Wednesday, 22 January 2020

வாலிப பருவத்தில்....

அனைத்தையும் பிறிந்து கூட இருந்துவிடுவார்கள்,ஆனால் பேஸ்புக்கை ( Facebook ) பிரிந்து இவர்களால் இருக்க முடியாது...

ரப்புல் ஆலமீன் நமக்கு வழங்கிய  அருட்கொடைகளில் உடல் ரீதியிலான அருட்கொடைகள் மிக அதிகம். நாம் அந்த அருட்கொடைகளை சரியாக பயன் படுத்தும் தருணம் வாலிப பருவம் தான்.

மனித வாழ்க்கையின் மூன்று பருவங்களில் வாலிபமே உயர்ந்து நிற்கிறது.

காரணம்

சிறுவயது அறியாமைக்குச்சொந்தமானது,

 வயோதிகம் இயலாமைக்குச்சொந்தமானது,

இளமையே சாதனைக்குச்சொந்தமானதாகும்.

 உலகில் சாதனையாளர்களாக வலம்வருபவர்கள் தங்களின் சாதனைக்கான விதையை வாலிபத்தில் தான் தூவினார்கள்.

இதை அழகாக விவரிக்கிற அல்குர்ஆனின் வசனங்களை சற்று உற்றுநோக்கி கவனியுங்கள். 

الَّذِي خَلَقَكُم مِّن ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِن بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِن بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً
اللَّـهُ يَخْلُقُ مَا يَشَاءُ ۖ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ

அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின், பஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன்.

வாலிப பருவம் அல்லாஹ் நமக்கு அருளிய அனைத்து நிஃமத்துக்களும் முழுமையாக செயல்படும் பருவமாகும்.அதனால் தான் அல்லாஹ் அதை பலமிக்கது என்று வர்ணிக்கிறான்.

வாலிபம் பாக்கியமானது தான்,அதேசமயம் ஆபத்தானது.இந்த பருவத்தில் நிகழும் தீய பழக்கங்களின் விளைவு முழுவாழ்வையும் சங்கடத்தில் ஆழ்த்தி விடும்.அதனால் தான், நபி ஸல் அவர்கள் நாளை மறுமையில் நடைபெறும் விசாரணை குறித்துச்சொல்லும்போது-

لن تزول قدما عبد يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفناه، وعن شبابه فيما
أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وعن علمه ماذا عمل به

நாளை மறுமையில் நான்கு கேள்விக்கு பதில் கூறாதவரை ஒரு அடியானின் கால்கள் செயல்படாது.அவைகள்
1.வாழ்நாளை எப்படி கழித்தாய்? 2.வாலிபத்தை எப்படி அழித்தாய்? 3.பொருளை எப்படி சேர்த்தாய்?எப்படி செலவு செய்தாய்? 4.கற்ற கல்வியைக்கொண்டு என்ன அமல் செய்தாய்? என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸில் கூறப்பட்ட வாழ்நாளுக்கு கீழ் வாலிபமும்வந்துவிட்டாலும் அல்லாஹ் வாலிபத்தை தனியாக விசாரிப்பான் என்பதிலிருந்து அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளலாம்.

வாலிப பருவத்தில்

!சிலருக்கு பெண் மீது பைத்தியம்-சிலருக்கு பணத்தின் மீது பைத்தியம்-சிலருக்கு அழகான ஆடையின் மீது பைத்தியம்-சிலருக்கு கம்ப்யூட்டர்,லேப்டாப் மீது பைத்தியம்-சிலருக்கு மொபைல் பைத்தியம்- வேறு சிலருக்கோ பைக்,கார் மீது பைத்தியம்.

ஒருநாளில் பெரும்பகுதியை செல்போன் பயன்பாட்டில் மட்டுமே கழிக்கிற எத்தனையோ இளைஞர்கள் உண்டு.இதுவும் ஒருவைகை போதைதான். அவர்கள் செல்போனை பிரிந்தாலோ,அல்லது அவர்களின் செல்போன் தொலந்தாலோ ஒருவகையான மனநிலைபாதிப்புக்குள்ளாகிவிடுவார்கள். இன்றைய இளைஞர்களின் கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் சவாலாக இருப்பது இணையதளங்களும்,குறிப்பாக பேஸ்புக்கும் தான் என்று சமீபத்திய கணக்கெடுப்பு கூறுகிறது.

இவர்கள் பெற்றோரை பிரிந்துகூட இருந்துவிடுவார்கள்,ஆனால் பேஸ்புக்கை பிரிந்து இவர்களால் இருக்க முடியாது.இங்கே நாம் இஸ்லாமிய இளைஞர்களை பற்றி கவலைப்படவேண்டும்.
தடம் புரளாத வாலிபனை பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்படுகிறான்

No comments:

Post a Comment