Saturday, 25 January 2020

மன்னு (சமையல் காளான்) கண்ணுக்கு நல்லது...

மன்னு (சமையல் காளான்) கண்ணுக்கு நல்லது:

سَعِيدَ بْنَ زَيْدٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: الْكَمْأَةُ مِنْ الْمَنِّ, وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ

 (بخارى-5708, ترمذى-1268, ابن ماجه-3455, احمد-2:511)

சயீது பின் ஜைது (ரளி) அறிவிக்கிறார்கள்: 

'சமையல் காளான் 'மன்னு'வகையைச் சேர்ந்தது ஆகும். 

அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்

 என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 (புகாரி-5708, திர்மிதி-1268, இப்னுமாஜா-3455, அஹ்மது-2:511)

'மன்னு' (Manna) என்பது பாலைவிட வெண்மையானதும் தேனைவிட இனிமையானதுமான பனிக்கட்டி போன்றதொரு சுவையான உணவுப் பொருளாகும்.

 இது 'தீஹ்' எனும் பாலை வெளியில் பல்லாண்டு காலம் நாடோடிகளாக அலைந்து தரிந்துக்கொண்டிருந்த இஸ்ரவேலர்களுக்கு இலவசமாக இறைவன் வழங்கிய உணவாகும்.

 இது கண் நோய்க்கு நிவாரணியாகும்

 என்ற கருத்து ஹதீஸை அடிப்படையாகக் கொண்டதாகும்.

 'சமையல் காளான் (Truffle) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். 

சமையல் காளானின் சாறு கண் நோய்க்கு நிவாரணியாகும்' 

என இந்த ஹதீஸ் கூறுகிறது.

 அதாவது, 'மன்னு' எனும் உணவு இஸ்ரவேலர்களுக்கு இலவசமாகக் கிடைத்ததைப் போன்றே காளான் வகையும் இலவசமாகக் கிடைக்கிறது.

 அல்லது இஸ்ரவேலர்களுக்குக் கிடைத்துவந்த 'மன்னு' வகை உணவுகளில் சமையல் காளானும் ஒன்றாகும்.

 நீர்வளம் குறைந்த மணல் பிரதேசமான 'தீஹ்' பகுதியில் காளான் அதிகம் முளைத்தது. அதை எடுத்து அவர்கள் சமைத்து உண்டார்கள்.

சமையல் காளானைப் பிழிந்து சாறு எடுத்து, அதைக் கண் நோய் மருந்துடன் கலந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் காளானின் இதழ்களை எடுத்து தீக்கங்கின்மேல் வைத்து அதன் சாறு சூடானபின், அஞ்சனக் (சுர்மா) குச்சியால் கண்ணுக்குத் தீட்டினால் கண்நோய் விலகும். 

அஞ்சனம் போன்றவற்றுடன் காளான் சாற்றைத் கலந்தே உபயோகிக்க வேண்டும் என்றும், தனியாகக் காளான் சாற்றை பயன்படுத்தலாகாது என்றும் சிலர் கூறுகின்றனர்.

 (ஃபத்ஹுல் பாரி)

No comments:

Post a Comment