சேமிப்புகளில் மிகச்சிறந்தது….
فقد سأل الصحابة النبي صلى الله عليه وسلم فقالوا
لو علمنا أي المال خير فنتخذه؟ فقال: أفضله لسان ذاكر، وقلب شاكر، وزوجة مؤمنة تعينه على إيمانه. رواه أحمد والترمذي وصححه الألباني وفي رواية: ليتخذ أحدكم قلبًا شاكرًا، ولسانًا ذاكراً، وزوجة مؤمنة تعينه على أمر الآخرة.
رواه أحمد والترمذي وصححه الألباني.
ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “
நாங்கள் நபி {ஸல்} அவர்களுடன் பயணத்தில் இருக்கும் போது
9 –ஆம் அத்தியாயத்தின் 33 –ஆம் இறைவசனம் “தங்கத்தையும், வெள்ளியையும் பதுக்கி வைப்பவர்கள்” என்று தொடங்கும் வசனம் இறங்கியது.
அப்போது, எங்களில் சிலர் தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைப்பது தொடர்பாக இவ்வசனம் இறங்கியுள்ளது. எனவே, இது போன்று இனி சேகரித்து வைப்பது நல்லதன்று” எனவே, எந்தச் செல்வம் நல்லது என்று நமக்குத் தெரிந்து கொண்டால் அதனை சேர்க்க நாம் முயற்சி செய்யலாமே என்று கூறினார்கள்.
இவ்வாறு கூறியதை அறிந்த நபி {ஸல்} அவர்கள் “அனைத்தையும் விட சிறந்த சேமிப்புப் பொருள்கள் “இறைவனை நினைவு கூறும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவையே!” என்று கூறினார்கள்.
( நூல்: திர்மிதீ )
No comments:
Post a Comment