘّﻮّﺍﺏ - ﺍﻟﻤُﻨْﺘَﻘِﻢ - ﺍﻟﻌﻔُﻮ - ﺍﻟﺮّﺅﻑ - ﻣﺎﻟﻚ ﺍﻟﻤُﻠﻚ - ﺫﻭ ﺍﻟﺠﻼﻝ ﻭﺍﻹﻛﺮﺍﻡ - ﺍﻟﻤُﻘﺴﻂ - ﺍﻟﺠﺎﻣﻊ - ﺍﻟﻐﻨﻲّ ؛ ﺍﻟﻤُﻐْﻨﻲ ؛ ﺍﻟﻤﺎﻧﻊ - ﺍﻟﻀّﺎﺭ - ﺍﻟﻨّﺎﻓﻊ - ﺍﻟﻨّﻮﺭ - ﺍﻟﻬﺎﺩﻱ - ﺍﻟﺒﺪﻳع - ﺍﻟﺒﺎﻗﻲ - ﺍﻟﻮﺍﺭﺙ - ﺍﻟﺮّﺷﻴﺪ- ﺍﻟﺼّﺒﻮﺭ

1. அல்-ரஹ்மான் = அளவற்ற அருளாளன்.
2. அல்-ரஹீம் = நிகரற்ற அன்புடையவன்.
3. அல் மலிக் = மன்னன்.
4. அல் குத்தூஸ் = பரிசுத்தமானவன்.
5. அஸ்ஸலாம் = அமைதி அளிப்பவன்.
6. அல் முஃமின் = அபயம் அளிப்பவன்.
7. அல் முஹய்மின் = பாதுகாவலன்.
8. அல் அஸீஸ் = யாவையும் மிகைத்தவன்.
9. அல் ஜப்பார் = அடக்கி ஆழ்பவன்.
10. அல் முத்தகப்பீர் = பெருமையுள்ளவன்.
11. அல் காலிக் = படைப்பவன்.
12. அல் பாரிஃ = ஆத்மாவை அமைப்போன்.
13. அல் முஸவ்விர் = உருவமமைப்பவன்.
14. அல் கப்ஃபார் = பிழை பொறுப்பவன்.
15. அல் கஹ்ஹார் = அடக்கி ஆள்பவன்.
16. அல் வஹ்ஹாப் = பெருங்கொடையாளன்.
17. அல் ரஸ்ஸாக் = உணவளிப்பவன்.
18. அல் ஃபத்தாஹ் = வெற்றி அளிப்பவன்.
19. அல் அலீம் = யாவும் அறிந்தவன்.
20. அல் காபில் = கைவசப்படுத்துவோன்.
21. அல் பாஸித் = தாராளமாகக் கொடுப்பவன்.
22. அல் ஹா(kh)பில் = தாழச் செய்பவன்.
23. அல் ராஃபிக் = உயர்த்துவோன்.
24. அல் முஇஸ் = மேன்மை அடையச் செய்வோன்.
25. அல் முதில் = சீர்குழைப்பவன்.
26. அல் ஸமீஃ = யாவையும் கேட்பவன்.
27. அல் பஸீர் = யாவையும் பார்ப்பவன்.
28. அல் ஹகம் = தீர்ப்புச் செய்வோன்.
29. அல் அதல் = நீதி செய்வோன்.
30. அல் லத்தீப் = உள்ளன்புடையவன்
31. அல் க(Kh)பீர் = அனைத்தையும் உணர்ந்தவன்.
32. அல் ஹலீம் = அமைதியானவன்.
33. அல் அழீம் = மகத்துவமுள்ளவன்.
34. அல் கபூர் = பாவம் தீர்ப்பவன்.
35. அல் ஷக்கூர் = நன்றி பாராட்டுபவன்.
36. அல் அலிய் = உன்னதமானவன்.
37. அல் ஹபீழ் = பேணிக் காப்பவன்.
38. அல் க(K)பீர் = பெரியவன்.
39. அல் முகீத் = அன்னம் அளித்துக் காப்பவன்.
40. அல் ஹஸீப் = கணக்கு கேட்பவன்.
41. அல் ஜலீல் = மாண்புமிக்கவன்.
42. அல் கரீம் = சங்கையானவன்.
43. அல் ரகீப் = கண்காணிப்பவன்.
44. அல் முஜீப் = முறையீட்டை ஏற்பவன்.
45. அல் வாஸிஃ = தாராள தன்மையுடவன்.
46. அல ஹகீம் = நுண்ணறிவுடையவன்.
47. அல் வதூத் = உள்ளன்பு மிக்கவன்.
48. அல் மஜீத் = கீர்த்தி உள்ளவன்.
49. அல் பாஇஸ் = தட்டி எழுப்புகிறவன்.
50. அல் ஷஹீத் = சாட்சியுடையோன்.
51. அல் ஹக் = சத்தியமானவன்.
52. அல் வகீல் = பொறுப்பு ஏற்பவன்.
53. அல் கவீ = வல்லமை மிக்கவன்.
54. அல் மத்தீன் = கடும் சக்தி உள்ளவன்
55. அல் வலீ = பாதுகாவலன்.
56. அல் ஹமீத் = புகழுக்கு உரியவன்.
57. அல முஹஸீ = ஆழ்ந்த அறிவுடையவன்.
58. அல் முஈத் = இறுதியில் மீட்டுக் கொள்பவன்.
59. அல் முஹ்யீ = உயிர்ப்பிப்பவன்.
60. அல் முப்திஃ = ஆதியில் வெளியிடுபவன்.
61. அல் முமீத் = மரணிக்கச் செய்பவன்.
62. அல் ஹை = நித்திய ஜீவியானவன்.
63. அல் கையூம் = என்றும் நிலைத்தவன்.
64. அல் வாஜீத் = ஆற்றல் படைத்தவன்.
65. அல் மாஜித் = கீர்த்தி வாய்ந்தவன்.
66. அல் வாஹித் = தனித்தவன்.
67. அல் அஹத் = ஒருமைக்கு உரியவன்.
68. அல் ஸமத் = தேவையற்றவன்.
69. அல் காதிர் = ஆற்றல் உள்ளவன்.
70. அல் முக்ததிர் = ஆற்றல் பெற்ச் செய்பவன்.
71. அல் முகத்திம் = முற்படுத்துபவன்.
72. அல் முஅக்கிர் = பிற்படுத்துபவன்.
73. அல் அவ்வல் = ஆரம்பமானவன்.
74. அல் ஆகிர் = இறுதியானவன்.
75. அல் ழாஹிர் = பகிரங்கமானவன்.
76. அல் பா(B)தின் = அந்தரங்கமானவன்.
77. அல் வாலி = அதிகாரப் பொறுப்புள்ளவன்.
78. அல் முத்த ஆலி = உயர் பதவியுள்ளவன்.
79. அல் பர் = நன்றி அளிப்பவன்.
80. அல் தவ்வாப் = மன்னிப்பை அதிகமாய் ஏற்பவன்.
81. அல் முன் தகீம் = தண்டிப்பவன்.
82. அல் அஃபூ = சகிப்பவன்.
83. அல் ரவூஃப் = மிகவும் சாந்தமானவன்.
84. அல் மலிகுல் முல்க் = அரசாட்சிக்கு உரியவன்.
85. அல் ஜலால் வல் இக்ராம் = கீர்த்தியும், சிறப்பும் உள்ளவன்.
86. அல் முக்ஸித் = நியாயம் செய்வோன்.
87. அல் ஜாமிஃ = சகலமும் பொதிந்தவன்.
88. அல் கனீ = பரிபூரண செல்வந்தன்.
89. அல் முக்னீ = செல்வந்தனாக ஆக்குவோன்.
90. அல் மானிஃ = துன்பம் தடுப்பவன்.
91. அல் ளார் = துன்பம் அடையச் செய்பவன்.
92. அல் நாஃபிஃ = பயன் அளிப்பவன்.
93. அல் நூர் = ஒளி தருபவன்.
94. அல் ஹா தீ = நேர்வழி செலுத்துவோன்.
95. அல் பதீஃ = புதிதாய் உண்டாக்குபவன்.
96. அல் பாகீ = நிலையாக இருப்பவன்.
97. அல் வாரித் = உரிமையாளன்.
98. அல் ரஷீத் = நேர்வழி காட்டுபவன்.
99. அல் ஸபூர் = பொறுமையாளன்....
—------------------------
* *  * * * * * *
—------------------------
💎❄️💎❄️💎❄️💎❄️💎❄️

Tuesday, 21 January 2020

அல்குர்ஆனின் அத்தியாயங்களின் பொருள்.......

அல்குர்ஆன் அத்தியாயங்ள்


1.  அல் பாத்திஹா - தோற்றுவாய்
2.  அல் பகரா - அந்த மாடு
3.  ஆலு இம்ரான் - இம்ரானின் குடும்பத்தினர்
4.  அன்னிஸா - பெண்கள்
5.  அல் மாயிதா - உணவுத் த.ட்டு
6.  அல் அன்ஆம் - கால்நடைகள்
7.  அல் அஃராப் - தடுப்புச் சுவர்
8.  அல் அன்ஃபால் - போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்கள்
9.  அத்தவ்பா - மன்னிப்பு
10. யூனுஸ் - ஓர் இறைத் தூதரின் பெயர்
11. ஹூது - ஓர் இறைத் தூதரின் பெயர்
12. யூஸுஃப் - ஓர் இறைத் தூதரின் பெயர்
13. அர்ரஃது - இடி
14. இப்ராஹீம் - ஓர் இறைத் தூதரின் பெயர்
15. அல் ஹிஜ்ர் - ஓர் ஊர்
16. அந்நஹ்ல் - தேனீ
17. பனூ இஸ்ராயீல் - இஸ்ராயீலின் மக்கள்
18. அல்கஹ்ஃப் - அந்தக்குகை
19. மர்யம் - ஈஸா நபிyiயின் தாயாரின் பெயர்
20. தா ஹா - அரபு மொழியின் 16 மற்றும் 26வது எழுத்துக்கள்
21. அல் அன்பியா - நபிமார்கள்
22. அல் ஹஜ் - கடமையான ஒரு வணக்கம்
23. அல் முஃமினூன் - நம்பிக்கை கொண்டோர்
24. அந்நூர் - அந்த ஒளி
25. அல் ஃபுர்கான் - வேறுபடுத்திக் காட்டுவது
26. அஷ் ஷுஅரா - கவிஞர்கள்
27. அந்நம்ல்- எறும்பு
28. அல் கஸஸ் - நடந்த செய்திகள்
29. அல் அன்கபூத் - சிலந்தி
30. அர்ரூம் - ரோமப் பேரரசு
31. லுக்மான் - ஒரு நல்ல மனிதரின் பெயர்
32. அஸ்ஸஜ்தா - சிரம் பணிதல்
33. அல் அஹ்ஸாப் - கூட்டுப் படையினர்
34. ஸபா - ஓர் ஊர்
35. ஃபாத்திர் - படைப்பவன்
36. யாஸீன் - அரபு மொழியின் 28வது மற்றும் 12வது எழுத்துக்கள்.
37. அஸ் ஸாஃப்பாத் - அணி வகுப்போர்
38. ஸாத் - அரபு மொழியின் 14வது எழுத்து.
39. அஸ்ஸுமர் - கூட்டங்கள்
40. அல் முஃமின் - நம்பிக்கை கொண்டவர்
41. ஃபுஸ்ஸிலத் - தெளிவுபடுத்தப்பட்டது
42. அஷ்ஷூரா - கலந்தாலோசனை
43. அஸ்ஸுக்ருஃப்- அலங்காரம்
44. அத்துகான் - அந்தப் புகை
45. அல் ஜாஸியா - மண்டியிட்டோர்
46. அல் அஹ்காஃப் - மணற்குன்றுகள்
47. முஹம்மத் - இறுதித் தூதரின் பெயர்
48. அல்ஃபத்ஹ் - அந்த வெற்றி
49. அல் ஹுஜ்ராத் - அறைகள்
50. காஃப் - அரபு மொழியின் 21வது எழுத்து.
51. அத்தாரியாத் - புழுதி பரத்தும் காற்றுகள்
52. அத்தூர் - ஒரு மலையின் பெயர்
53. அந்நஜ்மு - நட்சத்திரம்
54. அல் கமர் - சந்திரன்
55. அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன்
56. அல் வாகிஆ - அந்த நிகழ்ச்சி
57. அல் ஹதீத் - இரும்பு
58. அல் முஜாதலா - தர்க்கம் செய்தல்
59. அல் ஹஷ்ர் - வெளியேற்றம்
60. அல் மும்தஹினா - சோதித்து அறிதல்
61. அஸ்ஸஃப் - அணி வகுப்பு
62. அல் ஜுமுஆ - வெள்ளிக் கிழமையின் சிறப்புத் தொழுகை
63. அல் முனாஃபிகூன் - நயவஞ்சகர்கள்
64. அத்தகாபுன் - பெருநட்டம்
65. அத்தலாக் - விவாகரத்து
66. அத்தஹ்ரீம் - தடை செய்தல்
67. அல் முல்க் - அதிகாரம்
68. அல் கலம் - எழுதுகோல்
69. அல் ஹாக்கா - அந்த உண்மை நிகழ்ச்சி
70. அல் மஆரிஜ் - தகுதிகள்
71. நூஹ் - ஓர் இறைத் தூதரின் பெயர்
72. அல் ஜின் - மனிதனின் கண்களுக்குத் தென்படாத படைப்பு
73. அல்முஸ்ஸம்மில் - போர்த்தியிருப்பவர்
74. அல்முத்தஸிர் - போர்த்தியிருப்பவர்
75. அல்கியாமா - இறைவன் முன்னால் நிற்கும் நாள்
76. அத்தஹ்ர் - காலம்
77. அல்முர்ஸலாத் - அனுப்பப்படும் காற்று!
78. அந்நபா - அந்தச் செய்தி
79. அந்நாஸிஆத் - கைப்பற்றுவோர்
80. அபஸ - கடுகடுத்தார்
81. அத்தக்வீர் - சுருட்டுதல்
82. அல்இன்ஃபிதார் - பிளந்துவிடுதல்
83. அல்முதஃப்பிபீன் - அளவு நிறுவையில் குறைவு செய்வோர்
84. அல்இன்ஷிகாக் - பிளந்து விடுதல்
85. அத்தாரிக் - விடிவெள்ளி
86. அல்அஃலா - மிக உயர்ந்தவன்
87. அல்காஷியா - சுற்றி வளைப்பது
88. அல்ஃபஜ்ரு - வைகறை
89. அல்ஃபஜ்ரு - வைகறை
90. அல்பலது - அந்த நகரம்
91. அஷ்ஷம்ஸ் - சூரியன்
92. அல்லைல் - இரவு
93. அல்லுஹா - முற்பகல்
94. அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்) - விரிவாக்குதல்
95. அத்தீன்- அத்தி
96. அல் அலக்- கருவுற்ற சினை முட்டை
97. அல்கத்ர்- மகத்துவம்
98. அல்பய்யினா- தெளிவான சான்று
99. அஸ்ஸில்ஸால்- நில அதிர்ச்சி
100.அல் ஆதியாத்- வேகமாக ஓடும் குதிரைகள்
101.அல் காரிஆ- திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி
102.அத்தகாஸுர்- அதிகம் தேடுதல்
103.அல் அஸ்ர்- காலம்
104.அல் ஹுமஸா- புறம் பேசுதல்
105.அல் ஃபீல்- யானை
106.குரைஷ்- ஒரு கோத்திரத்தின் பெயர்
107.அல் மாவூன்- அற்பப் பொருள்
108.அல் கவ்ஸர்- தடாகம்
109.அல் காஃபிரூன்- மறுப்போர்
110.அந்நஸ்ர்- உதவி
111.தப்பத்- அழிந்தது
112.இஃக்லாஸ்- உளத்தூய்மை
113.அல் ஃபலக்- காலைப் பொழுது
114.அந்நாஸ்- மனிதர்கள்

Monday, 20 January 2020

இரவு நேரங்களில் வீட்டைப் பாதுகாக்கும் இறை நினைவு!!!


இரவு நேரங்களில் வீட்டைப் பாதுகாக்கும் இறை நினைவு


عَنْ جَابِرٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَطْفِئُوا الْمَصَابِيحَ بِاللَّيْلِ إِذَا رَقَدْتُمْ وَغَلِّقُوا الْأَبْوَابَ وَأَوْكُوا الْأَسْقِيَةَ وَخَمِّرُوا الطَّعَامَ وَالشَّرَابَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் அல்லது அந்திப் பொழுதாகி விட்டால் உங்கள் குழந்தைகளை (வெüயே திரியவிடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போது தான் (பூமியெங்கும்) பரவுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெüயே செல்ல) விட்டுவிடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில்,ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை. உங்கள் தண்ணீர் பையி(ன் வாயி)னைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்களுடைய பாத்திரங்களை மூடி வையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அவற்றின் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள். உங்கள் விளக்குகளை அணைத்து விடுங்கள்.
அறிவிப்பவர்:  ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல்: புகாரி 5623
عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَتْرُكُوا النَّارَ فِي بُيُوتِكُمْ حِينَ تَنَامُونَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உறங்கச் செல்லும் போது உங்கள் வீட்டிலுள்ள நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடாதீர்கள்.
அறிவிப்பவர்:  அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)  நூல்: புகாரி 6293

இன்று நம்முடைய வீடுகளில் நாம் தூங்கச் செல்லும் முன் கேஸ் அடுப்புகளை அணைத்துள்ளோமா, தேவையில்லாமல் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்துள்ளோமா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இது நபிவழியும், நமக்குப் பாதுகாப்பும் ஆகும்.

Sunday, 19 January 2020

பூமி ஏற்க்க மறுத்த உடல்!!!


அல்லாஹ்வின் தண்டனை ...


)حديث مرفوع( حَدَّثَنَاأَبُو مَعْمَرٍ، حَدَّثَنَاعَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَاعَبْدُ الْعَزِيزِ، عَن ْأَنَس ٍرَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : "كَانَ رَجُل ٌنَصْرَانِيًّا فَأَسْلَمَ وَقَرَأَ الْبَقَرَةَ وَآلَ عِمْرَانَ فَكَانَ يَكْتُبُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَادَ نَصْرَانِيًّا فَكَانَ ، يَقُولُ : مَا يَدْرِي مُحَمَّدٌ إِلَّا مَا كَتَبْتُ لَهُ فَأَمَاتَهُ اللَّهُ فَدَفَنُوهُ فَأَصْبَحَ وَقَدْ لَفَظَتْهُ الْأَرْضُ ، فَقَالُوا : هَذَا فِعْلُ مُحَمَّدٍ وَأَصْحَابِهِ لَمَّا هَرَبَ مِنْهُمْ نَبَشُوا عَنْ صَاحِبِنَا فَأَلْقَوْهُ فَحَفَرُوا لَهُ فَأَعْمَقُوا فَأَصْبَحَ وَقَدْ لَفَظَتْهُ الْأَرْضُ ، فَقَالُوا : هَذَا فِعْلُ مُحَمَّدٍ وَأَصْحَابِهِ نَبَشُوا عَنْ صَاحِبِنَا لَمَّا هَرَبَ مِنْهُمْ فَأَلْقَوْهُ فَحَفَرُوا لَهُ وَأَعْمَقُوا لَهُ فِي الْأَرْضِ مَا اسْتَطَاعُوا فَأَصْبَحَ وَقَدْ لَفَظَتْهُ الْأَرْضُ فَعَلِمُوا أَنَّهُ لَيْسَ مِنَ النَّاسِ فَأَلْقَوْهُ ". 
                                  
. அனஸ்(ரலி) அறிவித்தார்கள்

  ஒருவர் கிறிஸ்தவராக இருந்தார்.
பிறகு, அவர் இஸ்லாத்தைத் தழுவினார். “அல்பகரா“ மற்றும் “ஆலு இம்ரான்“ அத்தியாயங்களை ஓதினார்.
அவர் நபி(ஸல்) அவர்களுக்காக (வேத வெளிப்பாட்டை) எழுதி வந்தார். அவர் (மீண்டும்) கிறிஸ்தவராகவே மாறிவிட்டார். அவர் (மக்களிடம்) “முஹம்மதுக்கு, நான் அவருக்கு எழுதித் தந்தைத் தவிர வேறெதுவும் தெரியாது” என்று சொல்லிவந்தார். பிறகு அல்லாஹ் அவருக்கு மரணத்தையளித்தான். அவரை மக்கள் புதைத்துவிட்டனர். ஆனால் (மறு நாள்) அவரை பூமி துப்பிவிட்டிருந்தது. உடனே, (கிறிஸ்தவர்கள்), “இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களைவிட்டு ஓடி வந்துவிட்டதால் அவரின் மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டுவிட்டார்கள்” என்று கூறினார். எனவே, அவருக்காக இன்னும் அழகாக ஒரு புதை குழியைத் தோண்டினர். (அதில் புதைத்த பின்பு) மீண்டும் பூமி அவரை (வெளியே) துப்பி விட்டிருந்தது. அப்போதும், “இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களுடைய வேலைதான். நம் தோழர் அவர்களைவிட்டு வந்துவிட்ட காரணத்தால் அவரைத் தோண்டி எடுத்து மண்ணறைக்கு வெளியே போட்டுவிட்டனர்” என்று கூறினர். மீண்டும் அவர்களால் குழியை அவருக்காகத் தோண்டி அதில் அவரைப் பூமி அவரை முடிந்த அளவிற்கு மிக அழமான குழியை அவருக்காகத் தோண்டி  அதில் அவரைப் புதைத்தனர். ஆனால், அவரை பூமி மீண்டும் துப்பி விட்டிருந்தது. அப்போதுதான் அது மனிதர்களின் வேலையல்ல. (இறைவனின் தண்டனை தான்) என்று புரிந்து கொண்டனர். அவரை அப்படியே
(வெளியிலேயே) போட்டுவிட்டனர்.
ஷஹீஹ் புகாரி  3617

நபி(ஸல்)அவர்கள் வெறுத்த தாயத்து ...


நபி(ஸல்)அவர்கள் வெறுத்த பொருள் ...
رواه الإمام أحمد عن عقبة بن عامر
( أنه جاء في ركب عشرة إلى رسول الله صلى الله عليه وسلم
فبايع تسعة وأمسك عن رجل منهم ،
فقالوا : ما شأنه ؟
فقال : إن في عضده تميمة فقطع الرجل التميمة ،
فبايعه رسول الله صلى الله عليه وسلم ثم قال : من علق فقد أشرك )
قال الشيخ الألباني :صحيح : صحيح الترغيب.
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகையில்
நபி (ஸல்) அவர்களிடத்தில் பத்துப் பேர் கொண்ட ஒரு கூட்டம் வந்தது.
அதில் ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தார்கள்.
ஒருவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லை. 
அப்போது அந்தக் கூட்டத்தினர், ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தீர்கள்.
ஆனால் இவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லையே ஏன்?
என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் தாயத்து இருக்கிறது என்று சொல்லி தன்னுடைய கையை நுழைத்து அதைத் துண்டித்தார்கள்.
பிறகு பைஅத் செய்தார்கள். 
பின்னர் யார் தாயத்தைத் தொங்க விட்டுக் கொண்டாரோ அவர் இணை வைத்து விட்டார் என்று கூறினார்கள்.
நூல்: அஹ்மத் (16781)

மனித சமூகத்தின் வெற்றிக்கான வழிகளை அல்லாஹ்வும் அவன் தூதரும் அழகாக காட்டித் தந்துள்ளார்கள்,,,

மனித சமூகத்தின் வெற்றிக்கான வழிகளை அல்லாஹ்வும் அவன் தூதரும் அழகாக காட்டித் தந்துள்ளார்கள்,

 அவ்வாறான வழிகளை பின்வரும் ஆதாரங்களைக் கொண்டு விளக்கினால் அவை இரண்டுதான் என்பது தெளிவாகும். 

அவை அல்லாஹ்வின் கட்டளை அல்குர்ஆனும், நபிகளாரின் வழிகாட்டல் சுன்னவுமேயாகும்.

அல்குர்ஆனின் கூற்றுக்கள்:-

وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ ۚ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் – இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். (4:69)

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ ۗ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். 

(33:36)

நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கள்:-

عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لَأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ

அபூ ஹுரைரா(றழி) மற்றும் ஸைத் இப்னு காலித்(றழி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள் : 

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் இருந்தோம். அப்போது (வழக்கைக் கொண்டு வந்த இருவரிடம்) ‘உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிப்பேன்’ என்று நபியவர்கள் சொன்னார்கள். (புஹாரி: 7278)

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الجَنَّةَ إِلَّا مَنْ أَبَى»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَنْ يَأْبَى؟ قَالَ: «مَنْ أَطَاعَنِي دَخَلَ الجَنَّةَ  وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى»

அபூ ஹுரைரா(றழி) அவர்கள்  அறிவிக்கின்றார்கள்:(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்’ என்று பதிலளித்தார்கள்.

  (புஹாரி: 7280)

நபித் தோழர்கள் கூற்று :-

عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ: شَهِدْتُ ابْنَ عُمَرَ حَيْثُ اجْتَمَعَ النَّاسُ عَلَى عَبْدِ المَلِكِ، قَالَ: «كَتَبَ إِنِّي أُقِرُّ بِالسَّمْعِ، وَالطَّاعَةِ لِعَبْدِ اللَّهِ عَبْدِ المَلِكِ أَمِيرِ المُؤْمِنِينَ عَلَى سُنَّةِ اللَّهِ وَسُنَّةِ رَسُولِهِ مَا اسْتَطَعْتُ، وَإِنَّ بَنِيَّ قَدْ أَقَرُّوا بِمِثْلِ ذَلِكَ

அப்துல்லாஹ் இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.: அப்துல் மாலிக் இப்னு மர்வான் அவர்களிடம், (அவருக்கு விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக) மக்கள் ஒன்றுகூடிய இடத்தில் நான் இப்னு உமர்(றழி) அவர்களைப் பார்த்தேன். அன்னார், ‘நான் அல்லாஹ் வகுத்த நெறிமுறையின்படியும் அவனுடைய தூதர் காட்டிய வழிமுறையின்படியும், அல்லாஹ்வின் அடியாரும் இறைநம்பிக்கையாளர்களின் தலைவருமான அப்துல் மலிக் இப்னு மர்வானின் கட்டளைகளை என்னால் இயன்றவரை செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்பேன் என உறுதி அளிக்கிறேன்; என் மக்களும் இதைப் போன்றே உறுதி அளித்துள்ளனர்’ என்று எழுதித் தந்தார்கள்.  (புஹாரி:7203)

قَالَ عَبْدُ اللَّهِ: «إِنَّ أَحْسَنَ الحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَشَرَّ الأُمُورِ مُحْدَثَاتُهَا

தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(றழி) அவர்கள், ‘உரையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். நடத்தையில் சிறந்தது முஹம்மத்(ஸல்) அவர்களின் நடத்தையாகும்’ என்று கூறினார்கள்.
(புஹாரி: 6098,7277)

عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: «لَعَنَ اللَّهُ الوَاشِمَاتِ وَالمُوتَشِمَاتِ، وَالمُتَنَمِّصَاتِ وَالمُتَفَلِّجَاتِ، لِلْحُسْنِ المُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ» فَبَلَغَ ذَلِكَ امْرَأَةً مِنْ بَنِي أَسَدٍ يُقَالُ لَهَا  أُمُّ يَعْقُوبَ، فَجَاءَتْ فَقَالَتْ: إِنَّهُ بَلَغَنِي عَنْكَ أَنَّكَ لَعَنْتَ كَيْتَ وَكَيْتَ، فَقَالَ: وَمَا لِي أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَنْ هُوَ فِي كِتَابِ اللَّهِ، فَقَالَتْ: لَقَدْ قَرَأْتُ مَا بَيْنَ اللَّوْحَيْنِ، فَمَا وَجَدْتُ فِيهِ مَا تَقُولُ، قَالَ: لَئِنْ كُنْتِ قَرَأْتِيهِ لَقَدْ وَجَدْتِيهِ، أَمَا قَرَأْتِ: {وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا} [الحشر: 7]؟ قَالَتْ: بَلَى، قَالَ: فَإِنَّهُ قَدْ نَهَى عَنْهُ، قَالَتْ: فَإِنِّي أَرَى أَهْلَكَ يَفْعَلُونَهُ، قَالَ: فَاذْهَبِي فَانْظُرِي، فَذَهَبَتْ فَنَظَرَتْ، فَلَمْ تَرَ مِنْ حَاجَتِهَا شَيْئًا، فَقَالَ: لَوْ كَانَتْ كَذَلِكَ مَا جَامَعْتُهَا

அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்கள்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி), ‘பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?’ என்று கூறினார்கள்.6 இச்செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, ‘உம்மு யஅகூப்’ எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(றழி) அவர்களிடம் வந்து, ‘இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(றழி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், ‘(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். ‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதைவிட்டும் நீங்கள் விலகி  இருங்கள்’ எனும் 

(திருக்குர்ஆன் 59:7 வது) 

வசனத்தை நீ ஓதவில்லையா?’ என்று கேட்டார்கள். அந்தப் பெண், ‘ஆம் (ஒதினேன்)’ என்று பதிலளித்தார். அப்துல்லாஹ்(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்’ என்று கூறினார்கள். அந்தப் பெண்மணி, ‘உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக கருதுகிறேன்’ என்று கூறினார். அப்துல்லாஹ்(றழி), ‘சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!’ என்று கூறினார்கள். எனவே, அந்தப் பெண் சென்று பார்த்தார். அப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(றழி), ‘என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்’ என்று கூறினார்கள். 

 (புஹாரி: 4886, முஸ்லிம்)

இந்த குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்கள் நபித் தோழர்களின் கூற்றுகள் அனைத்தும் அல்லாஹ்வின் வேதமும் நபிகளாரின் சுன்னாவுமே பின்பற்றத் தகுதியானவை என்பதை தெளிவுபடுத்துகின்றன.

மேலும் குறிப்பாக ஒரு விஷயத்தில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுவிட்டால் அப்போது ஒரு முஃமின் எப்படி நடக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும் சான்றுகள் பின்வருமாறு:

இறைக் கூற்று:

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ ۖ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.  (4:59)

 فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا

உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.  (4:65)

இவ்வசனங்கள் கருத்து வேறுபாடின்  போது ஒரு முஃமின் எதன்மூலம் தீர்வு தேடவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றது, அத்தோடு அவ்விரண்டுக்கும் அப்பால் மத்ஹப்களிலோ தரீக்கக்களிலோ ஊர் வழமைகளிலோ குடும்ப அங்கீகாரங்களிலோ தீர்வு தேடுவது வழிகேடாகும் என்பதனையும் தெளிவுபடுத்துகின்றது.

 அடுத்து நாம் மத்ஹப்களின் அறிஞர்களான மாலிக், அபூஹனீபா, ஷாபி, அஹ்மத் (ரஹ்) போன்ற இமாம்களின் கூற்றுக்களை எடுத்து நோக்கினால் அவர்களும் ஒன்றுபட்டு சொன்னது; அவ்விரண்டையும் பின்பற்ற வேண்டும் என்பதே.

அபூஹனீபா (ரஹ்) அவர்களின் கூற்று:

 قَالَ زفر: فَقَالَ يَوْمًا أَبُو حنيفَة، لأبي يُوسُف: “وَيحك يَا يَعْقُوب، لَا تكْتب كل مَا تسمع مني، فَإِنِّي قد أرَى الرَّأْي الْيَوْم، وأتركه غَدا، وَأرَى الرَّأْي غَدا، وأتركه فِي غده”  (نصب الراية)

தன் மாணவர்களை அழைத்து: நான் சொல்வதையெல்லாம் எழுதாதீர்கள், ஏனெனில் நான் மனிதனாக இருக்கின்றேன்,இன்று ஒன்றையும் நாளை வேறொன்றையும் சொல்லலாம். என்று கூறுவார்கள்.

فَقَدْ صَحَّ عَنْهُ أَنَّهُ قَالَ: إذَا صَحَّ الْحَدِيثُ فَهُوَ مَذْهَبِي. وَقَدْ حَكَى ذَلِكَ ابْنُ عَبْدِ الْبَرِّ عَنْ أَبِي حَنِيفَةَ وَغَيْرِهِ مِنْ الْأَئِمَّةِ.  الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار

மேலும் நபி வழி  சரியாக (ஸஹீஹ்) இருந்தால் அதுவே எனது (மத்ஹப்) போக்காகும். என்று கூறினார்கள்  (நஸ்புர்ராயா)

மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களின் கூற்று:

وَقَالَ مَالِكُ: مَا مِنْ أَحَدٍ إلَّا يُؤْخَذُ مِنْ قَوْلِهِ وَيُتْرَكُ إلَّا قَوْلِ رَسُولِ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ –  الآداب الشرعية والمنح المرعية

ஒவ்வொரு மனிதர்களின் பேச்சுக்களிலும் எடுப்பதற்கும் விடுவதற்கும் இடம்பாடு  இருக்கின்றது, நபி (ஸல்) அவர்களின் கூற்றைத் தவிர. என்று கூறினார்கள். 

 (அல் ஆதாபுஷ்ஷர்இய்யா)

அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களின் கூற்று;

وَقَالَ الإِمَام أَحْمد رَضِي الله عَنهُ:  لرجل لَا تقلدني وَلَا تقلدن مَالِكًا وَلَا الْأَوْزَاعِيّ وَلَا النَّخعِيّ وَلَا غَيرهم وَخذ الْأَحْكَام من حَيْثُ أخذُوا من الْكتاب وَالسّنة- الإنصاف في بيان أسباب الاختلاف للدهلوي

நீங்கள்  என்னையோ   ஷாபிஈயையோ அவசாஈயையோ சவ்ரியையோ   பின்பற்ற வேண்டாம், மாறாக அவர்கள் எங்கிருந்து மார்க்கத்தை எடுத்தார்களோ அதனை (அல்குர்ஆன், அஸ்ஸுன்னா) பின்பற்றுங்கள்.என்று கூறினார்கள்.

இமாம் ஷாபிஈ அவர்களின் கூற்று:

فقال الإمام الشافعي رحمه الله: أن رأيت أقاويل أصحاب رسول الله إذا تفرقوا فيها؟ فقلت: نصير منها إلى ما وافق الكتاب، أو السنة، أو الإجماع، أو كان أصحَّ في القياس. الرسالة للشافعي 

நபித் தோழர்கள் ஒரு விஷயத்தில் பல கருத்துக்கள் கொண்டால் அவற்றுள் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் நேர்பட்டதை நாம் எடுப்போம். என்று கூறுவார்கள். (அர்ரிஸாலா)

الرَّبِيْعُ: سَمِعْتُ الشَّافِعِيَّ يَقُوْلُ: إِذَا وَجَدْتُمْ فِي كتَابِي خِلاَفَ سُنَّةِ رَسُوْلِ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- فَقُوْلُوا بِهَا وَدَعُوا مَا قُلْتُهُ.- سير أعلام النبلاء ط الحديث 

என் புத்தகத்தில் நபி வழிக்கு மாற்றமானதை நீங்கள் கண்டால் என் கருத்தை விட்டுவிட்டு நபி வழியைக் கூறுங்கள். என கூறியதை நான் கேட்டேன் என அவர்களின் மாணவன் ராபிஃ அவர்கள் கூறினார்கள். (ஸியருஅஃலாமின் நுபலா)

إذَا صَحَّ الْحَدِيثُ خِلَافَ قَوْلِي فَاعْمَلُوا بِالْحَدِيثِ وَاتْرُكُوا قَوْلِي أَوْ قَالَ فَهُوَ مَذْهَبِي- المجموع شرح المهذب

ஹதீஸ் சரியாக (ஸஹீஹாக) வந்தால் அதுவே எனது (மத்ஹப்) போக்காகும்.
குறிப்பு: இன்னும் பல கூற்றுக்களை அவர்களது ரிஸாலா எனும் நூலில் பார்க்க முடியும்,

முன்னாள் கூறப்பட்ட அறிஞர்களின் கூற்றுக்களை நோக்கும் போது மறுமை வெற்றிக்கான வழிகள் இரண்டுதான் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளமுடியும். 

அத்தோடுஅவர்கள் யாரும் அவர்களை பின்பற்றுமாறு கூறவில்லை என்பதும் தெளிவாகின்றது.