Tuesday, 24 December 2019

தாய் தந்தையரின் உறவை பேணிவாழ வேண்டும் !!!

தாய் தந்தையரின் உறவை பேணிவாழ வேண்டும் !!!


قَالَ اللهُ تَعَالي.  ۞

وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ اِحْسَانًا‌  حَمَلَـتْهُ اُمُّهٗ كُرْهًا وَّوَضَعَتْهُ كُرْهًا‌  وَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰـثُوْنَ شَهْرًا‌  حَتّٰٓى اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِيْنَ سَنَةً  ۙ قَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰٮهُ وَاَصْلِحْ لِىْ فِىْ ذُرِّيَّتِىْ  اِنِّىْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏ 
மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.
(அல்குர்ஆன் : 46:15)

وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌  اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏ 
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
(அல்குர்ஆன் : 17:23)

وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا‌  وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ وَالصَّاحِبِ بِالْجَـنْبِ وَابْنِ السَّبِيْلِ ۙ وَمَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌  اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۙ‏ 
மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 4:36)

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: 
رَغِمَ اَنْفُ، ثُمَّ رَغِمَ اَنْفُ، ثُمَّ رَغِمَ اَنْفُ، 
قِيْلَ: مَنْ يَارَسُوْلَ اللهِ؟ قَالَ: مَنْ اَدْرَكَ اَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ، اَحَدَهُمَا اَوْ كِلَيْهِمَا فَلَمْ يَدْخُلِ الْجَنَّةَ.

رواه مسلم باب رغم من ادرك ابويه،

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனது மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்" என்று சொன்னார்கள். "அல்லாஹ்வின் தூதரே! யார்?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள், "தம் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது அவ்விருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்த பிறகும் (அவர்களுக்கு நன்மை செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவன்தான்" என்றார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் : 4988)

******************

அனைத்து உறவுகளிலும் மேலான உறவு தாய் தந்தை என்கின்ற உறவாகும் அவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்


وعَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نِمْتُ، فَرَأَيْتُنِي فِي الْجَنَّةِ، فَسَمِعْتُ صَوْتَ قَارِئٍ يَقْرَأُ، فَقُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: هَذَا حَارِثَةُ بْنُ النُّعْمَانِ " فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "كَذَاكَ الْبِرُّ، كَذَاكَ الْبِرُّ" وَكَانَ أَبَرَّ النَّاسِ بِأُمِّه

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள், நான் உறங்கிக் கொண்டிருந்தேன் நான் சுவனத்தில் இருக்கக் கனவு கண்டேன். அங்கு நான் குர்ஆன் ஓதுபவரின் சப்தத்தைச் செவியுற்று, யார் இவர்?'' (சுவனத்தில் வந்து குர்ஆன் ஓதுகிறார்) என வினவினேன். இவர் ஹாரிஸத்துப்னு நுஃமான்'' என மலக்குகள் பதிலளித்தார்கள். பிறகு நன்மை இவ்வாறுதான் இருக்கும், நன்மை இவ்வாறுதான் இருக்கும், நன்மை என்னும் பழம் இவ்வாறு தான் இருக்கும்'' என்று ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹஜ்ரத் ஹாரிஸதுப்னு நுஃமான் (ரலி) அவர்கள் தன் தாயாருடன் மிகவும் அழகிய முறையில் நடந்து கொள்ளக் கூடியவராக இருந்தார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத்)


 عَنْ اَبِي الدَّرْدَاءِ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اَلْوَالِدُ اَوْسَطُ اَبْوَابِ الْجَنَّةِ، فَاِنْ شِئْتَ فَاَضِعْ ذلِكَ الْبَابَ اَوِ احْفَظْهُ.

رواه الترمذي وقال: هذا حديث صحيح باب ماجاء من الفضل في رضا الوالدين 

தந்தை சுவர்க்க வாசல்களில் சிறந்த வாசல், (அவருக்கு மாறு செய்து அவரது மனதை புண்படுத்தி) அவ்வாசலை நாசப்படுத்து ! அல்லது அவருக்குக் கீழ்படிந்து நடந்து (அவரைத் திருப்திப்படுத்தி) அவ்வாசலைப் பாதுகாத்துக் கொள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதீ)


٢٥٤- عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: رِضَا الرَّبِّ فِيْ رِضَا الْوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِيْ سَخَطِ الْوَالِدِ.

رواه التر مذي باب ماجاء من الفضل في رضا الوالدين 

அல்லாஹுதஆலாவின் பொருத்தம் பெற்றோரின் பொருத்தத்திலும். அல்லாஹுதஆலாவின் வெறுப்பு 
பெற்றோரின் வெறுப்பிலும் உள்ளது'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதீ)


************************************

 عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنّ اَبَرَّ الْبِرِّ صِلَةُ الْوَلَدِ اَهْلَ وُدِّ اَبِيْهِ.

رواه مسلم باب فضل صلة اصدقاء الاب 

நன்மைகளில் சிறந்த நன்மை, (தந்தையின் மரணத்துக்குப்பின்) தந்தையுடன் நட்பு கொண்டவர்களுடன் மகன் அழகிய முறையில் நடந்து கொள்வது'' என நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்-4989)


عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ اَحَبَّ اَنْ يَصِلَ اَبَاهُ فِيْ قَبْرِهِ فَلْيَصِلْ اِخْوَانَ اَبِيْهِ بَعْدَهُ.

رواه ابن حبان (واسناده صحيح)


எவர் தன் தந்தையின் மரணத்திற்குப்பின், கப்ரில் இருக்கும் தந்தையுடன் சேர்ந்து (வாழ) உறவு வளர்க்க விரும்புவாரோ அவர் தனது தந்தையின் சகோதரர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளவும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இப்னு ஹிப்பான்)


 عَنْ اَبِيْ اُسَيْدٍ مَالِكِ بْنِ رَبِيْعَةَ السَّاعِدِيِّ ؓ قَالَ: بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُوْلِ اللهِ ﷺ اِذْ جَاءَهُ رَجُلٌ مِنْ بَنِيْ سَلَمَةَ فَقَالَ: يَارَسُوْلَ اللهِﷺ هَلْ بَقِيَ مِنْ بِرِّ اَبَوَيَّ شَيْءٌ اَبِرُّهُمَا بِهِ بَعْدَ مَوْتِهِمَا؟ قَالَ: نَعَمْ اَلصَّلوةُ عَلَيْهِمَا، وَاْلاِسْتِغْفَارُ لَهُمَا، وَاِنْفَاذُ عَهْدِهِمَا مِنْ بَعْدِهِمَا، وَصِلَةُ الرَّحْمِ الَّتِيْ لاَ تُوْصَلُ اِلاَّ بِهِمَا، وَاِكْرَامُ صَدِيْقِهِمَا
(رواه ابوداؤد باب في برالوالدين )


ஹஜ்ரத் அபூஉஸைத் 
மாலிகிப்னு ரபீஆ 
ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், 

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் சமுகத்தில் அமர்ந்திருந்த சமயம், 
பனீஸலமா கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர் அங்கு வந்து, யாரஸூலல்லாஹ், என்னுடைய பெற்றோருடைய மரணத்திற்குப்பின் அவர்களுடன் அழகிய முறையில் நடந்துகொள்ள ஏதேனும் வழியுள்ளதா?'' 
எனக்கேட்டார்.ஆம்!'' 
அவர்களுக்காகதுஆச்செய்வது, அல்லாஹுதஆலாவிடம் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத்தேடுவது, 
அவர்களுடைய மரணத்துக்குப் பின் அவர்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது,
 அவர்களுக்கு யாருடன் உறவுமுறை உள்ளதோ அவர்களுடன் அழகிய முறையில் நடப்பது, 
அவர்களின் நண்பர்களைக் கண்ணியப்படுத்துவது ஆகியவை பெற்றோர்களுடன் நன்முறையில் நடப்பதாகும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.

(அபூதாவூத்)

 عَنِ ابْنِ عُمَرَ ؓ اَنَّ رَجُلاً اَتَي النَّبِيَّ ﷺ فَقَالَ: يَا رَسُوْلَ اللهِﷺ اِنَّيْ اَصَبْتُ ذَنْبًا عَظِيْمًا فَهَلْ لِيْ تَوْبَةٌ؟ قَالَ: هَلْ لَكَ مِنْ اُمٍّ؟ قَالَ: لاَ، قَالَ: هَلْ لَكَ مِنْ خَالَةٍ؟ قَالَ: نَعَمْ قَالَ: فَبِرَّهَا. 
(رواه الترمذي، باب في بر الخالة، )


ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ஒருவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வந்து, யாரஸூலல்லாஹ், 
நான் பெரும் பாவமொன்றைச் செய்து விட்டேன். எனக்கு பாவமன்னிப்பு கிடைக்குமா ?'' என்று கேட்டார். உமது தாயார் உயிருடன் உள்ளாரா?'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்க ! அவர் இல்லை' என்றார் , உமது தாயின் சகோதரி உள்ளாரா?'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் வினவ, ஆம்' என்று சொன்னார், நீர் அவருடன் அழகிய முறையில் (கொஞ்சமும் மன வருத்தப்படாமல் முழுமையான சந்தோஷம் பெறும்) முறையில் நடந்து கொள்.(அதன் காரணமாக அல்லாஹுதஆலா உனக்கு பாவமன்னிப்பு கிடைக்கும்)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(திர்மிதீ)



No comments:

Post a Comment