அஸ்ஸலாமு அலைக்கும்
ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு..,
குழந்தைகளுக்கு அழகிய பெயர் சூட்டுங்கள் :
அல்லாஹ்வின் பெயருடன் அப்து ( அடிமை ) என்ற வார்த்தையைச் சேர்ந்து பெயர் வைப்பது அல்லாஹ்விற்கு மிக விருப்பமானதாகும்.
உங்கள் பெயரில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது அப்துல்லாஹ் ( அல்லாஹ்வின் அடிமை ) மற்றும் அப்துர் ர்ஹ்மான் ( அருளாளனின் அடிமை ) ஆகியவையாகும்.
அறிவிப்பவர் : இப்னு உமர் ( ரழி )
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 4320
மறுமை நாளில் உங்களுடைய தந்தையின் பெயருடன் உங்களது பெயரால் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ஆகையால் உங்களது பெயர்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள் என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர்தா ( ரழி )
நூல் : முஸ்னது அஹ்மத் 20704
மேற்கண்ட ஹதீஸ்கள் அனைத்தும் நல்ல பெயர்களை வைக்க வேண்டும் என்று கூறுகின்றது.
பெயரில் இணைவைப்பு இருக்க கூடாது :
அல்லாஹ்வுடைய தன்மையைக் குறிக்கும் பெயர்களைச் சூட்டுவது கூடாது. இன்று வழக்கில் ஷா ஆலம் ( பிரபஞ்சத்தின் அரசன் ) ஜஹாங்கீர் ( உலகை வெற்றி கொண்டவன் ) ஷாஜஹான் ( உலகின் அரசன் ) ஷாகுல் ஹமீத் ( புகழுக்குரியவனின் அரசன் ) ஆகிய பெயர்கள் சூட்டப்படுகின்றன இவற்றில் இணைவைப்பு கலந்திருப்பதால் இப்பெயர்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பெயர் சூட்டும் போது அதன் பொருளில் இணைவைப்பு ஏதேனும் தென்படுகிறதா ? என்று கவனித்துச் சூட்ட வேண்டும் இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிக வெறுப்பிற்குரிய பெயரைக் கொண்டவன் மலிகுல் அம்லாக் ( அரசர்களுக் கெல்லாம் அரசர் ) என்ற பெயருடையவனாவான் என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி )
நூல் : ஸஹீஹுல் புகாரீ 6205
அறியாமை காலத்தில் என்னுடைய தந்தையின் பெயர் அஸீஸ் ( மிகைத்தவர் ) என்று இருந்தது. நபி ( ஸல் ) அவர்கள் அவர்களுக்கு அப்துர் ரஹ்மான் ( அளவற்ற அருளாளனின் அடிமை ) என்று ( மாற்றி ) பெயர் வைத்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் ( ரழி )
நூல் : முஸ்னது அஹ்மத் 16944
கெட்டவர்களின் பெயரைச் சூட்டக் கூடாது :
நபி ( ஸல் ) அவர்களின் மனைவியான உம்மு சலமாவின் சகோதரனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவர்கள் ( உம்மு சலமாவின் குடும்பத்தினர்கள் ) அக்குழந்தைக்கு வலீத் என்று பெயர் வைத்தார்கள். ( இதை அறிந்தவுடன் ) நபி ( ஸல் ) அவர்கள் எகிப்து நாட்டு மன்னர்களின் பெயர்களையா அதற்கு வைத்தீர்கள் ? இந்தச் சமுதாயத்தில் ஒரு மனிதன் தோன்றுவான். அவனுக்கு வலீத் என்றூ சொல்லப்படும். ஃபிர் அவ்ன் அவனது சமுதாயத்திற்கு தீங்கிழைத்ததை விட இந்த சமுதாயத்திற்கும் அதிகம் தீங்கிழைப்பான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் பின் ஹத்தாப் ( ரழி )
நூல் : முஸ்னது அஹ்மத் 104
தீயவர்களின் பெயரைச் சூட்டுவதை நபி ( ஸல் ) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட ஹதீஸ் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது
குறிப்பிட்டு சில பெயர்களைச் சூட்டக் கூடாது :
சில பெயர்களை நபி ( ஸல் ) அவர்கள் குறிப்பிட்டுக் கூறி அவற்றை சூட்டக் கூடாது என்று கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் எங்கள் அடிமைக்கு அஃப்லஹ் ( வெற்றியாளன் ) , ரபாஹ் ( லாபம் ), யசார் ( சுலபம் ) , நாஃபிஉ ( பயனளிப்பவன் ) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்.
அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்தப் ( ரழி )
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 4328
பெயர் மாற்றம் செய்யலாம் :
மோசமான அர்த்தங்களைக் கொண்ட பெயர்களை சூட்டக் கூடாது பெற்றோர்கள் அறியாமையினால் சூட்டிவிட்டால் அப்பெயர் களை மாற்றி விட்டு நல்ல அர்த்தங்களைக் கொண்ட பெயர்களை மாற்றிக் கொள்ளலாம்.
ஸைனப் ( ரழி ) அவர்களுக்கு ( முதலில் ) பர்ரா ( நல்லவள் ) என்ற பெயர் இருந்தது. “ அவர் தம்மைத் தாமே பரிசுத் தப்படுத்திக் கொள்கிறார் “ என்று ( மக்களால் ) சொல்லப் பட்ட்து ஆகவே அவருக்கு அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்க் “ ஸைனப் “ என்று பெயர் சூட்டினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி )
நூல் : ஸஹீஹுல் புகாரீ 6192
நபி ( ஸல் ) அவர்கள் ஆசியா ( மாறு செய்பவள் ) என்ற பெயரை மாற்றி ( அவரிடம் ) நீ ஜமீலா ( அழகானவள் ) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் ( ரழி )
நூல் : அபூதாவூத் 4301
------------------------------ ------------

------------------------------
No comments:
Post a Comment