Saturday, 18 January 2020

நபி(ஸல்)அவர்களின்இறுதி வார்த்தை!!!

நபி(ஸல்)அவர்களின்இறுதி வார்த்தை

حدثنا بشر بن محمد حدثنا عبد الله قال يونس قال الزهري أخبرني سعيد بن المسيب في رجال من أهل العلم أن عائشة قالت كان النبي صلى الله عليه وسلم يقول وهو صحيح إنه لم يقبض نبي حتى يرى مقعده من الجنة ثم يخير فلما نزل به ورأسه على فخذي غشي عليه ثم أفاق فأشخص بصره إلى سقف البيت ثم قال اللهم الرفيق الأعلى فقلت إذا لا يختارنا وعرفت أنه الحديث الذي كان يحدثنا وهو صحيح قالت فكانت آخر كلمة تكلم بها 

اللهم الرفيق الأعلى



ஆயிஷா(ரலி) அறிவித்தார் 
நபி(ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாய் இருந்தபோது, 'சொர்க்கத்தில் தம் இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம் உயிர் வாழ்வதற்கு) வாய்ப்பளிக்கப்படாதவரை எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை' என்று கூறுவார்கள். பிறகு அவர்களுக்கு நோய் கண்டு, அவர்கள் தம் தலையை என்னுடைய மடி மீது வைத்திருந்த நிலையில் மயக்கமுற்றார்கள். பிறகு அவர்களின் மயக்கம் தெளிந்தபோது வீட்டின் கூரையை நோக்கி அவர்களின் பார்வை நிலை குத்திநின்றது. பிறகு, 

'இறைவா! (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன்' (என்னைச் சேர்த்தருள்)' என்று கூறினார்கள். அப்போது நான், 'அவர்கள் (இப்போது) நம்முடன் இருப்பதை விரும்பவில்லை. (மறுமைப் பெருவாழ்வைத் தேர்ந்தெடுத்துக கொண்டுவிட்டார்கள்)' என்று (மனத்திற்குள்) கூறிக் கொண்டேன். ஆரோக்கியமானவர்களாய் இருந்தபோது ('இறைத்தூதர்கள் அனைவரும் இறக்கும் முன் இரண்டிலொன்றைத் தேர்வு செய்துகொள்ள வாய்ப்பளிக்கப்படுவார்கள்' என்று) அவர்கள் கூறியசொல் இதுதான் என நான் புரிந்துகொண்டேன். நபி(ஸல்) அவர்கள் பேசிய கடைசி வார்த்தை, 'இறைவா! உயர்ந்த தோழர்களுடன் (என்னையும் சேர்த்தருள்)' என்பதுதான். 
இதை (உர்வா(ரஹ்) போன்ற) பல அறிஞர்களின் அவையில் ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 4463. 

No comments:

Post a Comment