Saturday, 25 January 2020

மரணத்தைத் தவிர எல்லா நோய்களுக்கும் கருஞ்சீரகம் நிவாரணம்...

மரணத்தைத் தவிர எல்லா நோய்களுக்கும் கருஞ்சீரகம் நிவாரணம்:

فَإِنَّ عَائِشَةَ حَدَّثَتْنِي أَنَّهَا سَمِعَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ هَذِهِ الْحَبَّةَ السَّوْدَاءَ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلَّا مِنْ السَّامِ, قُلْتُ: وَمَا السَّامُ قَالَ الْمَوْتُ (بخارى-5687, مسلم-2215, ترمذى-2041, ابن ماجه-3447, احمد-2:241)

காலித் பின் ஸயீது (ரளி) அறிவிக்கிறார்கள்: 

'ஆயிஷா (ரளி) அவர்கள் என்னிடம், நபி (ஸல்) அவர்கள் இந்தக் 'கருஞ்சீரகம்' எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்.

 'சாமை'த் தவிர என்று கூறியதை நான் கேட்டுருக்கிறேன். 'சாம் என்றால் என்ன?' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள். 

(புகாரி-5687, முஸ்லிம்-2215, திர்மிதி-2041, அஹ்மது-2:241)

கருஞ்சீரகம் (Black Cumin) எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் என நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். குறிப்பாக குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்குக் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். 

கருஞ்சீரகத்தை வறுத்து தூளாக்கி எண்ணையில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் மூன்று சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோசம் குணமாகும்.

 கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்கும் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும் கருஞ்சீரகத்தை தூளாக்கி, தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். 

மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.

 கருஞ்சீரகப் பொடியை ஒரு துண்டுத்துணியில் கட்டி உறிஞ்சுவது ஜலதோசத்திற்கு நல்லது.

 தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்து பொடியாக்கி உறிஞ்சிவந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 5 கிராம் கருஞ்சீரகத்தை தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும். 

கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தை காடியுடன் (Vineger) வேகவைத்து வாய் கொப்பளித்தால் பல்வலிக்கு நல்ல பலன் தரும்.

 (ஃபத்ஹுல் பாரி)

கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவது கருஞ்ஜீரகத்தின் தனிச்சிறப்பாகும்.

 காஞ்சிரைப் பூண்டின் சாறுடன் கருஞ்ஜீரகத்தை குழைத்துச் சாப்பிட்டால் நுண் கிருமிகள் வெளியேறிவிடும்.

 கருஞ்ஜீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதை தடுக்கலாம்.

 கருஞ்ஜீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். இவையன்றி நாய்க்கடி, மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கருப்பை வலி, சிரங்கு, கண்வலி போன்ற நோய்களுக்கும் கருஞ்ஜீரம் சிறந்த நிவாரணியாகும்.

 (உம்ததுல் காரி)

No comments:

Post a Comment