நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் நேசம் பெற வேண்டுமா?
عَنْ مُعَـاذِ بْنِ جَبَلٍ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ أَخَذَ بِيَدِهِ وَقَالَ: يَا مُعَاذُ وَاللهِ إِنِّي لأُحِبُّكَ فَقَالَ: أُوصِيكَ يَا مُعَاذُ! لاَ تَدَعَنَّ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ تَقُولُ: اَللّهُمَّ أَعِنِّي عَلَي ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ.
رواه ابوداؤد باب في الاستغفار
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் முஆது (ரலி) அவர்களின், கரங்களைப் பிடித்துக் கொண்டு “முஆதே, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உம்மை நேசிக்கிறேன்”. மேலும், நீர் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும்
(اَللّهُمَّ أَعِنِّي عَلَي ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ)
யா அல்லாஹ்! “நான் உன்னை திக்ரு செய்யவும், உனக்கு நன்றி செலுத்தவும் நல்ல முறையில் உன்னை வணங்கவும் எனக்கு உதவி செய்வாயாக!
என்று ஓதிவருவதை நீர் விட்டுவிட வேண்டாம்” என உமக்கு உபதேசிக்கிறேன்” என்று கூறியதாக ஹஜ்ரத் முஆதுப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
No comments:
Post a Comment