Thursday, 24 June 2021

பிரதியுபகாரம் செய்ய இயலாதவர் தனக்கு உதவி செய்தவர்க்கு பிரார்த்தனை செய்யவேண்டும்

பிரதியுபகாரம் செய்ய இயலாதவர் தனக்கு உதவி செய்தவர்க்கு பிரார்த்தனை செய்யவேண்டும்
عَنْ أَنَسٍ، أَنَّ الْمُهَاجِرِينَ قَالُوا‏:‏ يَا رَسُولَ اللهِ، ذَهَبَ الأَنْصَارُ بِالأَجْرِ كُلِّهِ‏؟‏ قَالَ‏:‏ لاَ، مَا دَعَوْتُمُ اللَّهَ لَهُمْ، وَأَثْنَيْتُمْ عَلَيْهِمْ بِهِ‏.‏
முஹாஜிரீன்கள் நபி ஸல் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! அன்ஸாரிகள் ( எங்களுக்கு உபகாரம் புரிந்து) நற்கூலிகளைக் கொண்டு சென்றுவிட்டனர் என்று கூறிய போது."இல்லை" அவர்களுக்காக அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்திப்பதும் அவர்களை நீங்கள் கண்ணியப்படுவதும் அந்த நற்கூலிக்குப் பகரமாகும் என்று நபி ஸல் கூறினார்கள் என அனஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல்: அல் அதபுல் முஃப்ரத் (217)

 

அந்த நான்கு பண்புகள்.......

அந்த நான்குபண்புகள்
أَرْبَعُ خِلاَلٍ إِذَا أُعْطِيتَهُنَّ فَلاَ يَضُرُّكَ مَا عُزِلَ عَنْكَ مِنَ الدُّنْيَا‏:‏
நான்கு பண்புகள் உமக்கு வழங்கப்பட்டுவிட்டால் உலகில் உம்மைவிட்டும் விலக்கப்பட்டுவிட்ட எதுவும் உமக்கு இடையூறு அளிக்காது.
حُسْنُ خَلِيقَةٍ
அழகிய நற்குணம்
وَعَفَافُ طُعْمَةٍ
ஹராமான உணவைத் தவிர்த்து ஹலாலான உணவை உண்ணுவது
وَصِدْقُ حَدِيثٍ
உண்மை பேசுவது
وَحِفْظُ أَمَانَةٍ
அமானிதம் பேணுவது
நூல் : அல் அதபுல் முஃப்ரத்( 288)

 

நல்லதை செய்து இறை அன்பை பெறுவோம்

 

நல்லதை செய்து இறை அன்பை பெறுவோம்
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمَٰنُ وُدًّا
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரிடம் அளவற்ற அருளாளன் அன்பு செலுத்துவான்.
திருக்குர்ஆன் 19:96
وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا يَخَافُ ظُلْمًا وَلَا هَضْمًا
நம்பிக்கை கொண்ட நிலையில் நல்லறங்களைச் செய்பவர், அநீதி இழைக்கப்படும் என்றோ குறைவாக வழங்கப்படும் என்றோ அஞ்ச மாட்டார்.
திருக்குர்ஆன் 20:112
مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً ۖ
ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம்.
وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ
அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்.
திருக்குர்ஆன் 16:97