இளைய சமூகமே! டூவீலர் ஓட்டுதல். செல்போன் கம்யூட்டர் போன்றவற்றில் போட்டி போட்டு நேரத்தையும் உடலையும் வீணாக்கும் இளைஞர்களை.
தன் உயிரை இறைவழியில் மாய்துக்கொள்ள போட்டி போட்ட ஒரு வாலிபசிங்கத்தை எண்ணிப் பாருங்கள்...
وعن زيد بن ثابت قال : أرسل إلي أبو بكر رضي الله عنه مقتل أهل اليمامة . فإذا عمر بن الخطاب عنده . قال أبو بكر إن عمر أتاني فقال إن القتل قد استحر يوم اليمامة بقراء القرآن وإني أخشى إن استحر القتل بالقراء بالمواطن فيذهب كثير من القرآن وإني أرى أن تأمر بجمع القرآن قلت لعمر كيف تفعل شيئا لم يفعله رسول الله صلى الله عليه وسلم ؟ فقال عمر هذا والله خير فلم يزل عمر يراجعني فيه حتى شرح الله صدري لذلك ورأيت الذي رأى عمر قال زيد قال أبو بكر إنك رجل شاب عاقل لا نتهمك وقد كنت تكتب الوحي لرسول الله صلى الله عليه وسلم فتتبع القرآن فاجمعه فوالله لو كلفوني نقل جبل من الجبال ما كان أثقل علي مما أمرني به من جمع القرآن قال : قلت كيف تفعلون شيئا لم يفعله النبي صلى الله عليه وسلم . قال هو والله خير فلم أزل أراجعه حتى شرح الله صدري للذي شرح الله له صدر أبي بكر وعمر . فقمت فتتبعت القرآن أجمعه من العسب واللخاف وصدور الرجال حتى وجدت من سورة التوبة آيتين مع أبي خزيمة الأنصاري لم أجدها مع أحد غيره ( لقد جاءكم رسول من أنفسكم )
நபியின் காலத்தில் ஒரே நூல் வடிவில் ஒன்று சேர்க்கப்படாத குர்ஆன் முதலாம் கலிபா அபூபக்கர்(ரலி) அவர்களின் காலத்தில் ஒரே நூலாக வடிவமைக்கப்பட்டது.
சஹாபாக்களின் சவாலான சாதனையான இந்த புனிதபனியை தலைமையேற்று செய்தவர் வாலிபரான ஜைதுப்னுஸாபித்(ரலி) என்ற ஸஹாபிதான்.
அல்லாஹ்வின் அர்ஷால் வரவேற்கப்பட்ட வாலிபர். 30 வயதில் இஸ்லாத்தை ஏற்று. 37 வயதுவரை சுமார் ஏழு வருடங்கள் மட்டுமே நபியுடன் உலகில் வாழும் பாக்கியம் பெற்று பத்ரு உஹத் போன்ற பல யுத்தங்களில் பங்கேற்று இறுதியாக ஹிஜ்ரி 5ம் ஆண்டு நடைபெற்ற கன்தக் போரில் கலந்து எதிரிகளால் தாக்கப்பட்டு அதற்குப்பின் ஒருமாதம்கழித்து ஷஹீதான ஸஃதிப்னுமுஆத்(ரலி) என்ற தீரமிக்க வாலிபரின் சரித்திரத்தை நினைத்துபார்க்க வேண்டும்.
سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " اهتز عرش الرحمن لموت سعد بن معاذ
وقال سعد بن أبي وقاص، عن النبي صلى الله عليه وسلم أنه قال: " لقد نزل من الملائكة في جنازة سعد بن معاذ سبعون ألفاً ما وطئوا الأرض قبل، وبحق أعطاه الله تعالى ذلك
ஸஃது(ரலி) அவர்களின் ஜனாஸாவில் கலந்துகொண்ட நபி(ஸல்)அவர்கள் குதிங்காலை உயர்த்தி தன் முன்னாங்காலை ஊன்றிநடந்தபோது சொன்னார்கள். இது வரை பூமிக்குவராத எழுபதாயிரம் மலக்குகள் இவரின் ஜனாஸாவில் கலந்து கொண்டார்கள்.
நூல்: ஹயாதுஸ் ஸஹாபா. பாகம்.4
அல்லாஹ்வின் அர்ஷ் ஸஃதை(ரலி) வரவேற்கும் மகிழ்ச்சியில் அவரின் மரணத்திற்காக குழுங்கியது.
நூல்.மிஸ்காத்
.
ஏழு வருடங்கள் மட்டுமே இஸ்லாத்திற்கு சேவைசெய்யும் பாக்கியம்பெற்ற ஸஃது(ரலி) அவர்களுக்காக இறைவனின் சிம்மாசனம் குழுங்கியது என்றால் அவர் எந்தளவிற்கு தன் வாலிபவலிமையை சமுகத்தின் வளர்ச்சிக்காகவும் இறைவணக்கத்திற்காகவும் பயன் படுத்தியிருக்க வேண்டும் இளைஞர்களே சிந்தித்து பாருங்கள்..
No comments:
Post a Comment