Wednesday, 12 February 2020

கொடுத்து வாழுங்கள்!!!!!

கொடுத்து வாழுங்கள்! அல்லாஹ் செல்வத்தைக் தந்து கொண்டே இருப்பான்...

ஆம் சுவனத்தைக் கொண்டு சோபனம் பெற்ற பதின்மரில் ஒருவரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் வறுமையில் வாடிய வறியோருக்காகவும், ஏழை எளியோருக்காகவும் வாரி வழங்கியதைப் பற்றிய செய்திகளைப் பார்த்தாலே அல்லாஹ் அவர்களுக்கு கொட்டிக் கொடுத்த செல்வம் எவ்வளவு என்பதை வியப்பின் விளிம்பில் நின்று தான் நாம் உணர முடியும்.

وبلغ من جود عبد الرحمن بن عوف أنه قيل: { أهل المدينة جميعا شركاء لابن عوف في ماله، ثُلث يقرضهم، وثُلث يقضي عنهم ديونهم، وثلث يصِلَهم ويُعطيهم }.

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் செல்வத்தில் மதீனா வாசிகள் அனைவருக்கும் பங்கிருந்ததாம். ஆம்! செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கை மக்களுக்கு கடனாக வழங்குவார்களாம். மூன்றில் இன்னொரு பங்கை மக்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக வழங்குவார்களாம். மூன்றில் இன்னொரு பங்கை அவர்களுக்கு தானமாக வழங்குவார்களாம்.

ஒரு முறை தங்களுக்கு சொந்தமான ஒரு இடத்தை விற்று, அதன் மூலம் வந்த 40000 தீனாரை அண்ணலாரின் அருமைத் துணைவியர்களுக்கும், ஏழைகளுக்கும், அவர்களின் சொந்த உறவுகளில் சிரமப்படுவோருக்கும் வழங்கினார்கள்.

 ( நூல்: இஸ்தீஆப், தபகாத் இப்னு ஸஅத், ஸியரு அஃலா மின் நுபலா, உஸ்துல் காபா, ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}.... )

இப்படி வாரி, வாரி வழங்கியவருக்கு அல்லாஹ் வழங்கிய பேருபகாரம் என்ன தெரியுமா?

இதோ, அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களே! சொல்கின்றார்கள்:

فقال: { لقد رأيتني لو رفعت حجرا لوجدت تحته فضة وذهبا }.

“நான் ஒரு கல்லைத் தொட்டு தூக்கினால் கூட அதன் அடியிலிருந்து தங்கத்தையோ, வெள்ளியையோ பெற்றுக் கொண்டே இருந்தேன். நான் தொட்டதெல்லாம் துலங்கிற்று. என் கை பட்டதெல்லாம் பொன்னாகியது” என்று.

ஆகவே, கையேந்தாத நல்ல தலைமுறையை உருவாக்கிட இஸ்லாம் கூறுகிற நல்ல ஸாலிஹான பெற்றோராக நாம் அமையப் பெறுவோம்!

No comments:

Post a Comment