Tuesday, 3 December 2019

பெண் குழந்தைகளை பராமரித்தல்...

பெண் குழந்தைகளை பராமரித்தல்...

عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَامِنْ مُسْلِمٍ لَهُ اِبْنَتَانِ فَيُحْسِنُ اِلَيْهِمَا مَا صَحِبَتَاهُ اَوْ صَحِبَهُمَا، اِلاَّ اَدْخَلَتَاهُ الْجَنَّةَ.
رواه ابن حبان (واسناده ضعيف وهو حديث حسن بشواهده):

எவரேனும் ஒரு முஸ்லிமுக்கு இரு பெண் மக்கள் இருந்து இவர் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து அவ்விருவரும் இவரிடத்தில் இருக்கும் வரை, அல்லது இவர் அவர்களிடத்தில் இருக்கும் வரை அவ்விரு பெண் மக்களும் இவரை நிச்சயம் சொர்க்கத்தில் நுழையவைப்பார்கள்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)

عَنْ اَنَسٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ عَالَ جَارِيَتَيْنِ دَخَلْتُ اَنَا وَهُوَ الْجَنَّةَ كَهَاتَيْنِ، وَاَشَارَ بِاِصْبَعَيْهِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب ماجاء في النفقة علي البنات والاخوات 

எவர் இரு பெண் மக்களை வளர்த்துப் பரிபாலித்து வந்தாரோ, அவரும் நானும் இணைந்து இந்த இரு விரல்களைப் போல் சுவர்க்கத்தில் நுழைவோம்” என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தமது இரு விரல்களைச் சுட்டிக் காட்டினார்கள் என ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)

 عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ يَلِيْ مِنْ هذِهِ الْبَنَاتِ شَيْئًا، فَاَحْسَنَ اِلَيْهِنَّ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ.
رواه البخاري باب رحمة الولد … 

எவர் தம் பெண் மக்களின் ஏதேனுமொரு காரியத்துக்குப் பொறுப் பேற்று, மேலும் அவர்களை நன்முறையில் பராமரித்தால் அவர்கள், அவரை நரக நெருப்பை விட்டும் தடுக்கும் திரையாகிவிடுவார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)

 عَنْ اَبِيْ سَعِيْدِ نِ الْخُدْرِيِّ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ كَانَتْ لَهُ ثَلاَثُ بَنَاتٍ اَوْ ثَلاَثُ اَخَوَاتٍ اَوْ اِبْنَتاَنِ اَوْ اُخْتَانِ فَاَحْسَنَ صُحْبَتَهُنَّ وَاتَّقَي اللهَ فِيْهِنَّ فَلَهُ الْجَنَّةُ.
رواه الترمذي باب ماجاء في النفقة علي البنات والاخوات 

எவருக்கு மூன்று பெண் மக்கள் அல்லது மூன்று சகோதரிகள் அல்லது இரண்டு பெண் மக்கள் அல்லது இரண்டு சகோதரிகள் இருந்து, அவர்களை நன்முறையில் பராமரித்து அவர்களுக்குரிய கடமைகளில் அல்லாஹுதஆலாவைப் பயந்து நடந்தால், அவருக்கு சுவர்க்கம் கிடைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)

 عَنْ اَيُّوْبَ بْنِ مُوْسَيؒ عَنْ اَبِيْهِ عَنْ جَدِّهِ 1 اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ اَفْضَلَ مِنَ اَدَبٍ حَسَنٍ.
رواه الترمذي وقال: هذا حديث غريب باب ماجاء في ادب الولد رقم:١٩٥٢
ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும், நல்ல ஒழுக்கத்தையும் விடச் சிறந்த அன்பளிப்பை வழங்கமுடியாது” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தன் பாட்டனார் வாயிலாகத் தம் தந்தை கூறியதாக ஹஜ்ரத் அய்யூப் (ரஹ்) அறிவிக்கிறார்கள்”.
(திர்மிதீ)

 عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ وُلِدَتْ لَهُ اُنْثَي فَلَمْ يَئِدْهَا وَلَمْ يُهِنْهَا وَلَمْ يُؤْثِرْ وَلَدَهُ يَعْنِي الذَّكَرَ عَلَيْهَا اَدْخَلَهُ اللهُ بِهَا الْجَنَّةَ.
رواه الحاكم وقال: هذا حديث صحيح الاسناد ولم يخرجاه ووافقه الذهبي:

எவருக்குப் பெண் குழந்தை பிறந்து அவர் அதை (அறியாமைக் காலத்தில் செய்தது போல்) உயிருடன் புதைக்காமல், அதை இழிவாகக் கருதாமல் (அவர்களுடன் பழகுவதில்) பெண் பிள்ளையைவிட ஆண் பிள்ளைக்கு முன்னுரிமை தராமல், (மகனுடன் நடந்து கொள்வது போலவே மகளுடனும்) நடந்தார் என்றால், மகளுடன் நடந்து கொண்ட முறைக்குப் பிரதிபலனாக அல்லாஹுதஆலா அவரைச் சுவர்க்கத்தில் நுழைய வைப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்தத்ரக் ஹாகிம்)

عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيْرٍ ؓ اَنَّ اَبَاهُ اَتَي بِهِ اِلَي رَسُوْلِ اللهِ ﷺ فَقَالَ: اِنِّيْ نَحَلْتُ اِبْنِيْ هذَا غُلاَمًا، فَقَالَ: اَكُلَّ وَلدِكَ نَحَلْتَ مِثْلَهُ؟ قَالَ: لاَ، قَالَ: فَاَرْجِعْهُ.
رواه البخاري باب الهبة للولد 

ஹஜ்ரத் நுஃமானிப்னு பஷீர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “என்னுடைய தந்தை என்னை அழைத்துக் கொண்டு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சமுகத்திற்குச் சென்றார்கள், “என்னுடைய இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறே உமது மற்ற பிள்ளைகளுக்கும் கொடுத்தீரா?” என அவரிடம் கேட்க அவர், “இல்லை” என்றார், “அடிமையைத் திரும்ப பெற்றுக் கொள்ளும்!”என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி)

தெளிவுரை:- பிள்ளைகளுக்கு அன்பளிப்பு வழங்குவதிலும் சரிசமமாக நடந்து கொள்ள வேண்டுமென்று இந்த ஹதீஸிலிருந்து தெரியவருகிறது.

عَنْ اَبِيْ سَعِيْدٍ وَابْنِ عَبَّاسٍ ؓ قَالَا: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ وُلِدَ لَهُ وَلَدٌ فَلْيُحْسِنْ اِسْمَهُ وَاَدَبَهُ، فَاِذَا بَلَغَ فَلْيُزَوِّجْهُ، فَاِنْ بَلَغَ وَلَمْ يُزَوِّجْهُ فَاَصَابَ اِثْمًا فَاِنَّمَا اِثْمُهُ عَلَي اَبِيْهِ.
رواه البيهقي في شعب الايمان:

எவருக்கேனும் பிள்ளை பிறந்தால், அப்பிள்ளைக்கு நல்ல பெயர் வைக்கவும், நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுக்கவும், வாலிப வயதை அடைந்து விட்டால் அவருக்கு மணமுடித்து வைக்கவும். பருவமடைந்த பின்னும் (தனது அலட்சியப்போக்கின் காரணமாக) மகனுக்கு மணமுடித்து வைக்கவில்லை என்றால், அவன் பாவத்தில் வீழ்ந்துவிட்டால் அந்தப் பாவம் அவனுடைய தந்தையைச் சேரும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் மற்றும் ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ)

 عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: جَاءَ اَعْرَابِيٌّ اِلَي النَّبِيِّ ﷺ فَقَالَ: تُقَبِّلُوْنَ الصِّبْيَانَ؟ فَمَا نُقَبِّلُهُمْ، فَقَالَ النَّبِيُّ ﷺ: اَوَ اَمْلِكُ لَكَ اَنْ نَزَعَ اللهُ مِنْ قَلْبِكَ الرَّحْمَةَ.
رواه البخاري باب رحمة الولد وتقبيله ومعانقته 

ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வந்து, “உங்கள் சிறுவர்களை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை” எனக் கூறினார். “அல்லாஹுதஆலா உம்முடைய உள்ளத்திலிருந்து கருணையைப் பறித்துவிட்டால் அதற்கு நான் என்ன செய்வது?” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
(புகாரி)

No comments:

Post a Comment