மன உளைச்சலுக்கு (தல்பீனா) பால் பாயாசம்:
عَنْ عُرْوَةَ, عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا كَانَتْ تَأْمُرُ بِالتَّلْبِينِ لِلْمَرِيضِ وَلِلْمَحْزُونِ عَلَى الْهَالِكِ وَكَانَتْ تَقُولُ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ التَّلْبِينَةَ تُجِمُّ فُؤَادَ الْمَرِيضِ, وَتَذْهَبُ بِبَعْضِ الْحُزْنِ (بخارى-
உர்வா பின் அஜ்ஜுபைர் (ரளி) அறிவிக்கிறார்கள்:
'(என் சிறிய தாயார்) ஆயிஷா (ரளி) அவர்கள் நோயளிக்கும், இறந்துபோனவரை எண்ணி வருந்துபவருக்கும் 'தல்பீனா' (பால் பாயாசம்) தயாரித்துக் கொடுக்கும்படி பணித்துவந்தார்கள்.
மேலும், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'தல்பீனா நோயாளியின் உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்கும் & கவலைகளில் சிலவற்றை போக்கும்'
என்று கூறக்கேட்டுள்ளேன்' என்பார்கள்.
(புகாரி-5689)
'அத்தல்பீனா' என்பது மாவு, பால் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படும்
பாயசம் அல்லது கஞ்சியாகும்.
பாலுக்குப் பதிலாகத் தேன் சேர்க்கப்படுவதுமுண்டு.
இதைக் கோதுமைக் குறுணையால் தயாரிப்பதே அக்கால வழக்கமாகும்.
இது ஒரு மிருதுவான உணவாதலால் நோயாளிக்கு ஏற்றதாகும்.
சூடாக இதை அருந்தினால் உடல் வெப்பம் சீரடைய இது உதவும்.
நோயாளியானாலும், துக்கத்தில் இருப்பவரானாலும் அவர்களுக்கு உணவு குறைந்துவிடுவதால் இரப்பை உள்ளிட்ட உறுப்புகளில் காய்வு நிலை காணப்படும்.
இந்தக் கஞ்சி ஈரத்தை ஏற்படுத்தி வலுவூட்டும்.
அத்துடன் நோயாளியின் இரைப்பையில் சேர்ந்துவிடுகிற பித்த நீர், கபம் ஆகியவற்றை இது அழித்துவிடும்.
(ஃபத்ஹுல் பாரி)
No comments:
Post a Comment