Wednesday, 4 December 2019

பிறரிடம் கையேந்தாமல் வாழ முயல்வோம்

பிறரிடம் கையேந்தாமல் வாழ முயல்வோம்



உண்மையில் ஒரு மனிதனின் வாழ்க்கை இன்பமும், இனிமையும் நிறைந்ததாய் அமையப் பெற்றிருக்க வேண்டுமானால் அவனுக்கு சுய மரியாதையும், மான உணர்ச்சியும் மிக அவசியம் தேவை.



وروى الزهري، عن ابن المسيب وعروة، عن حكيم بن حزام قال: سألت النبي صلى الله عليه وسلم فأعطاني، ثم سألته فأعطاني، فقال: " يا حكيم، إن هذا المال خضرة حلوة، من أخذه بسخاوة نفس بورك له فيه ومن أخذه بإشراف نفس لم يبارك له فيه، وكان كالذي يأكل ولا يشبع، واليد العليا خير من اليد السفلى " . قال حكيم: يا رسول الله، والذي بعثك بالحق لا أرزؤك ولا أحداً بعدك شيئاً، فكان أبو كبر رضي الله عنه يدعوه إلى عطائه فيأبى أن يأخذه، ودعاه عمرو رضي الله عنه فأبى، فقال عمر: يا معشر المسلمين، أشهدكم أني أدعو إلى عطائه فيأبى أن يأخذه، فما سأل أحداً شيئاً إلى أن فارق الدنيا.
وعمي قبل موته، ووصى إلى عبد الله بن الزبير.


ஹுனைன் யுத்தம், அதன் முடிவு முஸ்லிம்களுக்கு சாதகமாய் மாறிப்போனதோடு நின்று விடாமல் ஏராளமான கனீமத் செல்வங்களை அள்ளி வழங்கிற்று.

நபிகளார் அதனை தோழர்களுக்கு பங்கிட்டு கொடுத்தார்கள். புதிதாய் இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு தாராளமாய் வாரி வாரி வழங்கினார்கள். அப்போது தான் இஸ்லாத்தை தழுவியிருந்த ஹகீம் இப்னு ஹிஷாம் (ரலி) அவர்களுக்கும் வழங்கினார்கள்.

ஆனால், தனக்கு வழங்கப்பட்டது போதாது எனக்கூறி மீண்டும் தருமாறு நபிகளாரிடம் கோரினார். அண்ணலார் வழங்கினார்கள்.

இரண்டாம் முறையும் கோரினார். மீண்டும் அண்ணலார் வழங்கினார்கள். இவ்வாறு வழங்கப்பட்டதின் விளைவாக அவருக்கு நூறு ஒட்டகங்கள் கிடைத்தன.

பின்னர், ஹக்கீம் இப்னு ஹிஷாம் (ரலி) அவர்களை அழைத்து அண்ணல் நபி {ஸல்} அவர்கள் “ஹக்கீமே! மிகவும் உயர்தரமான ஒட்டகைகள் உமக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றை மன திருப்தியுடன் ஏற்றுக் கொண்டால் அது அல்லாஹ்வின் பரக்கத் அருள் வளம் நிறைந்து, பெருகிக் காணப்படும்.

ஆனால், பேராசை கொண்டு நீர் அதை அணுகும் பட்சத்தில் அதில் அல்லாஹ்வின் அருள் வளம் அணுவளவு கூட இருக்காது. மேலும், உண்டும் வயிறு நிரம்பாத மனிதனைப் போன்று நீர் ஆகி விடுவீர்! மேலும், தாழ்ந்திருக்கும் கையை விட மேலிருக்கும் உயர்ந்திருக்கும் கையே மிகச் சிறப்பானது” என்று கூறினார்கள்.

அதைக் கேட்ட ஹக்கீம் இப்னு ஹிஷாம் அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! உம்மை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய அந்த இறைவன் மீது ஆணை! என் வாழ் நாளில் இனி ஒரு போதும் உங்களைத் தவிர வேறு யாரிடமும் எதையும் கேட்கவே மாட்டேன். நான் இறக்கும் வரை யார் எதைத் தந்தாலும் பெற்றுக் கொள்ள மாட்டேன்! இது அல்லாஹ்வின் மீது ஆணை!” என்று முழங்கினார்கள்.

நாமும் தான் உணர்ச்சிப் பெருக்கில் சத்தியம் செய்கிறோம். ஆனால், நம்மில் எத்துணை பேர் இறுதி வரை அதை காப்பாற்றுகிறோம்.

அவரை சத்தியத்தில் இருந்து பிறழ்ந்து சென்றிட ஏராளமான தருணங்கள் வாசல் முன் வந்து நின்று கதவைத் தட்டின ஆனால் அவர்கள் ஒரு போதும் அதற்கு இசைந்து கொடுக்க வில்லை.

கலீஃபா அபூ பக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் அரசுக் கருவூலத்தில் இருந்து ஹக்கீம் (ரலி) அவர்களுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டு அதை வந்து பெற்றுக் கொள்ள வேண்டுமென கலீஃபா ஆளனுப்பினார்கள்.

அந்த நிதிகள் எதுவும் தமக்கு தேவை இல்லை என புறக்கணித்து விட்டார்கள்.

இரண்டாம் கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் ஏராளமான பணம் ஹக்கீம் (ரலி) அவர்களின் பேரில் தேங்கியிருப்பதையும், அதை அவர் பெற்றுக் கொள்ள மறுப்பதையும் அறிந்து கொண்ட கலீஃபா உமர் (ரலி) அவர்கள் மக்களை ஒன்று கூட்டி “மக்களே! இதோ இங்கு குவித்து வைக்கப்பட்டிருக்கின்ற இந்தப் செல்வங்களெல்லாம் ஹக்கீம் அவர்களுக்கானது.

ஆனால், அவர் முந்தைய ஆட்சியாளரான அபூ பக்ர் (ரலி) அவர்களிடமிருந்தும், நம்மிடமிருந்தும் இதைப் பெற்றுக் கொள்ள எவ்வளவோ அழைத்தும் தொடர்ந்து மறுத்து வருகின்றார். எனக்கும் அவருக்குமான இந்த விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் சாட்சி பகரவேண்டும்” என்று கூறினார்கள்.



No comments:

Post a Comment