Monday, 10 February 2020

அல்லாஹ்வின் முக்கிய அறிவிப்பு ...

அல்லாஹ்வின் முக்கிய அறிவிப்பு ...

அல்லாஹ்வால் வசதி வாய்ப்பு வழங்கப்பட்டவர்களுக்கு 

وَاللّٰهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلٰى بَعْضٍ فِى الرِّزْقِ‌ فَمَا الَّذِيْنَ فُضِّلُوْا بِرَآدِّىْ رِزْقِهِمْ عَلٰى مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَهُمْ فِيْهِ سَوَآءٌ‌  اَفَبِنِعْمَةِ اللّٰهِ يَجْحَدُوْنَ‏ 

“அல்லாஹ்வால் வசதி, வாய்ப்பு வழங்கப்பெற்றவர்கள் தங்களின் பொறுப்பின் கீழ் இருக்கின்றவர்களுக்கும் வழங்கி, அவர்களும் இவர்களின் செல்வத்தில் சமமான உரிமை உள்ளவர்களாக ஆக்கிட முன்வருவதில்லை”. 

( அல்குர்ஆன்: 16: 71 )

இப்படி, வழங்காமல் வாழ்ந்த பலர் தங்களின் மரண நேரத்தில் தான் அதை தவறென விளங்கிக் கொள்வார்கள்.

 அதற்குப் பின்னர் என்ன நடக்கும் என்பதை அல்லாஹ் பின் வரும் வசனத்தில் இவ்வாறு விமர்சிக்கின்றான்.

وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ () وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا

அல்லாஹ் கூறுகின்றான்: “உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக, நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நல் வழியில் செலவு செய்து விடுங்கள்! ஏனெனில், அந்த நேரத்தில் நல்வழியில் செலவு செய்யாதவர் “என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிது கால அவகாசம் அளிக்கக் கூடாதா? நான் தானதர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!” என்று கூறுவார்.

ஆனால், ஒருவருக்கு அவர் செயல்படுவதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்து விட்டாலோ எந்த மனிதனுக்கும் மேலும், கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக வழங்குவதில்லை”.                               

( அல்குர்ஆன்: 63: 10 )

ஏனெனில், மௌத்தின் போது தான் தான தர்மங்கள் செய்திருக்க வேண்டுமே என்கிற ஏக்கமும், ஆசையும் பிறக்கும். என்ன செய்வது? 
அப்போது அந்த ஆசைக்கும் ஏக்கத்திற்கும் அல்லாஹ்விடம் மதிப்பேதும் அப்போது இருப்பதில்லை.

No comments:

Post a Comment