Monday, 2 September 2013

தேனின் சிறப்பு

தேன் சிறப்பு :
தேன் விலைமதிக்கமுடியாத உணவு பொருள். இது ஒரு அறிய வகை மருந்து. தென்னை உரிமைகொண்டாடாத நாடுகளே இல்லை.சுத்தமான தேன் ஒருபோதும் கெட்டுப்போகாது. இவற்றின் பயன்கள் அனைத்தையும் யாரும் அறிதிருக்கமாட்டார்கள்.



தேனில் 78 பங்கு கரி நீரைகளும் (Carbo Hydrates) 18 பங்கு தண்ணீரும், 0.2 பங்கு தாதுப்பொருட்களும், 3.8 பங்கு பயன்தரும் பலவித நுண்ணிய வளங்களும் இருக்கின்றன. இதுதான் என குறிப்பிட்டு சொல்லமுடியாத பல நல்ல பொருள்களும் இதில் அடங்கியுள்ளன. பூவிலுள்ள மகரந்தம், பிசின், வச்சிரம் (Glue) எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணைகள் போன்றவைகள் அவற்றில் உள்ளன. மகரந்தம் என்பது ஒரு நேர்த்தியான பொடி. அதில் பிசிதம் நிரம்ப உண்டு. அது சிறுவர்களுக்கும்,குழந்தைகளுக்கும் தலைசிறந்த ஆகாரமாகும்.
தேன் இருதய வளர்ச்சிக்கு மிகமுக்கியமானது ஆகும். இதனை சாப்பிடுவதால் மனம் தேறுவதுடன் இருதயமும் துப்புரவாகி வலிமை அடைகிறது.



மருத்துவ ஆராய்ச்சியின் முடிவில் தேன் மிக சிறந்த நோய் தீர்க்கும் மருந்து என கண்டறிந்துள்ளனர். காமாலை, சீதபேதி நோய்களையும், மூத்திரப்பை மற்றும் இருதயம் முதலிய முக்கிய உறுப்புகளின் நோய்களை தீர்க்கும் நல்ல மருந்து தேன் என தெரிவிக்கின்றனர். நாம் உண்ணும் உணவினை செரிக்கும் நல்ல மருந்து தேன் .



புலால் உண்ணுவதை விட தேனினை குடித்தால் அதிக உற்சாகமும் ஆற்றலும் உண்டாகிறது.



திருமணமான தம்பதிகள் இரவில் பால் பருகும் போது ஒரு தேக்கரண்டி தேனினை சாப்பிட்டு வந்தால் சுக்கில கட்டும் ஆற்றலும் மகிழ்ச்சியையும் அதிகப்படுத்துகிறது.



பித்தம் அதிகமாகி அல்லல்படுபவர்கள் இஞ்சியை நன்றாக கழுவி சுத்தம் செய்துக்கொண்டு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு தேனில் இரண்டு அல்லது முன்று நாட்கள் ஊறவைத்து அதிகாலையில் இரண்டு அல்லது மூன்று துண்டுகள் சாப்பிட்டுவந்தால் எப்படிப்பட்ட பித்தமும் நீங்கிவிடும்.



குழந்தைகளுக்கு தினந்தோறும் அரை தேக்கரண்டி தேனினை கொடுத்து வந்தால். குழந்தைகளின் தசைகள் உறுதியாகும். ரத்தம் சுத்தமாகி ஆற்றலுடனும், அழகுடனும் விளங்குவார்கள்.



கடும் வயிற்று வலியா கவலை வேண்டாம். ஒரு டம்ளர் கொதிக்கும் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேனினை விட்டு நன்றாக கலக்கி பருகிவிட்டால் பதினைந்து நிமிடங்களில் வயிற்று வலி பறந்துவிடும்.


166

No comments:

Post a Comment