Saturday, 22 February 2014

hsdees

நபி (ஸல்) அவர்களிடம்,அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?என்று கேட்டேன். அவர்கள்,உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது என்றார்கள். பிறகு எது?என்று கேட்டேன். தாய் தந்தையருக்கு நன்மை புரிவதுஎன்றார்கள். பிறகு எது?என்றேன். அவர்கள்,அல்லாஹ் வின் பாதையில் அறப்போர் புரிவது என்று பதிலளித்தார்கள். இ(ம்மூ)வற்றை மட்டுமே என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் அதிகமாக பதிலளித்திருப்பார்கள்.

(நூல் : புகாரி 527)

Sunday, 9 February 2014

hadees

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார். 

நூல்: புகாரீ 1417.

quran ayat

அல்லாஹ்வின் மார்க்கத்தை அழிக்க முடியுமா?

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.
(அல்குர்ஆன் 61:8)

இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.
(அல்குக்ஆன் 61:9)