நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்கள், செயல்கள், அங்கீகாரங்கள் ஆகிய மூன்றையும் ஹதீஸ்கள் என்பார்கள். ஹதீஸ்களை அறிவிக்கக்கூடிய அறிவிப்பாளர்களின் தகுதி, எண்ணிக்கை, அறிவிப்பாளர்களிடையே தொடர்பு போன்ற தன்மைகளின் அடிப்படையில் ஹதீஸ்களை அறிஞர் பெருமக்கள் தரம் பிரித்துள்ளனர். அந்த வகைகளை அறிந்து வைத்துக் கொண்டாலே ஹதீஸ்கலையில் பெருமளவு அறிந்து கொண்டதாகக் கொள்ளலாம்.
எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம்.
1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)
2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
4. ளயீப் (பலவீனமானது)
எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும். ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப் படுத்தக்கூடாது.
நான்கு வகைகளையும் விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.

1. ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி ஒரு செய்தியை அறிவிக்கும்போது இன்று நாம் அறிவிப்பாளர்களின் வரிசையுடன் கூறுவதில்லை. நூல்வடிவில் தொகுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதால் அது தேவையுமில்லை. ஆனால் நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த இரண்டாவது, மூன்றாவது நூற்றாண்டுகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியைக் கூறுவதென்றால் தனக்குத் கூறியவர் யார்? என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் ஹதீஸ்கலை அறிஞர்கள் அதைத் தமது நூற்களில் பதிவு செய்வார்கள்.
தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும். அப்படி இருந்தால் தான் அதை ஹதீஸ் என்று ஒப்புக்கொள்வார்கள். எல்லா ஹதீஸ் நூற்களும் இந்த வகைளில் தான் தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழாக்க ஹதீஸ்களில் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக நபிகள் நாயகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த நபித்தோழரை மட்டுமே அறிவிப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரபு மூலத்தில் ஒவ்வொரு ஹதீஸும் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர் பட்டியலுடன் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்ற முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம்.
“தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது” என்பது முதலாவது ஹதீஸ்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார்.
இந்த செய்தியை இப்னு உமர் (ரலி) யாரிடத்தில் கூறினார்? அவரிடம் நேரடியாகக் கேட்டவர் யார்? முஸ்அப் பின் ஸஃது என்பார் தான் இதைக் கேட்டவர்.
அவரிடமிருந்து கேட்டவர் ஸிமாக் என்பார்.
ஸிமாக் என்பாரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்கள் இருவர். அவர்கள் 1. இஸ்ராயீல், 2. அபூ அவானா ஆகியோர் ஆவர். இவர்களிடமிருந்து இமாம் திர்மிதீ எப்படி அறிந்தார் என்பதை கீழ்கண்ட வரைபடம் மூலம் விளங்கலாம்.

மேற்கண்ட இருவழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்கு கிடைத்துள்ளது.
இவ்வளவு விபரங்களையும் முதல் ஹதீஸில் கூறுகிறார். இப்படி ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கிலித் தொடரை அவர் கூறுகிறார். இந்த செய்தி இமாம் திர்மிதீக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.
அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.
இந்த தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான -ஸஹீஹான - ஹதீஸ்கள் என்பர். அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் இருக்கக் கூடாது.
ஸஹீஹான - ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.
2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
ஏற்கப்படாத ஹதீஸ்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது “மவ்ளூவு” வகை ஹதீஸ்களாகும். “மவ்ளூவு” என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்பது பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாத - செய்யாத - அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும்.

திருக்குர்ஆனுக்கும், நிருபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர்முரணாகவும் - எந்த வகையிலும் விளக்கம் கொடுக்க முடியாதவைகளாக அமைந்தவை.
புத்தியில்லாதவன் உளறலுக்கு நிகராக அமைந்தவை.
அறிவிப்பாளர்களில் ஒருவரோ பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது.
இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்த தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்
இந்த அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதனடிப்படையில் அமல் செய்யக் கூடாது. இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைப் பற்றி இந்த விபரம் போதுமென்றாலும் இதில் அதிக விழிப்புணர்வு நமக்கு அவசியம் தேவை என்பதால் இது குறித்து இன்னும் சில விபரங்களையும் அறிந்து கொள்வோம். முதலில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் ஏன்? எப்படி? இந்தச் சமுதாயத்தில் நுழைந்தன? என்பதை அறிந்து கொள்வோம்.

அ) இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்தல்
நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் இஸ்லாம் படுவேகமாகப் பரவி வந்தது. இந்த வளர்ச்சி மதங்களின் பெயரால் வயிறு வளர்த்து வந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. தங்கள் மதம் காணாமல் போய்விடுமோ தங்கள் தலைமை பறிபோய்விடுமோ, வருமானம் தடைபட்டுவிடுமோ என்றெல்லாம் கவலைப்பட்ட இவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் திட்டமிட்டனர். இஸ்லாத்தின் பெருவளர்ச்சிக்கு அதன் அர்த்தமுள்ள கொள்கைகளும் எல்லா வகையிலும் அது தனித்து விளங்கியதும் தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்கள். இஸ்லாத்திலும் அர்த்தமற்ற உளறல்கள் மலிந்து கிடப்பதாகக் காட்டிவிட்டால் இஸ்லாத்தின் வளர்ச்சியை பெருமளவு மட்டுப்படுத்தலாம் என்று கணக்குப் போட்டார்கள்.
திருக்குர்ஆனில் தங்கள் கைவரிசையைக் காட்ட முடியாது என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டார்கள். நம்ப முடியாத உளறல்களையும், நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகப் பரப்பலானார்கள்.
இவற்றையெல்லாம் கேட்பவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க முடியாது. இவர்கள் இட்டுக்கட்டிய பொய்யான ஹதீஸ்களில் சிலவற்றைப் பாருங்கள்!

யாரேனும் லாயிலாஹ இல்லல்லாஹ் எனக் கூறுவாரானால் அந்த வார்த்தையிலிருந்து அல்லாஹ் ஒரு பறவையைப் படைப்பான். அப்பறவைக்கு எழுபதினாயிரம் நாக்குகள் இருக்கும். ஒவ்வொரு நாக்கும் எழுபதனாயிரம் பாஷைகளைப் பேசும்.
கத்திரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும்.
பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது இதயத்தை மென்மையாக்கும்.
நெல், ஒரு மனிதனாக இருந்தால் அது மிகவும் சகிப்புத்தன்மையுடையதாக இருந்திருக்கும்.
உங்கள் உணவில் கீரைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் அது ஷைத்தானை விரட்டியடிக்கும்.
ஆகாயத்தில் உள்ள பால் வெளி, அர்ஷின் கீழ் இருக்கும் பாம்பின் வியர்வையினால் படைக்கப்பட்டது.
சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட தண்ணீரில் குளிக்காதே! அது வெண்குஷ்டத்தை ஏற்படுத்தும்
தர்மம் செய்ய ஏதும் கிடைக்காவிட்டால் யூதர்களையும் கிறிஸ்துவர்களையும் சபியுங்கள்! அது தர்மம் செய்ததற்கு நிகராக அமையும்.
பசுமையான பொருட்கள், ஓடுகின்ற தண்ணீர், அழகிய முகம் ஆகியவற்றை பார்ப்பது பார்க்கும் திறனை அதிகரிக்கும்.
அழகான முகத்தை பார்ப்பது ஒரு வணக்கமாகும்.
கண்கள் நீலநிறமாக இருப்பது ஒரு பாக்கியமாகும்.
மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தும்.
சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.
முட்டையும் பூண்டும் சாப்பிட்டால் அதிகமான சந்ததிகள் பெற முடியும்.
பெண்களிடம் ஆலோசணை கேளுங்கள்! ஆனால் அதற்கு மாற்றமாக நடங்கள்.
கோழிகள் என் சமுதாயத்தின் ஏழைகளுக்கு ஆடுகளாகும்.
160 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதை விட நாயை வளர்ப்பது மேலாகும்
ஆஷுரா நாளில் அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்தான்.
இப்படி ஏராளமான பொய்களை நபிகள் நாயகத்தின் பெயரால் இட்டுக்கட்டினார்கள். நடை முறையில் இவை யாவும் பொய் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. கத்திரிக்காய் அனைத்து நோய்க்கும் மருந்தாக இல்லை. மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்துவதும் இல்லை. பருப்பு சாப்பிடுவதற்கும் இதயம் இளகுவதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. (பருப்பு சாப்பிடும் கூட்டம் தான் பள்ளிவாசலை இடித்தனர்) கீரைக்கும் ஷைத்தானுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அர்ஷுக்கு கீழே பாம்பும் கிடையாது. அதிலிருந்து பால்வெளி படைக்கப்படவும் இல்லை. சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட சிறிய குளம் குட்டைகளில் இலட்சக்கணக்கான மக்கள் குளித்தும் யாருக்கும் குஷ்டம் வரவில்லை. ஓடுகின்ற தண்ணீருக்குப் பக்கத்தில் வசிப்பவர்களும், ஊட்டியில் பசுமையான இடங்களை அன்றாடம் பார்பவர்களும், அழகான முகம் படைத்த மனைவியை பெற்றவர்களும் பார்வைக் குறைவுக்கு ஆளாகுகின்றனர்.
நீல நிறக்கண்கள் படைத்தவர்கள் தரித்திரம் பிடித்தவர்களாகவும் இருப்பார்கள். இரவு, பகல், ஏற்பட்ட பின்தான் ஆஷுரா நாளோ வேறு நாளோ ஏற்படும். அதற்கு முன்னாக ஆஷுரா நாளும் வேறு எந்த நாளும் இருந்திருக்க முடியாது.
இவற்றைப் பார்க்கும்போது இவ்வாறு கூறியவர் சிந்தனை தெளிவில்லாதவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அவர் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படும் என்ற நோக்கத்தில் தான் மேற்கண்ட செய்திகள் புனையப்பட்டன. ஆ) ஆர்வக் கோளாறு

மார்க்கத்தில் ஆர்வமிருந்தும் அறிவு இல்லாத மூடக் கூட்டத்தினர் நல்ல நோக்கத்தில் ஹதீஸ்களை சுயமாகத் தயாரித்தனர். மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களுக்கு குர்ஆனிலும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் எவ்வளவோ சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. அவை இவர்களுக்கு போதாததால் அந்த வணக்கங்களுக்கு இல்லாத சிறப்புகளை உருவாக்கினார்கள்.
நூஹு பின் அபீ மர்யம் என்பவர் திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனித்தனி சிறப்புகளைக் கூறும் ஸதீஸ்களைத் தயாரித்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
நூஹு பின் அபீ மர்யம் என்பவர் திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனித்தனி சிறப்புகளைக் கூறும் ஸதீஸ்களைத் தயாரித்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
மோதிரம் அணிந்து தொழுவது மோதிரம் அணியாமல் தொழும் எழுபது தொழுகைகளை விடச் சிறந்தது.
தலைப்பாகை அணிந்து தொழுவது தலைப்பாகை இல்லாமல் தொழும் இருபத்தி ஐந்து தொழுகைகளை விடச் சிறந்தது.
தலைப்பாகை அணிந்து ஒரு ஜும்ஆ தொழுகை தொழுவது தலைப்பாகை இல்லாமல் தொழும் எழுபது ஜும்ஆக்களைவிடச் சிறந்தது.
நகங்களை இன்னின்ன நாட்களில் வெட்ட வேண்டும். முதலில் இந்த விரலில் ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் ஏராளமான ஹதீஸ்கள்.
முஹம்மத் என்ற பெயரைத் கேட்டவுடன் கட்டை விரல் நகங்களால் கண்களில் தடவுதல்.
ரஜப் 27க்கு சிறப்புத் தொழுகை, நோன்பு நோற்பது.
ஷஅபான் 15ம் இரவில் நூறு ரக்அத் தொழுவது மற்றும் அந்த இரவின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள்.
ரஜப் மாதத்தின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள். குறிப்பிட்ட பகல், குறிப்பிட்ட இரவுக்கென்று குறிப்பிட்ட வணக்கங்கள்.
ஆஷுரா நாளைப்பற்றிக் கூறப்படும் சிறப்புகள் அடங்கிய ஹதீஸ் (அந்நாளில் மூஸா நபி காப்பாற்றப்பட்டார்கள். அந்நாளில் நோன்பு நோற்க வேண்டும் என்பது மட்டும் தான் ஆதாரப்பூர்வமானவை)
பாத்திஹா, ஆலஇம்ரான், பகரா, ஆயத்துல் குர்ஸீ, பகராவின் கடைசி இரு வசனங்கள், கஹ்பு அத்தியாயம், குல்வல்லாஹு அத்தியாயம், குல்அவூது பிரப்பில் ஃபலக், குலஅவூது பிரப்பின்னாஸ் அத்தியாயங்கள், இதா ஸுல்ஸிலத், குல்யா அய்யுஹல் காஃபிருன், தபாரகல்லதி தவிர மற்ற அத்தியாயங்களின் சிறப்பு பற்றிக் கூறப்படும் ஹதீஸ்கள் யாவும் இட்டுக்கட்டப்பட்டவை.
அமல்களில் ஆர்வமூட்டுவதாக எண்ணிக் கொண்டு இட்டுகட்டப்பட்டவைகளுக்கு இவை உதாரணங்கள்.
இ) தனி மரியாதை பெறுவதற்காக
மார்க்க அறிஞர்களுக்கு மற்ற மதங்களில் உள்ளது போன்ற அந்தஸ்து இஸ்லாத்தில் இல்லை. மற்ற மதங்களின் கடவுளின் ஏஜெண்டுகளாக மதகுருமார்கள் மதிக்கப்படுகின்றனர். புரோகிதர்களாகச் செயல்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் அதை அறவே ஒழித்துவிட்டது. இதைக் கண்ட போலி அறிஞர்கள் மற்ற மதங்களில் உள்ளது போல் தங்களுக்கும் மரியாதை வேண்டும் என்பதற்காக ஹதீஸ்களை உருவாக்கிக் கொண்டார்கள்.

ஆலிமுக்கு முன்னால் மாணவன் அமர்ந்தவுடன் அவனுக்கு அல்லாஹ் தனது அருளின் எழுபது வாசல்களைத் திறந்து விடுகிறான் அவரை விட்டு எழும்போது அன்று பிறந்த பாலகனைப் போல் எழுகிறான். அவன் கற்ற ஒவ்வொரு எழுத்துக்காகவும் ஒரு ஷஹீதுடைய நன்மையைத் தருவான்.
சொர்க்கத்திலும் உலமாக்கள் தேவைப்படுவார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அல்லாஹ்வை சொர்கவாசிகள் சந்திப்பார்கள் வேண்டியதைக் கேளுங்கள் என்று அல்லாஹ் கூறுவான். அவர்களுக்கு என்ன கேட்பது? என்று தெரியாததால் உலாமாக்களிடம் சென்று கேட்பார்கள். இன்னின்னதைக் கேளுங்கள் என்று உலாமாக்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.
ஒரு ஆலிமோ அல்லது ஆலிமுக்கு படிக்கும் மாணவரோ ஒரு ஊரைத் கடந்து சென்றால் அவ்வூரில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நாற்பது நாட்கள் வேதனையை அல்லாஹ் நிறுத்தி விடுவான்.
ஒரு ஆலிமுடைய சபையில் அமர்வது ஆயிரம் ரக்அத்கள் தொழுவதைவிட சிறந்தது.
என் சமுதாயத்தின் உலாமாக்கள் பனீ இஸ்ரவேலர்களின் நபிமார்களைப் போன்றவர்கள்.
ரகசியமான ஒரு இல்மு (ஞானம்) உள்ளது. அதை எனது நேசர்களுக்கு மட்டும் நான் வழங்குவேன். எந்த மலக்கும் எந்த நபியும் இதை அறிய முடியாது என்று அல்லாஹ் கூறுவதாக அறிவிக்கப்படும் ஹதீஸ்.

ஒரு ஆலிமை யாரேனும் அவமானப்படுத்தினால் கியாமத் நாளில் மக்கள் மத்தியில் வைத்து அல்லாஹ் அவரை அவமானப்படுத்துவான்.
யாரேனும் உலமாக்களைச் சந்தித்தால் அவர் என்னை சந்தித்தவர் போலாவார். உலாமாக்களிடம் முஸாபஹா செய்தால் அவர் என்னிடம் முஸாபஹா செய்தவர் போன்றவராவார்.
ஆலிமுடைய பேனாவின் மைத்துளி ஆயிரம் ஷஹீத்களின் இரத்தத்தை விட சிறந்தது.
இவையெல்லாம் போலி மார்க்க அறிஞர்கள் தங்களது மதிப்பை உயர்த்திக் கொள்வதற்காக இட்டுகட்டியவைகளாகும்.
ஈ) மன்னர்களை மகிழ்விக்க
மன்னர்களின் தவறுகளை நியாயப்படுத்தவும், அவர்களுக்கு மக்கள் அதிகமான மரியாதை தரவேண்டும் என்பதற்காகவும் போலி அறிஞர்கள் பொய்யான ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்கள். மன்னர் மஹ்தியின் ஆட்சியின் போது அவருக்கு ஏற்ப ஹதீஸ்களை இட்டுக் கட்டிய கியாஸ் பின் இப்ராஹீம் இதற்கு உதாரணமாக கூறப்படுகின்றார்.

மன்னர்களுக்கு தண்டனை இல்லை.
மன்னரின் அனுமதி இன்றி ஜும்ஆ தொழுகை இல்லை.
என்பன போன்ற ஹதீஸ்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம் இது மன்னர்களுக்குகாகச் சொன்னதால் இவை பிரபலமாகவில்லை. மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இத்தகைய பொய்கள் கிடைக்கின்றன.
உ) இயக்க வெறி
மத்ஹபு வெறி, இயக்க வெறி, இனவெறி, ஒரு மனிதன் மீது கொண்ட பக்திவெறி காரணமாகவும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.
மத்ஹபு வெறி, இயக்க வெறி, இனவெறி, ஒரு மனிதன் மீது கொண்ட பக்திவெறி காரணமாகவும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.
மத்ஹபு இமாம்களைப் புகழ்ந்து இகழ்ந்தும் தயாரிக்கப்பட்ட ஹதீஸ்கள்
அலி (ரலி) யைப் புகழ்ந்தும் மற்ற நபித்தோழர்களை இகழ்ந்தும் கூறக்கூடிய ஹதீஸ்கள்.
துருக்கியர், சூடானியர், அபிசீனியர், பாரசீகர் போன்றவர்களைப் புகழ்ந்தும் இகழ்ந்தும் உருவாக்கப்பட்டவை.
ஒரு மொழியை புகழ்ந்தும் மற்ற மொழியை இகழ்ந்தும் கூறுகின்ற ஹதீஸ்கள்.
அது போல் நெசவு, விவசாயம் போன்ற தொழில்களின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஹதீஸ்களும் இந்த வகையைச் சேர்ந்தவையாகும்.
இந்த வகையில் முதலிடத்தில் இருப்பவர்கள் ஷியாக்கள். அலியின் சிறப்பைக் கூறும் வகையில் இவர்கள் இட்டுக் கட்டிய ஹதீஸ்கள் கணக்கிலடங்காது.
இவை அனைத்தும் இத்தகைய வெறியின் காரணமாக இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.
ஊ) பேச்சைப் பிழைப்பாக்கியவர்கள்
மக்கள் மத்தியில் உருக்கமாகவும் சுவையாகவும் உரை நிகழ்த்தி அதன் மூலம் அன்பளிப்புப் பெறும் ஒரு கூட்டத்தினர் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் நடமாடி வந்தனர்.
நீண்ட நேரம் - புதுப்புது விஷயங்களைப் பேசி மக்களை கவர வேண்டும் என்பதற்காக இவர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ்கள் தான் இவற்றில் அதிக அளவில் காணப்படுகின்றன. இவர்கள் எந்த அளவுகோலும் வைத்திருப்பதில்லை. அன்றைய தினம் கைத்தட்டல் பெறுவதற்காக எதை வேண்டுமென்றாலும் கூறுவார்கள்.
பெரும்பாலும் வரலாறுகளில் தான் கைவரிசை காட்டினார்கள்.

ஸவ்ர் குகையில் சிலந்தி வலை பிண்ணியது. புறா முட்டையிட்டது.
இரண்டு உமர்களில் ஒருவர் மூலம் இஸ்லாத்தைப் பலப்படுத்து என்று நபிகள் நாயகம் துஆக் கேட்டது.
அபூஜஹ்லுடன் நபிகள் நாயகம் (ஸல்) மல்யுத்தம் செய்தது.
சந்திரன் பிளந்து பூமிக்கு வந்து நபிகள் நாயகத்தின் சட்டைக்குள் நுழைந்த, இரு கைகள் வழியாக இரு பாதிகளாக வெளியே வந்தது.
ஹிழ்ர், இஸ்மாயீல் ஆகிய நபிமார்கள் உயிருடன் இருக்கிறார்கள். மினாவில் ஆண்டுதோறும் அவர்கள் சந்தித்து கொள்கிறார்கள் என்ற ஹதீஸ்கள்.
அலி (ரலி)க்காக மறைந்த சூரியன் மீண்டும் உதித்தது.
முஹம்மது என்று பெயர் வைக்கப்பட்டவர் சொர்க்கம் செல்வார் என்பது.
எதிர்காலத்தில் இந்த வருடத்தில் இது நடக்கும்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அது நடக்கும்.
செஸ் விளையாடுபவன் சபிக்கப்பட்டவன்.
இப்படியெல்லாம் இட்டுக் கட்டினார்கள். மக்கள் புதுமையாகப் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் குறிக்கோளாக இருந்ததால் நல்ல கருத்துகள் அடங்கிய பழமொழிகள், தத்துவங்கள் ஆகியவற்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக அரங்கேற்றியவர்களும் இவர்களே!
அன்பு அதிகமானால் மரியாதை போய்விடும்.
சிறிய கவளமாக உண்ண வேண்டும். மென்று சாப்பிட வேண்டும்.
கஞ்சன் அல்லாஹ்வின் பகைவன்.
தட்டு சிறியதாக இருப்பதில் பரகத் உள்ளது.
சிறிது நேரம் சிந்திப்பது ஒரு வருடம் வணங்குவதை விடச் சிறந்தது.
நாட்டுப்பற்று ஈமானில் ஒரு பகுதி.
வறுமை எனக்குப் பெருமை.
உண்ணும் போது பேசக் கூடாது.
தடுக்கப்பட்டவைகள் இனிமையாகத் தெரியும்.
ஒருவனுக்கு எது தெரியவில்லையே அதற்கு அவன் எதிரியாக இருப்பான்.
அடுத்தவனுக்கு குழி வெட்டியவன் அதில் வீழ்வான்.
தெரியாது என்று கூறுவது பாதி கல்வியாகும்.
பிகள் நாயகத்தின் வியர்வையிலிருந்து தான் ரோஜா படைக்கப்பட்டது.
நல்லவர்கள் செய்யும் நல்ல காரியங்கள் மிக நல்லவர்களுக்கு கெட்டதாகத் தெரியும்.
மூஃமினின் உமிழ் நீர் நோய் நிவாரணியாகும்.
தனிமையில் தான் ஈமானுக்கு பாதுகாப்பு.
பல் துலக்குவது பேச்சாற்றலை வளர்க்கும்.
நல்லடியார்களைப் பற்றி பேசினால் அங்கு அருள் இறங்கும்.
எந்த இடத்தில் மக்கள் கூட்டமாகக் இருக்கிறார்களோ அங்கே நிச்சயம் ஒரு வலியுல்லாஹ் இருப்பார். ஆனால் அவர்கள் அதை அறிய மாட்டார்கள். அவரும் கூட, தான் வலியுல்லாஹ் என்பதை அறியமாட்டார்.
நோயாளி முனகுவது தஸ்பீஹ் ஆகும்.
சாவதற்கு முன் செத்து விடுங்கள்.
அறிவு இல்லாதவனுக்கு மார்க்கம் இல்லை.
அலீ (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) செய்த வஸிய்யத் என்ற பெயரில் ஏராளமான கட்டுக் கதைகள்..........
இப்படி ஏராளமான ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.
எ) சுயலாபத்திற்காக இட்டுக் கட்டியோர்
ஒவ்வொருவரும் தாம் சார்ந்துள்ள துறையைத் குறித்து நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துச் சொன்னதாக இட்டுக்கட்டினார்கள். இவர்களில் மகா கெட்டவர்கள் வைத்தியர்களாவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மருத்துவம் கற்றுக் கொடுக்க அனுப்பப்படவில்லை. தேன், பேரீச்சம் பழம், கருஞ்சீரகம் போன்ற மிகச் சில பொருட்களின் சில மருத்துவ குணம் பற்றி நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.

ஆனால் யுனானி வைத்தியர்கள் என்ற பெயரில் உருவான சில பித்தலாட்டக்காரர்கள் நபிவழி மருத்துவம் என்று பெயர் சூட்டிக் கொண்டு ஏராளமாக இட்டுக்கட்டியுள்ளனர்.
இவர்கள் செய்யும் எல்லா வைத்தியமும் நபிவழி மருத்துவம் என்றனர்.
ஒவ்வொரு நோய்க்கும், நபி(ஸல்) மருந்து கூறியதாகக் சித்தரித்தனர். ஒவ்வொரு பொருளின் மருத்துவ குணம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருப்பதாகவும் இட்டுக்கட்டினார்கள்.
இன்றும் கூட இந்த யுனானி வைத்தியர்கள் நபிகள் நாயகம் (ஸல்) பெயரில் கூறுவதில் 99 சதவீதம் இட்டுக்கட்டப்பட்ட பச்சைப் பொய்யாக இருப்பதைக் காணலாம்.
ஏ) மூளை குழம்பியவர்களின் உளறல்கள்
சில பேர் முதுமையின் காரணமாக, மூளை குழம்பியதன் காரணமாக - நினைவாற்றல் குறைவு காரணமாக பொய் சொல்ல வேண்டும் என்ற நோக்கமில்லாமல் பொய்யான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் சில சாம்பிள்கள்தாம் இவை. நல்லறிஞர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையெல்லாம் அம்பலப்படுத்தும் வகையில் தனியாக நூற்களையே எழுதியுள்ளனர். இப்னுல் ஜவ்ஸீ, முல்லா அலீ காரி, சுயூத்தி போன்ற அறிஞர்களின் நூற்கள் மிகவும் பிரசித்தி பெற்றவைகளாகும்.
தங்களின் முழுவாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்பணித்து இட்டுக்கட்டப்பட்டவைகளை இந்த நல்ல அறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள். இந்தப் பொய்களை இவர்கள் களையெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்காவிட்டால் இஸ்லாத்துக்கும் ஏனைய மார்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும்.
ஆனால் இன்றைக்கும் கூட மார்க்க அறிஞர்கள் இந்தப் பொய்களை மேடைகளிலும் ஜும்ஆப் பிரசங்கங்களிலும் கூறி வருகிறார்கள். இது தான் வேதனையான ஒன்று குறைந்த பட்சம் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் பற்றிய நூற்களையாவது மதராஸக்களின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். 3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)

மவ்ளூவு எனும் இட்டுக்கட்டப்பட்ட ஹதிஸ்களுக்கு அடுத்த நிலையில் அமைந்தவை மத்ருக் எனும் ஹதீஸ்களாகும்.
அறிவிப்பாளர்களில் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் இடம் பெறுவது மத்ரூக் எனப்படும். ஹதீஸ்களில் அவர் பொய் கூறினார் என்பது நிருபிக்கபடாவிட்டாலும் பொதுவாக அவர் பொய் பேசக் கூடியவர் என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்களும் மத்ரூக் எனப்படும்.
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுக்கும் மத்ரூக் எனும் ஹதீஸ்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மவ்ளூவு என்றால் அறிவிப்பாளர் பொய்யர் என்பது சந்தேகமற நிரூபிக்கப்பட்டிருக்கும். மத்ருக் என்பதில் பொய்யர் என்பது திட்டவட்டமாக நிரூப்பிக்கப்பட்டிருக்காது. எனினும் பரவலாக அவர் மேல் பொய்யர் என்ற சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கும். இரண்டுமே அடியோடு நிராகரிக்கப்படும் என்பதில் எந்த அறிஞரும் மாற்றுக்கருத்து கொள்ளவில்லை.
4. ளயீப் (பலவீனமானது)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா இல்லையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியவை ளயீப் எனப்படும். அந்தச் சந்தேகம் பல காரணங்களால் ஏற்படலாம். சந்தேகத்திற்குரியவற்றை நாம் பின்பற்றக் கூடாது.
சந்தேகம் ஏற்பட்டால் ஏன் பின்பற்றக் கூடாது?
உனக்கு திட்டவட்டமான அறிவு இல்லாததை பின்பற்றாதே (அல்குர்ஆன் 17:36) என்று அல்லாஹ் கூறுகிறான். உனக்கு சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதின் பால் சென்றுவிடு என்பது நபிமொழி அறிவிப்பவர் : ஹஸன் (ரலி) நூல் : திர்மிதீ, அஹ்மத். ஹாகிம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா என்ற சந்தேகம் வந்தால் அதை பின்பற்றுவது தடை செய்யப்பட்டுள்ளதை மேற்கண்ட ஆதாரங்கள் கூறுகின்றன.
பலவீனமான ஹதீஸ்கள் நூறு இருந்தாலும் அவை ஒருக்காலும் பலமானதாக ஆகாது. நூறு நோய்கள் சேர்ந்தால் நோய் அதிகமாகுமே தவிர நோய் போகாது. அந்தச் சந்தேகம் எப்படியெல்லாம் ஏற்படுகின்றன என்பதைப் பொறுத்து பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ளயீபின் வகை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அ) அறிவிப்பாளர் தொடரை வைத்துக் கீழ்கண்ட விதமாக ளயீபான ஹதீஸ்களை வகைப்படுத்தலாம்.
i.முர்ஸல்
i.முர்ஸல்
ஹதீஸ்களுக்கு அறிவிப்பாளர் தொடர் அவசியம் என்பதை முன்னர் குறிப்பிட்டோம். எல்லா அறிவிப்பாளர்களையும் சரியாகக் கூறிவிட்டு நபித்தோழரை மட்டும் கூறாவிட்டால் அத்தகைய ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும்.
உதாரணத்துக்காக நாம் முன்னர் சுட்டிக்காட்டிய திர்மிதீயின் முதல் ஹதீஸையே எடுத்துக் கொள்வோம்.
ஹன்னாத் - வகீவு - இஸ்ராயில் - ஸிமாக் - முஸ்அப் - நபிகள் நாயகம் என்ற சங்கிலித் தொடரில் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டதாக வைத்துக் கொள்வோம்.
அறிவிப்பாளர் தொடர் சரியாகவே கூறப்பட்டாலும் நபித்தோழர் மட்டும் விடப்பட்டு விட்டார். முஸ்அப் என்பவர் நபித்தோழர் அல்ல. அவர் இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்கவே முடியாது. ஆனால் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக தாபியீன்களைச் சேர்ந்த முஸ்அப் கூறுகிறார்.
இத்தகைய தன்மையில் அமைந்த ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும்.
முர்ஸல் எனும் தரத்திலமைந்த ஹதீஸ்களை ஏற்கலாமா? கூடாதா? என்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு உள்ளது. அதற்கு ஒரு அடிப்படையும் உள்ளது.
அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையை ஆராயும் போது நபித்தோழர்களைப் பற்றி ஆராய மாட்டார்கள். ஏனெனில் நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். அவர்கள் மனிதர்கள் என்ற முறையில் சில தவறுகள் செய்திருக்ககூடும். என்றாலும் நிச்சயமாக நபிகள் நாயகத்தின் பெயரால் எதையும் இட்டுக்கட்டவே மாட்டார்கள். நபித் தோழர்களை அல்லாஹ்வும் புகழ்ந்து பேசுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் புகழ்ந்து பேசியுள்ளார்கள்.
மேலும் ஒருவர் நம்பகமானவர் அல்ல என்று கூறுவதாக இருந்தால் அவரது காலத்தவர் தான் கூறவேண்டும். ஒரு நபித்தோழர் பற்றி வேறொரு நபித் தோழர்தான் நம்பகமற்றவர் எனக் கூறவேண்டும். எந்த நபித்தோழரும் எந்த நபித் தோழர் பற்றியும் இத்தகைய விமர்சனம் செய்ததில்லை. எனவே நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பது ஷியாக்களைத் தவிர உலக முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மையாகும்.
இப்போது முர்ஸல் என்ற தன்மையில் அமைந்த ஹதீஸுக்கு வருவோம் இந்த ஹதீஸில் நபித்தோழர் தான் விடப்பட்டுள்ளார். விடப்பட்டவரின் பெயரோ மற்ற விபரமோ தெரியவிட்டாலும் விடப்பட்டவர் நபித்தோழர் என்பது உறுதி அவர் யாராக இருந்தால் நமக்கென்ன? நபித்தோழர் தான் விடப்பட்டுள்ளார் என்று தெரிவதால் மற்ற அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களாக இருப்பதால் - இது ஏற்கப்பட வேண்டியது தான் என ஒரு சாரார் கூறுகின்றனர்.
இந்த வாதம் பாதிதான் சரியானது. நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் முர்ஸல் என்ற நிலையில் உள்ள ஹதீஸ்களில் நபித்தோழர் தான் விடுபட்டிருப்பார் என்பது நிச்சயமானதல்ல.
இத்தகைய ஹதீஸை அறிவிக்கும் தாபியீ ஒருவர் தம்மைப் போன்ற மற்றொரு தாபியீயிடம் இதைக் கேட்டிருக்கலாம். அந்தத் தாபியீ நபித்தோழரிடம் கேட்டிருக்கலாம். இதற்கு சாத்தியம் உள்ளது. முர்ஸல் என்றால் விடுபட்டவர் நபித்தோழர் மட்டும் தான் என்று நிச்சயமாகக் கூறமுடியாது. ஒரு தாபியீயும் நபித்தோழரும் கூட விடுபட்டிருக்கலாம்.
அந்த தாபியீ யார்? அவர் நம்பகமானவர் தானா? என்பதைக் கட்டாயம் பரிசீலிக்க வேண்டும் அவர் யார் என்பதே தெரியாத போது பரிசீலிக்க எந்த வழியும் இல்லை.
எனவே நபித்தோழர் மட்டுமோ அல்லது நபித்தோழரும் ஒரு தாபியீயுமோ விடுபட்டிருக்க வாய்ப்புள்ளதால் சந்தேகத்திற்குரியதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.
இவர்களின் வாதத்தில் வலிமை உள்ளதால் இதுவே சரியானதாகும்.
ஒரு நம்பகமான தாபியீ நான் எந்த ஸதீஸையும் நபித்தோழர் வழியாகவே அறிவிப்பேன் என்று அறிவித்திருந்தால் அத்தகைய முர்ஸலை ஆதாரமாகக் கொள்ளலாம் எனக் கூறினால் அதை ஏற்கலாம். ஆனால் எந்த தாபியீயும் அவ்வாறு கூறியதாக நாம் அறியவில்லை.

ii முன்கதிவு (தொடர்பு அறுந்தது)
நபித்தோழர் விடுபட்டிருந்தால் அல்லது நபித்தோழர் தான் விடுபட்டிருக்கிறார் என்ற சந்தேகம் இருந்தால் அதை முர்ஸல் என்றோம். வேறு அறிவிப்பாளர்கள் இடையில் விடுபட்டிருப்பார்கள் என்றால் அல்லது விடுபட்டிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் அத்தகைய ஹதீஸ்களை முன்கதிவு (தொடர்பு அறுந்தவை) என்பார்கள்.
உதாரணத்துக்கு திர்மிதீயின் அந்த முதல் ஸதீஸையே எடுத்துக் கொள்வோம்.
ஹன்னத் - வகீவு - இஸ்ராயீல் - ஸிமாக் - முஸ்அப் - இப்னு உமர் - நபிகள் நாயகம்.
இதில் சிமாக் என்பவர் முஸ்அபியிடம் செவியுறவில்லை என்று வைத்துக் கொள்வோம். முஸ்அபிடம் இதைச் செவியுறவில்லையானால் முஸ்அபிடம் யார் செவியுற்றாரோ அவரிடமிருந்து இதைச் செவியுற்றிருப்பார் ஆனால் அவரைக் குறிப்பிடவில்லை என்பது இதன் பொருள்.
இதைப்புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை பார்ப்போம். 2000ஆவது வருடத்தில் 40 வயதில் காந்தி கூறியதாக ஒரு செய்தியைக் கூறுகிறார். அவர் பொய் சொல்லாத நம்பிக்கைகுரியராகவும் இருக்கிறார். காந்தி கொல்லப்படும் போது பிறக்காத இவர் காந்தி கூறியதாகத் தெரிவித்தால் யாரோ இவருக்கு அதைச் சொல்லியிருக்க வேண்டும்.
இது போன்ற தன்மைகளில் அமைந்தவை முன்கதிவு எனப்படும். இதைக் கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளன.
ஒருவரிடமிருந்து மற்றவர் அறிவிக்கிறார் என்றால் இருவரது வரலாற்றையும் ஆராய்வதன் மூலம் இதைக்கண்டு பிடித்துவிடலாம்.
A என்ற அறிவிப்பாளர் ஹிஜ்ரி 120ல் மரணித்து விட்டார். B என்ற அறிவிப்பாளர் 120ல் பிறந்தார் என்று வைத்துக் கொள்வோம். A என்பவர் Bயின் வழியாக ஒரு செய்தியை அறிவித்தால் நிச்சயம் இடையில் ஒருவரோ இருவரோ விடுபட்டிருப்பார்கள் என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.
A மக்காவில் வாழ்ந்தார் B எகிப்தில் வாழ்ந்தார். A ஒரு போதும் எகிப்து செல்லவில்லை. B ஒரு போதும் மக்கா செல்லவில்லை. வேறு பொது இடத்தில் இருவரும் சந்தித்ததாகவும் வரலாற்றுக் குறிப்பு இல்லை. ஆயினும் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த நிலையில் A என்பார் B வழியாக ஒன்றை அறிவித்தால் யார் மூலமாகவோ தான் அதை அறிந்திருக்க முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
A 120 வருடம் இறந்தார். B 115ல் பிறந்தார். இப்போது A யிடமிருந்து B அறிவித்தாலும் இடையில் யாரோ விடுபட்டிருப்பதைப் புரிந்து கொள்ளலாம். ஏனெனில் A மரணிக்கும் போது B யின் வயது ஐந்து தான். ஐந்து வயதில் ஹதீஸ்களைக் கேட்டு அறிவிக்க முடியாது.
A யிடமிருந்து B அறிவிக்கும் என்பவர், தான் அவரைப் பார்த்ததே இல்லை என்று வாக்கு மூலம் தருகிறார். அப்போதும் யாரோ விடுபட்டதைக் கண்டுபிடித்து விடலாம்.
இத்தகைய தன்மையில் அமைந்த ஹதீஸ்கள் ஆதாரமாகக் கொள்ளப்படாது. இதை ஏற்று அமல் செய்ய முடியாது. ஏனெனில் விடுபட்டவர் பொய்யராக இருக்ககூடும் அல்லது நினைவாற்றல் இல்லாதவராக இருக்ககூடும்.

iii) முஃளல்
ஒரே ஒரு அறிவிப்பாளர் விடுபட்டிருந்தால் அதை முன்கதிவு என்றனர். முஃளல் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்பாளர்கள் விடுபட்டதாகும்.
ஒரு அறிவிப்பாளர் விடுபட்டதையே ஆதாரமாகக் கொள்ளமுடியாது என்றால் பலர் விடுபட்டிருப்பதைப் பற்றி கூறத் தேவையில்லை. எனவே இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.
iv) முஅல்லக்
ஒரு நூலாசிரியர் தமக்கு அறிவித்தவரை விட்டு விட்டு அறிவிப்பவை முஅல்லக் எனப்படும்.
வேறு சிலரின் கருத்துப்படி அறிவிப்பாளர் தொடர் அறவே இல்லாதவை முஅல்லக் எனப்படும்.
உதாரணமாக எந்த அறிவிப்பாளர் வரிசையுமில்லாமல் நபிகள் நாயகம் சொன்னார்கள் என்று திர்மிதீ கூறுவதாக வைத்துக் கொள்வோம். அது முஅல்லக் ஆகும்.
அல்லது உதாரணத்துக்கு நாம் எடுத்துக் கொண்ட முதல் ஹதீஸில் ஹன்னாதை மட்டும் விட்டு விட்டு மற்றவர்களைக் கூறுவதாக வைத்துக் கொள்வோம். அதுவும் முஅல்லக் தான்
ஸஹீஹுல் புகாரியில் முஅல்லக் என்ற வகையில் பல ஹதீஸ்கள் உள்ளன. எந்த அறிவிப்பாளர் வரிசையும் இல்லாமல் ஹதீஸை மட்டும் கூறுவார்.
இத்தகைய நிலையில் உள்ள ஹதீஸ்களை ஆய்வு செய்ய வேண்டும். புகாரி போன்றவர்கள் அப்படிக் கூறினால் அவரிடம் அறிவிப்பாளர் தொடர்பு இருக்கிறதா? என்று தேடிப்பார்க்க வேண்டும். வேறு எங்காவது அறிவிப்பாளர் தொடருடன் கூறியிருந்தால் அல்லது வேறு நூற்களில் அதற்கு அறிவிப்பாளர் தொடர் கிடைத்தால் அது நம்பகமானதாகவும் இருந்தால் அதை ஏற்றுச் செயல்படலாம்.
அவ்வாறு கிடைக்கவில்லையானால் விடுபட்டவர்கள் யார் என்பது தெரியாததலால் அதை விட்டு விட வேண்டும்.
ஆ) அறிவிக்கப்படும் செய்தி மற்றும் அறிவிப்பாளரை கவனத்தில் கொண்டு ளயீபான ஹதீஸ்கள் பின்வருமாறு பிரிக்கப்படும்.
i) ஷாத்
அரிதானது என்பது இதன் பொருள்.
ஒரு ஆசிரியரிடம் பல மாணவர்கள் ஒரு ஹதீஸைச் செவியுறுகின்றனர். பத்து மாணவர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.
இந்தப் பத்துப் பேரும் தாம் கேட்ட ஹதீஸைப் பலருக்கும் அறிவிக்கிறார்கள். ஒன்பது பேர் அறிவிப்பது ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் ஒரே ஒருவர் அறிவிப்பது மட்டும் ஒன்பது பேர் அறிவிப்பதற்கு முரணாகவுள்ளது. இப்படி அமைந்த அறிவிப்பைத் தான் ஷாத் என்று கூறுவர்.
தொழுகையில் நான்கு தடவை நபி(ஸல்) கைகளை உயர்த்தினார்கள் என்று ஹதீஸை உதாரணத்திற்காக எடுத்துக் கொள்வோம்.
இப்னு உமர் (ரலி) மூலம் ஸாலிம், நாஃபிவு, முஹாரிப், ஆகியோர் அறிவித்துள்ளனர். அதே இப்னு உமர் (ரலி) மூலம் முஜாஹித் அறிவிக்கும் போது முதல் தக்பீரில் தவிர கைகளை உயர்த்தவில்லை என்கிறார்.
நால்வருமே நம்பகமானவர்கள் தான். ஆனாலும் மூவருக்கு மாற்றாக ஒருவர் அறிவிக்கும் போது அது ஷாத் என்னும் நிலையை அடைகிறது.
இங்கே இரண்டு செய்திகளும் ஒன்றுக்கொன்று முரணானவையாகவுள்ளன. இரண்டில் ஏதேனும் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். இந்த நிலையில் என்ன செய்ய வேண்டும்?
மூன்று பேர் தவறுதலாக கூறுவதை விட ஒருவர் தவறாகக் கூறுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. எனவே மூவர் கூறுவதை ஏற்றுக் கொண்டு ஒருவர் கூறுவதை விட்டுவிட வேண்டும்.
நபித்தோழரிடம் கேட்டவர்களுக்கிடையே தான் இந்த நிலை ஏற்படும் என்று கருதக் கூடாது. அறிவிப்பாளர் வரிசையில் எந்த இடத்திலும் இந்த நிலை ஏற்படும்.
உதாரணமாக குதைபா என்ற அறிவிப்பாளரை எடுத்துக் கொள்வோம். இவரிடம் ஏராளமானவர்கள்
ஹதீஸ்களைக் கற்றுள்ளனர் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, முஸா பின் ஹாருன், ஹஸன் பின் சுஃப்யான், ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள். எல்லோரும் அறிவிப்பதற்கு மாற்றாக நஸயீ மட்டும் வேறு விதமாக அறிவித்தால் அதுவும் ஷாத் என்று வகையில் சேரும்.
ஷாத் என்பது ஹதீஸின் வாசகத்திலும் ஏற்படலாம். அறிவிப்பாளர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதிலும் ஏற்படலாம்.
ஒரு ஹதீஸை ஒரு ஆசிரியர் வழியாக நான்கு பேர் அறிவிப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளர் பெயர் இஸ்மாயில் பின் முஹம்மத் என்று மூன்று பேர் குறிப்பிடுகிறார்கள். ஒருவர் மட்டும் இஸ்மாயீல் பின் மூஸா என்று குறிப்பிடுகிறார்.
ஒரே ஆசிரியிடமிருந்து அறிவிக்கும் இந்தப் பெயர் பட்டியலில் மூவர் குறிப்பிட்ட பெயருக்கு மாற்றாக ஒருவர் குறிப்பிடுவதால் இதுவும் ஷாத் தான். மூவர் குறிப்பிடக்கூடிய பெயர் தான் சரியானதாக இருப்பதற்கு அதிக சாத்தியம் உள்ளது.
அதாவது மூன்றாவது அறிவிப்பாளர்களாக குறிப்பிட்ட இஸ்மாயீல் பின் முஹம்மத் பலவீனமானவராகவுள்ளார். ஆனால் இஸ்மாயீல் பின் மூஸா பலவீனமானவராக இல்லை என்று வைத்துக் கொள்வோம். இந்த இடத்தில் தான் அறிவிப்பாளர் வரிசையிலும் ஷாத் ஏற்படுத்தும் விளைவைப் புரிந்து கொள்ள இயலும்.
இஸ்மாயீல் பின் முஹம்மத் நம்பகமானவரா? இஸ்மாயீல் பின் மூஸா நம்பகமானவரா? என்பதை விட வேறொரு விஷயத்தைத் தான் நாம் கவனிக்க வேண்டும்.
அதாவது இஸ்மாயீல் பின் முஹம்மத் என்பவரைத் தான் மூன்று பேர் கூறுகின்றனர். எனவே இவர்களின் ஆசிரியர் இந்தப் பெயரைத் தான் குறிப்பிட்டிருப்பார். இஸ்மாயீல் பின் மூஸா என்று ஒருவர் கூறுவதால் அந்த அறிவிப்பு ஷாத் என்ற நிலைக்கு வந்துவிடும்.
இஸ்மாயீல் பின் முஹம்மத் என்பது தான் சரியானது என்று நாம் நினைக்கும் போது அந்த ஹதீஸ் பலவீனமாக ஆகிவிடுகிறது. ஏனெனில் இஸ்மாயீல் பின் முஹம்மத் பலவீனமானவராவார்.
அதாவது இஸ்மாயீல் பின் முஹம்மத் என்று பெயரைக் குறிப்பிட்டது தான் சரி என்பது வேறு. இவர் பலவீனராகவுள்ளதால் இந்த அறிவிப்பை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது வேறு. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு ஆசிரியிடமிருந்து ஒரு ஹதீஸை அறிவிக்கும் ஐந்து பேரில் நால்வர் அறிவிப்பதற்கு மாற்றமாக - முரணாக ஒருவர் அறிவிப்பது தான் ஷாத். நால்வர் கூறாத ஒரு விஷயத்தைச் சேர்த்துக் கூறினால் அது ஷாத் அல்ல. அதையும் நாம் ஏற்கலாம். ஏற்கவேண்டும்.
“முதல் ரக்அத்தில் இக்லாஸ் அத்தியாயம் ஓதினார்கள்.” என்பது ஒரு ஆசிரியிர் வழியாக நால்வரின் அறிவிப்பு.
“முதல் ரக்அத்தில் இக்லாஸும் இரண்டாவது ரக்அத்தில் நாஸ் அத்தியாத்தையும் ஓதினார்கள்” என்று ஒருவர் அறிவிக்கிறார்.
இது ஷாத் எனும் வகையில் சேராது. ஏனெனில் நால்வர் கூறியதை இது மறுக்கவில்லை. மாறாக ஒப்புக் கொள்வதுடன் மேலும் அதிகமான ஒரு செய்தியைக் கூறுகிறது. இவரும் நம்பகமானவராகவுள்ளதால் இந்த அறிவிப்பையும் நாம் ஏற்க வேண்டும்.
பலபேர் கூறாமல் விட்டு விட்டதை ஒரே ஒருவர் மட்டும் கூறுவது சர்வ சாதரணமான நிகழ்வுதான்.
இது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விளக்கமாகும்.
ஒரு ஆசிரியிர் வழியாக இல்லாமல் வெவ்வேறு ஆசிரியர் வழியாக பலரும் பல விதமாக அறிவித்தால் ஷாத் என்ற பேச்சு அங்கே எழாது.
நான்கு பேர் ஹன்னாத் வழியாக ஒரு செய்தியை அறிவிக்கின்றனர். ஆனால் ஒருவர் குதைபா வழியாக அதற்கு மாற்றாக அறிவிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் ஒருவர் அறிவிப்பது தவறு, நால்வர் அறிவிப்பது சரி எனக்கூறமுடியாது. ஏனெனில் உண்மையில் இவர்கள் முரண்படவில்லை. இவர்கள் யாரிடம் செவியுற்றார்களோ அவர்களிடம் தான் முரண்பாடு உள்ளது. இந்த ஒருவர் தனது ஆசிரியரிடம் கேட்டதை அறிவிக்கிறார். அந்த நால்வர் தமது ஆசிரியரிடம் செவியுற்றதை அறிவிக்கிறார்கள்.
எனவே இதை ஷாத் எனக் கூறமுடியாது. முரண்பாடாகக் கூறி இவர்களது இரு ஆசிரியர்களின் தகுதிகளையும் இன்ன பிற அம்சங்களையும் கவனத்தில் கொண்டு எது சரியானது? என்ற முடிவுக்கு வரவேண்டும்.
ஒரு ஆசிரியரிடமிருந்து பல மாணவர்கள் அறிவிக்கும் போது பலர் அறிவிப்பது ஒரு விதமாகவும் ஒருவர் அறிவிப்பது அதற்கு முரணாகவும் இருந்தால் அதை ஷாத் என்றோம். பலர் அறிவிக்கிறார்களே அதற்கு ஒரு பெயரைச் சூட்டியுள்ளனர். இதை மஹ்பூள் எனக் கூறுவார்கள். ஒரு ஹதீஸைப்பற்றி மஹ்பூள் எனக் கூறப்பட்டால் எதிராக ஷாத் எனும் ஒரு அறிவிப்பு உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மஹ்பூள் என்பது ஆதாரமாகக் கொள்ளத்தக்கதாகும்.
ii) முன்கர் (நிராகரிக்கப்பட்டது)
ஒரு ஆசிரியரிடமிருந்து கற்ற பல மாணவர்கள் ஒரு செய்தியை எப்படி அறிவிக்கிறார்களோ அதற்கு முரணாக ஒரே ஒருவர் அறிவித்தால் அவர் நம்பகமானவராகவும் இருந்தால் அதை ஷாத் என்று அறிந்தோம். மற்றவர்களை விட உறுதி குறைந்தவராக - நினைவாற்றல் குறைவானவராக அந்த ஒருவர் இருந்துவிட்டால் அது முன்கர் எனப்படும்.
ஒருவர் அறிவிக்கும் ஹதீஸ் பற்றி முன்கர் என்று கூறப்பட்டால் அதற்கு மாற்றமாக அதே ஆசிரியர் வழியாக மற்ற மாணவர்கள் அறிவித்துள்ளனர். அவர்கள் நம்பகமானவர்களாகவும் அந்த ஒருவர் பலவீனமானவராகவும் உள்ளார் என்பது பொருளாகும். ஷாத் என்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களையே ஆதாரமாகக்கூட கொள்வதில்லை எனும் போது முன்கர் என்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை.
இப்னுஸ் ஸலாஹ் போன்ற அறிஞர்கள் முன்கர், ஷாத் இரண்டுமே ஒரு வகைக்கான இரண்டு பெயர்கள் என்று கூறுகின்றனர்.
முன்கர் என்ற நிலையில் இல்லாத ஹதீஸ்கள் மஃரூஃப் என்று கூறப்படும்.
அதாவது ஒரு ஆசிரியரிடமிருந்து ஜந்து மாணவர்கள் அறிவிக்கின்றனர். ஜவரில் நால்வர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஒருவர் மட்டும் அறிவிக்கிறார். அந்த நால்வர் நம்பகமானவர்களாக இருப்பது போல இந்த ஒருவர் நம்பகமானவராக இல்லை. இந்த ஒருவர் அறிவிப்பது முன்கர் என்போம் அந்த நால்வர் அறிவிப்பது தான் மஃரூஃப். மஃரூஃப் என்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஒரு வகையாகும். இ) அறிவிக்கப்படும் விதத்தை கவனத்தில் கொண்டு ளயீபான ஹதீஸ்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்படும்.

i) முதல்லஸ்
பலவீனமான ஹதீஸ்களில் முதல்லஸ் என்பது ஒருவகையாகும். முதல்லஸ் என்றால் என்ன? என்பதைப் புரிந்த கொள்ள ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசை எவ்வாறு அமைந்திருக்கும்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு திர்மிதீயின் இரண்டாவது ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை எவ்வாறு அமைந்துள்ளது? என்பதைப் பர்ப்போம்.
1. நமக்கு இஸ்ஹாக் பின் மூஸா அல்அன்ஸாரி அறிவித்தார்.
2. மஃன் பின் ஈஸா நமக்கு அறிவித்தார் என்று அவர் கூறினார்.
3. மாலிக் பின் அனஸ் நமக்கு அறிவித்தார் என்று மஃன் பின் ஈஸா கூறினார்.
4. நமக்கு குதைபா அறிவித்தார் என்று மாலிக் பின் அனஸ் கூறினார்.
5. குதைபா, மாலிக் வழியாக அறிவித்தார்.
6. மாலிக், ஸுஹைல் பின் அபீஸாலிக் வழியாக அறிவித்தார்.
7. ஸுஹைல் பின் ஆபீ ஸாலிஹ், தம் தந்தை அபூ ஸ்லிஹ் வழியாக அறிவித்தார்.
8. அபூஸாலிஹ், அபூஹுரைரா (ரலி) வழியாக அறிவித்தார்.
9. அபூஹுரைரா (ரலி) நபி (ஸல்) கூறியதாக பின்வரும் செய்தியைக் கூறினார்.
இது திர்மிதீயின் நூலின் இரண்டாவது ஹதீஸின் அறிவிப்பாளர் தொடராகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய இந்தச் செய்தி சங்கிலித் தொடராக ஒன்பது நபர்களின் வழியாக திர்மிதீ இமாமுக்குக் கிடைத்துள்ளது.
இந்தப்பட்டியல் எவ்வாறு அமைந்துள்ளது? என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்!
ஆரம்பத்தில் நமக்கு இஸ்ஹாக் அறிவித்தார் என்று கூறப்படுகிறது. இமாம் திர்மிதீ நேரடியாக இஸ்ஹாக் இடம் கேட்டிருந்தார் என்பது நமக்கு அறிவித்தார் என்ற வாசக அமைப்பிலிருந்தே விளங்குகிறது.
இது போல் 2,3,4 ஆகிய அறிவிப்பாளர்களும் தமக்கு முந்திய அறிவிப்பாளர்களிடம் நேரடியாக அதைக் கேட்டுள்ளனர் என்பது வாசக அமைப்பிலிருந்தே அறியப்படுகிறது. எல்லோருமே நமக்கு இதை அறிவித்தார் (ஹத்தஸனா) எனக் கூறுகின்றனர்.
ஆனால் ஐந்தாவதாக “குதைபா மாலிக் வழியாக அறிவித்தார்” என்று தான் கூறப்பட்டள்ளது.
இந்த வாசக அமைப்பை பார்க்கும் போது இரு விதமாகப் புரிந்து கொள்ள இயலும்.
குதைபா, மாலிக்கிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாம்.
குதைபா நேரடியாகவே மாலிக்கிடம் கேட்காமல் மாலிக்கிடம் கேட்ட இன்னொருவரிடம் கேட்டிருக்கலாம். அவரை விட்டு விட்டு மாலிக்கை கூறியிருக்கலாம்.
இன்றைக்கும் கூட நாம் அன் அபீஹுரைரா (அபூஹுரைரா மூலம்) என்று கூறுகிறோம். அபூ ஹுரைராவிடம் நாம் கேட்டோம் என்பது இதன் பொருளன்று.
இந்த இடத்தில் குதைபா என்பார் மாலிக்கிடம் நேரடியாகக் கேட்டாரா? இடையில் இன்னொருவர் துணையுடன் கேட்டாரா? என்பதைப் பொருத்தே ஹதீஸின் தரம் முடிவாகும்.
குதைபா, மாலிக்கிடம் நேரடியாகக் கேட்டிருந்தால் இருவரும் நம்பகமானவர்கள் என்பதால் இந்த அறிவிப்பு சரியானது என்று எளிதாக முடிவு செய்து கொள்ளலாம்.
இடையில் ஒருவரை அவர் விட்டிருந்தால் அந்த ஒருவர் பொய்யராக இருக்கலாம். நம்பகமற்றவராக இருக்கலாம். அவரிடம் ஹதீஸைப் பலவீனமாக்கும் ஏனைய குறைபாடுகளில் ஏதேனும் இருக்கலாம்.
எனவே நேரடியாகக் கேட்டாரா? இல்லை? என்பதை முடிவு செய்யும் கட்டாயம் ஏற்படுகிறது.
இது எல்லா நேரத்திலும் அவசியப்படாது.
குதைபா என்பவர் தாம் யாரிடம் நேரடியாகச் செவியுற்றாரோ அவரைத்தான் குறிப்பிடுவார். யாரையும் இடையில் விட்டு விடும் வழக்க முடையவரல்ல என்பது வேறு வழியில் நமக்குத் தெரிந்திருந்தால் இந்த இடத்தில் யாரோ விடுபட்டிருப்பார்கள் என்ற சந்தேகம் ஏற்படாது.
மாலிக் வழியாக குதைபா என்பதை “மாலிக் நமக்கு அறிவித்தார்” என்ற நிலையில் வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் குதைபா என்பவர், தாம் நேரடியாகக் கேட்டாலும் அவர் வழியாக என்று கூறுவார். நேரடியாகக் கேட்டவரை விட்டு விட்டு அதற்கடுத்த அறிவிப்பாளரைக் குறிப்பிட்டு அவர் வழியாக என்று அறிவிப்பார் என்று வைத்துக் கொள்வோம். (குதைபா அப்படிப்பட்டவர் அல்ல. உதாரணத்துக்குத் தான் இவ்வாறு கூறினோம்.)
இப்போது மாலிக் வழியாக என்று அவர் கூறுகிறார் என்றால் ஆசிரியரை விட்டு விட்டு ஆசிரியரின் ஆசிரியரைக் குறிப்பிடும் அவரது வழக்கம் காரணமாக யாரோ இடையில் விடுபட்டிருக்க வேண்டும் என்று சந்தேகம் வருகிறது. இப்படி அமைந்த ஹதீஸ்கள் தான் முதல்லஸ் எனப்படும். இந்த வழக்கமுடையவர் முதல்லிஸ் எனப்படுவார். இவரது செயல் தத்லீஸ் எனப்படும்.
இத்தகைய ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது. ஏனெனில் விடுபட்ட ஒருவர் மோசமானவராகவும் இருக்கக்கூடும்.
ஒருவர் தமது ஆசிரியரை விட்டு விட்டு அடுத்தவரை கூறும் வழக்கமுடையவராகவும் இருக்க வேண்டும். அந்த ஹதீஸிலும் அவ்வாறு வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இரண்டும் சேர்ந்தால் மட்டுமே ஒரு ஹதிஸ் முதல்லஸ் என்ற நிலைமையை அடையும்.
ஒரு நபர் சில நேரங்களில் தாம் யாரிடம் செவியுற்றாரோ அவரை கூறாமல் அவருக்கு முந்திய அறிவிப்பாளரைக் கூறும் வழக்கமுடையவராக இருந்தார் என்று வைத்துக் கொள்வோம். இத்தகைய வழக்கமுடைய ஒருவர் குறிப்பிட்ட ஒரு ஹதீஸை அறிவிக்கும் போது இந்த வழக்கத்தைக் கடைபிடிக்கவில்லை. மாறாக நமக்கு இவர் அறிவித்தார் என்று தெளிவாக அறிவிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
இவர் முதல்லிஸ் (தக்லீஸ் செய்பவர்) என்றாலும் இந்த ஹதீஸில் யாரையும் விட்டு விட வில்லை என்பதால் இந்த ஹதீஸை நாம் ஏற்க்கலாம்.
ஒவ்வொரு ஹதீஸிலும் தத்லீஸ் என்ற தன்மை உள்ளதா? என்று பார்க்க வேண்டுமே தவிர ஒரு நபர் தத்லீஸ் செய்பவர் என்பதால் அவர் அறிவிக்கும் எல்லா ஹதீஸ்களையும் நிராகரித்து விடக்கூடாது.
இந்த விஷயத்தில் அறிஞர் பெருமக்களிடையே கருத்து வேறுபாடு இல்லை.
ii) முஅன்அன்
அன் என்ற வார்த்தையைப் பயன் படுத்துவது முஅன்அன் எனப்படும்.
அன் அபீ ஹுரைரா - அன் ஆயிஷா (அபூஹுரைரா வழியாக - ஆயிஷா வழியாக) என்பது போல் குறிப்பிடப்படும் ஹதீஸ்கள் முஅன்அன் எனப்படும்.
நமக்குச் சொன்னார், நமக்கு அறிவித்தார், நம்மிடம் அறிவித்தார், நான் காதால் அவரிடம் செவியுற்றேன் என்பது போல் அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தால் அப்படியே அதை ஏற்க வேண்டும்.
ஆனால் முஅன்அன் என்ற வகையில் அமைந்த ஹதீஸ்கள் பரிசீலனைக்குப் பிறகே ஏற்கப்படும்.
தத்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக அவர் இல்லாதிருந்து இவ்வாறு பயன்படுத்தினால் அதனால் ஹதீஸின் தரம் பாதிக்காது. அவர் வழியாக - இவர் மூலம் என்றெல்லாம் இவர் பயன்படுத்துவதற்கு நமக்கு அறிவித்தார் என்பதற்கும் இவரைப் பொருத்த வரை வித்தியாசம் இல்லை.
அவர் தத்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக இருந்து இவ்வாறு அவர் அறிவித்தால் நேரடியாகச் செவியுற்றது வேறு வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதா? என்று பார்க்கவேண்டும். நிரூபிக்கப்பட்டிருந்தால் ஏற்கலாம் அவ்வாறு நிரூபிக்கபடாவிட்டால் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது. அதாவது முஅன்அன் என்று கூறப்பட்டவுடன் அதை ஏற்கவோ மறுக்கவோ கூடாது. மாறாக ஆய்வு செய்த பின்னர் தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும்.
iii) முத்ரஜ் (இடைச் செருகல்)
ஹதீஸின் அறிவிப்பாளர் ஹதீஸை அறிவிக்கும் போது ஹதீஸில் தனது வார்த்தையையும் சேர்த்துக் கூறி விடுவதுதுண்டு.
இந்த நேரத்தில் இதை ஓது என்ற கருத்தில் ஒரு ஹதீஸ் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதை அறிவிக்கும் அறிவிப்பாளர் இந்த நேரத்தில் இதை ஓது என்று நபி (ஸல்) கூறியதைக் தெரிவித்து விட்டு இவ்வளவு எளிமையான வணக்கத்தை விட்டு விடாதீர்கள் என்று சுய கருத்தையும் கூறிவிடுவார்.
இத்தகைய இடைச் செருகல் உள்ள ஹதீஸ்களை முத்ரஜ் எனப்படும். இத்தகைய ஹதீஸ்களில் நபி (ஸல்) கூறியது எது? இடைச் செருகல் எது? என்பதைப் பிரித்து அறிந்து இடைச் செருகலை மட்டும் விட்டு விட வேண்டும்.
மற்றொரு அறிவிப்பைப் பார்த்து இடைச் செருகலைக் கண்டுபிடிக்கலாம்.
அல்லது இந்த அறிவிப்பாளரே பிரிதொரு சந்தர்பத்தில் இது நபி (ஸல்) அவர்களின் கூற்று அல்ல. மாறாக என்னுடைய கூற்று தான் என்றோ அல்லது எனக்கு அறிவித்தவரின் சொந்தக் கூற்று என்றோ வைத்துக் கூறுவதைக் கண்டுபிடிக்கலாம்.
அல்லது இது நிச்சயம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இருக்க முடியாது என்று முடிவு செய்யத்தக்க வகையில் அதன் கருத்து அமைந்துள்ளதை வைத்துக் கண்டுபிடிக்கலாம்.
அல்லது இத்துறையில் தங்களை அர்பணித்துக்கொண்ட நல்லறிஞர்கள் எண்ணற்ற அறிவிப்புகளை ஆய்வு செய்து கூறும் முடிவின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம்.
ஈ) வேறொரு விதமாகவும் ளயீபான ஹதீஸ்களை வகைப்படுத்தலாம்.
i) முள்தரப்
இதற்கு குழப்பமானது என்று பொருள்.
முள்தரப் என்பதும் ஏற்கத்தகாத ஹதீஸ்களில் ஒருவகையாகும்.
ஒரு ஆசிரியரிடம் ஒரு ஹதீஸைப் பல மாணவர்கள் செவியுற்று, ஒருவர் மட்டும் மற்றவர்கள் அறிவிப்பதற்கு முரணாக அறிவித்தால் அதை ஷாத் என்று ஏற்கனவே நாம் அறிந்தோம்.
முள்தரப் என்பதும் ஒரளவு இது போன்றது தான் என்றாலும் இரண்டுக்கும் முக்கியமான வித்தியாசம் உள்ளது.
ஒரு குறிப்பிட்ட செய்தியை பலரும் அறிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் அறிவிப்பதற்கு மாற்றாக சிலர் அறிவிக்கிறார்கள். இவர்கள் ஒரு ஆசிரியர் வழியாக அறிவிக்கவில்லை. வெவ்வேறு ஆசிரியர்கள் வழியாக இப்படி அறிவிக்கிறார்கள் என்றால் தான் முள்தரப் எனப்படும்.
ஒரு சம்பவம் மக்காவில் நடந்ததாக ஐந்து பேர் அறிவிக்க, மதீனாவில் நடந்ததாக இரண்டு பேர் அறிவிக்கிறார்கள் என்றால் இருவர் அறிவிப்பது முள்தரப் எனப்படும்.
இந்த முடிவைக் கூட அவசரப்பட்டு எடுத்துவிடக் கூடாது. மக்காவிலும், மதினாவிலும் இருவேறு சந்தர்பங்களில் நடந்திருக்க முகாந்திரமோ ஆதாரமோ உள்ளதா? என்று பார்க்க வேண்டும். முகாந்திரம் இருந்தால் முள்தரப் எனக் கூறக்கூடாது.
முள்தரப் என்பது இன்னொரு வகையிலும் ஏற்படும்.
ஒரு அறிவிப்பாளர் நேற்று மக்காவில் நடந்ததாகக் கூறிவிட்டு இன்று மதீனாவில் நடந்தாக அறிவித்தால் அதுவும் முள்தரப் (குழப்பத்தால் நடந்த தவறு) தான்.
கருத்துக்களில் முள்தரப் எனும் நிலை இருப்பது போலவே அறிவிப்பாளர் வரிசையிலும் இந்த நிலை ஏற்படலாம்.
இப்றாஹீம் எனக்கு அறிவித்தார் என்று ஒரு செய்தியை அறிவித்த அறிவிப்பாளர் பின்னொரு சமயத்தில் அப்துல் காதிர் அறிவித்ததாக மாற்றிக் கூறினால் இதுவும் முள்தரப் தான். பெயரில் குழப்பம் ஏற்பட்டதால் இவ்விருவர் அல்லாத மூன்றாவது ஒருவராகவும் அவர் இருக்கக் கூடும். அவர் பலவீனமானவராக இருந்திருக்கவும் கூடும் என்பதால் இது போன்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்வதில்லை.
ii) மக்லூப் (மாறாட்டம்)
சில நேரங்களில் சில நிகழ்ச்சிகளை ஏறுக்கு மாறாக கூறிவிடுவோம். உள்ளதாகக் கூறியதை இல்லை என்போம். இல்லை எனக் கூறியதை உண்டு என்போம். இப்படி ஏறுக்கு மாறாகவும் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிலால் பாங்கு சொன்னால் சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொன்னால் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு நோன்பு பிடியுங்கள் என்ற ஹதீஸ் பலர் வழியாக பல நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில பேர் பிலால் இடத்தில் உம்மி மக்தூமையும் உம்மி மக்தூம் இடத்தில் பிலாலையும் போட்டு ஏறுக்கு மாறாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பாளர் நம்பகமானவர் என்றாலும் இத்தகைய தவறுகளிலிருந்து அப்பாற்பட்டவர்கள் இருக்கவே மாட்டார்கள்.
இது போன்ற ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொள்ளக்கூடாது.
கருத்தில் இப்படி ஏற்படுவது போல் அறிவிப்பாளர் விஷயத்திலும் ஏற்படலாம். ஆசிரியர் இடத்தில் மாணவரையும் மாணவர் இடத்தில் ஆசிரியரையும் போட்டு விடுவதுண்டு.
iii) மஜ்ஹுல் (யாரென அறியப்படாதவர்கள்)
ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் வரலாற்றுக் குறிப்பு இருக்க வேண்டும். அவ்வாறில்லாதவர்கள் மஜ்ஹுல் எனப்படுவர்.
இஸ்மாயீலின் மகன் ஈஸா என்பவர் அறிவித்தாக நம்பகமானவர் கூறுகிறார். நமது சக்திக்கு உட்பட்டு தேடிப்பார்த்தால் அப்படி ஒருவர் பற்றிய எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
இவர் மஜ்ஹுல் எனப்படுவார். அல்லது இப்படி ஒருவர் இருந்தாகக் தெரிகிறது. ஆனால் அவர் எப்போது பிறந்தார்? எப்போது மரணித்தார்? அவரது நம்பகத்தன்மை எத்தகையது? அவரது நினைவாற்றல் எப்படி? என்ற எந்த விபரமும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். இவரும் மஜ்ஹுல் தான்.
ஒருவர் நம்பகமானவர் தானா? என்பதைத் தீர்மானிப்பதற்குத் தேவையான தகவல் கிடைக்கப் பெறாத ஒவ்வொருவரும் மஜ்ஹுல் எனப்படுவர்.
இத்தகையோர் அறிவிக்கும் ஹதீஸ்களும் ஆதாரமாகக் கொள்ளப்படாது. இதன் அடிப்படையில் எந்தச் சட்டமும் எடுக்கப்படக் கூடாது.
உ) யாரைப் பற்றிய செய்தி என்பதை பொறுத்தும் ஹதீஸ்கள் பிரிக்கப்படும்.
யாருடைய சொல், யாருடைய செயல், யாருடைய அங்கீகாரம் அறிவிக்கப்படுகிறது என்று அடிப்படையிலும் ஹதீஸ்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நபி (ஸல்) அவர்களை சம்பந்தப்பட்டதை மர்பூவு என்றும், நபித்தோழர்கள் சம்பந்தப்பட்டதை மவ்கூஃப் என்றும், அதற்கடுத்த தலைமுறையினர் சம்பந்தப்பட்டதை மக்தூவு என்றும் கூறப்படும்.
இதை விரிவாக காண்போம்.
i) முஸ்னத், மர்ஃபூவு
முஸ்னத் என்றால் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்கள் முழுமைப்படுத்தப்பட்டது என்பது பொருள். மர்ஃபூவு என்றால் “சேரும் இடம் வரை சேர்ந்து” என்று பொருள்.
முஸ்னத் என்பதும் அறிவிப்பாளர்களின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் சூட்டப்பட்ட பெயர் இல்லை. நபி (ஸல்) அவர்களுடன் தொடர்பு படுத்திக் கூறப்படும் செய்தியா? இல்லையா? என்ற அடிப்படையில் கூறுப்பட்டது தான்.
முஸ்னதாக இருக்கும் ஹதீஸின் அறிவிப்பாளர்களில் அனைவருமோ, ஒருவரோ நம்பிக்கைக்குரியரவராக இல்லாதிருக்கலாம். எனவே அது முஸ்னதாக இருந்தும் ஏற்கத்தகாததாக ஆகிவிடும்.
மர்ஃபூவு என்பதும் ஏறக்குறைய முஸ்னத் போன்றதுதான். எனினும் இரண்டுக்கும் சிறிய வித்தியாசம் உள்ளது.
நபி(ஸல்) கூறியதாக - செய்ததாக அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸின் இடையில் எந்த அறிவிப்பாளரும் விடுபடாமல் இருந்தால் அதை முஸ்னத் என்பர். மர்ஃபூவு எனக் கூறுவதற்கு இந்த நிபந்தனை இல்லை. அறிவிப்பாளர் இடையில் விடுபட்டிருக்கலாம். விடுபடாமல் இருக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தபட்டதாக இருக்க வேண்டும் என்பது தான் மர்ஃபூவு என்பதன் முக்கியமான நிபந்தனையாகும்.
மர்ஃபூவு எனக் கூறப்படும் ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரும் ஆய்வு செய்யப்படவேண்டும். மர்ஃபூவு எனக் கூறியவுடன் அதை அப்படியே ஏற்கக் கூடாது.
ii) மவ்கூஃப்
தடைப்பட்டு நிற்பது என்பது பொருள்.
சில ஹதீஸ்கள் மவ்கூஃப் என்ற பெயரால் குறிப்பிடப்படும்.
இப்பெயர் அறிவிப்பாளர்களின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் சூட்டப்பட்டதன்று.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லையோ, செயலையோ, அங்கீகாரத்தையோ அறிவிப்பை தான் ஹதீஸ்கள் எனப்படும்.
அவ்வாறு இல்லாமல் ஒரு நபித்தோழர் இவ்வாறு செய்தார். இவ்வாறு சொன்னார் என்று அறிவிக்கப்படுகிறது. இச்செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தபட்டதாகக் கூறப்படவில்லை. இவ்வாறு அமைந்தவை மவ்கூஃப் எனப்படும்.
நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக இது அறிவிக்கப்பட்டால் அந்த நபித்தோழர் அவ்வாறு கூறியது உண்மை என்று எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் நம்பகமானவர்களாக இல்லாவிட்டால் அந்த நபித்தோழர் அவ்வாறு கூறியிருக்க முடியாது என்று கருதிக் கொள்ளலாம்.
நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக நபித்தோழர் கூறியது நிரூபிக்கப்பட்டாலும் மார்க்கத்தில் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியவை மட்டும் தான் மார்க்கத்தின் ஆதாரமாக ஆக முடியம். மற்றவர்களின் கூற்று எவ்வளவு நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் நபித்தோழர்களின் கூற்று என்பது தான் உறுதியாகுமே தவிர அது நபிகள் நாயகத்துடன் சம்பந்தப்படாது.
சில செய்திகள் மேலோட்டமாகப் பார்க்கும் போது மவ்கூஃப் போன்று தோற்றமளித்தாலும் அதை மவ்கூஃப் என்று கூற முடியாத வகையில் அமைந்திருக்கும்.
“நாங்கள் நபி (ஸல்) காலத்தில் இப்படிச் செய்தோம்.”
“எங்களுக்கு இவ்வாறு கட்டளையிடப்பட்டிருந்தது” என்பது போன்ற வாசகங்களைப் பயன் படுத்தி நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் நபித்தோழர்களுக்குத் மார்க்க கட்டளை பிறப்பித்திருக்க முடியாது.
நபி (ஸல்) காலத்தில் நபித்தோழர்கள் ஒன்றைச் செய்தார்கள் என்று கூறப்பட்டால் அது நபி (ஸல்) கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் தடுக்கவில்லை என்று பொருள் கொள்ள வேண்டும். எனவே இதை மவ்கூஃப் என்று கூறக்கூடாது என பல அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் இதற்கு மாற்றுக் கருத்துக் கொண்டுள்ளனர்.
மவ்கூஃபூக்கு எதிராகப் பயன் படுத்தப்படும் சொல் முஸ்னத் என்பதாகும்.
முஸ்னத் என்றால் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்தி மவ்கூஃப் என்றால் நபி (ஸல்) சம்பந்தப்படாத செய்தி என்று பொருள்.
iii) மக்தூவு (முறிக்கப்பட்டது)
நபித்தோழர்களின் சொல், செயல்களைக் கூறும் ஹதீஸ்களை மவ்கூஃப் என்று கூறுவது போல், நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையினரான தாபியீன்களின் சொல் செயல்களைக் கூறும் ஹதீஸ்கள் மக்தூவு எனப்படும். நபித்தோழர்களின் கூற்றே மார்க்க ஆதாரமாக ஆகாது எனும் போது அவர்களுக்கு அடுத்த தலைமுறையினரின் சொல்லோ, செயலோ மார்க்க ஆதாரமாக ஆகாது என்பதில் சந்தேகம் இல்லை.
ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் ஹதீஸ்களை வகைப்படுத்தியது போலவே எத்தனை பேர் வழியாக ஒரு செய்தி அறிவிக்கப்படுகிறது என்ற அடிப்படையிலும் ஹதீஸ்களை வகைப்படுத்தியுள்ளனர்.
ஊ) இவை அல்லாமல், எத்தனை நபர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையிலும் ஹதீஸ்கள் வகைப்படுத்தப்பட்டள்ளன.
i) முதவாதிர் (ஒருமித்து அறிவிக்கப்படுவது)
ஒரு செய்தியை ஒருவர் இருவர் அல்ல, ஏராளமானவர்கள் அறிவிக்கின்றனர். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இவ்வாறு ஏராளமானவர்கள் அறிவித்துள்ளனர் என்றால் இத்தகைய செய்திகளை முதவாதிர் எனக்கூறுவர்.
மக்கா என்றொரு நகரம் உள்ளது என்பதை ஒவ்வொரு காலத்திலும் எண்ணற்றவர்கள் அறிவித்துள்ளனர். பத்ருப் போர் என்றொரு போர் நடந்தது என்பது இது போல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திகள் ஹதீஸ்களிலேயே மிகவும் பலமானவை. எக்காரணம் கொண்டும் நிராகரிக்கப்பட முடியாதவை.
நம்பகமான ஒருவர் மூலம் ஒரு ஹதீஸ் கிடைக்கிறது. அதை நீங்கள் ஒரு லட்சம் பேருக்கு அறிவிக்கிறீர்கள். அந்த ஒரு லட்சம் அடுத்த தலைமுறைக்கு அறிவிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இது முதாவாதிர் என்று கருதப்படாது. ஏனெனில் அந்த ஒரு லட்சம் பேரும் உங்கள் ஒருவர் வழியாகத் தான் அதை அறிந்தனர். நீங்கள் ஒரே ஒருவர் வழியாகத் தான் அறிந்தீர்கள். எல்லா மட்டத்திலும் ஏராளமான பேர் அறிவித்தால் மட்டுமே அதை முதவாதிர் எனலாம்.
நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதை ஏராளமான நபித் தோழர்கள் அறிவித்தனர். அவர்களிடம் கேட்ட ஏராளமான தாபியீன்கள் ஏராளமான தபவுத் தாபியீன்களுக்கு அறிவித்தனர். இப்படியே தொடர்ந்து எண்ணற்றவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டு இந்த செய்தி நம்மை வந்து அடைந்துள்ளது. இன்றைக்கு 150 கோடி முஸ்லிம்களும் இந்த செய்தியை அடுத்த தலைமுறைக்கு அறிவிக்கிறார்கள். இது தான் முதவாதிர் எனப்படும்.
குர்ஆனை அல்லாஹ்வுடைய வேதம் என்று முதவாதிரான ஹதீஸ்களின் துணையுடன் நம்புகிறோம்.
இப்படி அமைந்த ஹதீஸ்கள் மிகவும் அரிதாகவே உள்ளன. அதற்கு உதாரணம் காட்டும் அறிஞர்கள் அனைவரும் “யார் என் பெயரால் ஒரு செய்தியை இட்டுக் கட்டி கூறுகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்” என்ற ஹதீஸைத் தான் உதாரணம் காட்டுகின்றனர். இதை அறுபதுக்கும் மேற்பட்ட நபித் தோழர்கள் அறிவித்துள்ளனர். இப்படியே தலைமுறை தோறும் எண்ணற்றவர் வழியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
ii) ஹபருல் வாஹித் (தனிநபர் அறிவிப்பது)
இவ்வாறு அமையாத ஹதீஸ்களை ஹபருல் வாஹித் என்பர். தனி நபர்களின் அறிவிப்பு என்பது இதன் பொருள்.
இதையும் பல வகையாகப் பிரித்துள்ளனர். மஷ்ஹூர், கரீப், அஸீஸ், என்று இதைப் பல வகைகளாகப் பிரித்துள்ளனர்.
இவையெல்லாம் எத்தனை அறிவிப்பாளர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளனர் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்ட வகையாகும். நம்பகமானவர்களா? இல்லையா? என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டவை அல்ல.
எந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளலாம்? என்பதை அறிந்திட மேற்கண்ட விபரங்களே போதுமானவையாகும். இவைதவிர இன்னும் பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஹதீஸ்களை வகைப்படுத்தியுள்ளனர். விரிவஞ்சி அவற்றைத் தவிர்த்துள்ளோம்.
ஆதாரநூற்கள்
இந்த விபரங்களில் வேறு விதமான விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன. இப்னு ஜமாஆ, சுயூத்தி ஆகிய அறிஞர்களின் வகைப்படுத்துதலே எளிமையாக உள்ளதால் அதன் அடிப்படையிலேயே இந்த விபரங்களை முன் வைத்துள்ளோம். சுயூத்தியின் தத்ரீபுர்ராவி, இப்னு ஜமாஆவின் அல்மன்ஹல், ஆகிய நூற்களே இக்கட்டுரைக்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment