Monday, 20 January 2020

இரவு நேரங்களில் வீட்டைப் பாதுகாக்கும் இறை நினைவு!!!


இரவு நேரங்களில் வீட்டைப் பாதுகாக்கும் இறை நினைவு


عَنْ جَابِرٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَطْفِئُوا الْمَصَابِيحَ بِاللَّيْلِ إِذَا رَقَدْتُمْ وَغَلِّقُوا الْأَبْوَابَ وَأَوْكُوا الْأَسْقِيَةَ وَخَمِّرُوا الطَّعَامَ وَالشَّرَابَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் அல்லது அந்திப் பொழுதாகி விட்டால் உங்கள் குழந்தைகளை (வெüயே திரியவிடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போது தான் (பூமியெங்கும்) பரவுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெüயே செல்ல) விட்டுவிடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில்,ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை. உங்கள் தண்ணீர் பையி(ன் வாயி)னைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்களுடைய பாத்திரங்களை மூடி வையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அவற்றின் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள். உங்கள் விளக்குகளை அணைத்து விடுங்கள்.
அறிவிப்பவர்:  ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல்: புகாரி 5623
عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَتْرُكُوا النَّارَ فِي بُيُوتِكُمْ حِينَ تَنَامُونَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உறங்கச் செல்லும் போது உங்கள் வீட்டிலுள்ள நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடாதீர்கள்.
அறிவிப்பவர்:  அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)  நூல்: புகாரி 6293

இன்று நம்முடைய வீடுகளில் நாம் தூங்கச் செல்லும் முன் கேஸ் அடுப்புகளை அணைத்துள்ளோமா, தேவையில்லாமல் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்துள்ளோமா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இது நபிவழியும், நமக்குப் பாதுகாப்பும் ஆகும்.

No comments:

Post a Comment