Thursday, 5 December 2019

வெற்றியாளர்களின் சிறந்த பண்பு

வெற்றியாளர்களின் சிறந்த பண்பு

وَنَفْسٍ وَما سَوَّاها (7) فَأَلْهَمَها فُجُورَها وَتَقْواها (8) قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا (9) وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا (10)

அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், மனித ஆன்மாவின் மீதும் அதனைச் செம்மைப் படுத்தி பின்னர், அதன் தீமையையும் தூய்மையையும் அதனுடைய உள்ளுணர்வில் வைத்தவன் மீது சத்தியமாக! திண்ணமாக, மனதை (நன்மையைக் கொண்டு) தூய்மை படுத்தியவன் வெற்றி பெற்று விட்டான்; மேலும், மனதை (தீமையைக் கொண்டு) நசுக்கியவன் தோற்று விட்டான்.

(அல்குர்ஆன்:91:7-10)

இங்கே நன்மையை தேர்வு செய்தவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என அல்லாஹ் விவரிக்கின்றான்.



قَالَتْ يَا أَيُّهَا الْمَلَأُ أَفْتُونِي فِي أَمْرِي مَا كُنْتُ قَاطِعَةً أَمْرًا حَتَّى تَشْهَدُونِ (32) قَالُوا نَحْنُ أُولُو قُوَّةٍ وَأُولُو بَأْسٍ شَدِيدٍ وَالْأَمْرُ إِلَيْكِ فَانْظُرِي مَاذَا تَأْمُرِينَ (33) قَالَتْ إِنَّ الْمُلُوكَ إِذَا دَخَلُوا قَرْيَةً أَفْسَدُوهَا وَجَعَلُوا أَعِزَّةَ أَهْلِهَا أَذِلَّةً وَكَذَلِكَ يَفْعَلُونَ (34) وَإِنِّي مُرْسِلَةٌ إِلَيْهِمْ بِهَدِيَّةٍ فَنَاظِرَةٌ بِمَ يَرْجِعُ
الْمُرْسَلُونَ (35)

அல்லாஹ் கூறுகின்றான்: “ (ஸுலைமான் (அலை) அவர்களின் கடிதத்தைப் படித்து காட்டி விட்டு) அரசி கூறினாள்: “சமுதாயத்தலைவர்களே! என்னுடைய இந்த விவகாரத்தில் எனக்கு ஆலோசனை வழங்குங்கள்.

நீங்கள் இல்லாமல் எந்த விவகாரத்தையும் நான் முடிவு செய்வதில்லை.”  அவர்கள் பதில் கூறினார்கள்: “நாம் வல்லமை மிக்கவர்களாகவும், கடுமையாக போரிடக்கூடியவர்களாகவும் இருக்கின்றோம். இதற்கு மேல் இறுதி முடிவெடுப்பது உங்கள் பொறுப்பு. என்ன ஆணையிடுவது என்பதைத் தாங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.”

அரசி கூறினாள்: “அரசர்கள் ஏதேனும் ஒரு நாட்டின் மீது படையெடுத்தால் அதனை அழித்து விடுவார்கள். மேலும், அங்கு கண்ணியத்துடன் வாழ்பவர்களைக் கேவலப்படுத்தி விடுவார்கள். இதைத் தான் அவர்கள் செய்கின்றார்கள்.

ஆகவே, நான் (அவருக்கு) ஓர் அன்பளிப்பை அனுப்பப் போகின்றேன். பின்னர், என்னுடைய தூதுவர்கள் என்ன செய்தியைப் பெற்றுத் திரும்பி வருகின்றார்கள் என்பதைப் பார்க்கலாம்.”

                                                               (அல்குர்ஆன்:27:32-35)

இங்கே ஸபா நாட்டு அரசியின் முன்னால் வைக்கப்பட்ட ஆலோசனையில் இறுதியாக அவர்கள் தேர்ந்தெடுத்த அந்த சீரிய சிந்தனை அவருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் ஹிதாயத் நேர்வழி கிடைப்பதற்கு வழிகோலியதாக வரலாறு நமக்கு சொல்லித்தருகின்றது.

நபிகளாரின் முன்மாதிரி

عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهَا قَالَتْ مَا خُيِّرَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بَيْنَ أَمْرَيْنِ إِلاَّ أَخَذَ أَيْسَرَهُمَا مَا لَمْ يَكُنْ إِثْمًا فَإِنْ كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ وَمَا انْتَقَمَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- لِنَفْسِهِ إِلاَّ أَنْ تُنْتَهَكَ حُرْمَةُ اللَّهِ عَزَّ وَجَل .

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும்படி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு விருப்ப உரிமை வழங்கப்பெற்றால், அவர்கள் அவ்விரண்டில் எளிதானதையே – அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் தேர்வு செய்வார்கள்.

அது பாவமான காரியமாக இருந்தால், மக்களிலேயே அவர்கள் தான் அதிலிருந்து விலகி வெகுதொலைவில் சென்றுவிடுவார்கள்.

(நூல்: முஸ்லிம்)

  قال- ثم أتيت بإناءين أحدهما فيه لبن والآخر فيه خمر فقيل لي خذ فاشرب أيهما شئت فأخذت اللبن فشربته فقال لي جبريل أصبت الفطرة ولو أنك أخذت الخمر غوت أمتك

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டிருந்த போது நபிகளாருக்கு ஒரு கோப்பையில் மதுபானமும், இன்னொரு கோப்பையில் பாலும் வழங்கப்பட்டதாம். அப்போது நபிகளார் {ஸல்} அவர்கள் பாலை அருந்துவதற்காக தேர்ந்தெடுத்தார்களாம். அதைக் கண்ணுற்ற ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இயற்கையான பானத்தையே நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நீங்கள் மதுவை தேர்ந்தெடுத்திருப்பீர்களேயானால் உங்களது சமுதாயம் வழிகெட்டுப் போயிருக்கும்” என்று கூறினார்கள்.

                             (நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ, பாகம்:6, பக்கம் 173)

முஸ்லிம் ஷரீஃபின் இன்னொரு அறிவிப்பில்..

عَنْ الزُّهْرِيِّ قَالَ قَالَ ابْنُ الْمُسَيَّبِ قَالَ أَبُو هُرَيْرَةَ
إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ بِإِيلِيَاءَ بِقَدَحَيْنِ مِنْ خَمْرٍ وَلَبَنٍ فَنَظَرَ إِلَيْهِمَا فَأَخَذَ اللَّبَنَ فَقَالَ لَهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَاكَ لِلْفِطْرَةِ لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ

ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “இயற்கையை தேர்ந்தெடுப்பதற்கு நேர்வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்! என்று கூறியதாக, கூடுதலாக அபூஹுரைரா (ரலி) அறிவிப்பின் படி பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment