Wednesday, 4 December 2019

ஹபீப் இப்னு ஜைத் (ரலி) அவர்களின் தியாகம்….

ஹபீப் இப்னு ஜைத் (ரலி) அவர்களின் தியாகம்….



அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களோடு, தானும் தூதுத்துவத்தை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக முஸைலமா எனும் பொய்யன் தம்மை அறிவித்துக் கொண்டான்.

பெருங்கூட்டம் ஒன்று அவன் பின்னால் அணி சேரத்தொடங்கியது. ஆணவத்தின் உச்சத்திற்கும் அகம்பாவத்தின் விளிம்பிற்கும் வந்த அவன் மாநபி {ஸல்} அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இரு தூதுவர்களை ஏற்பாடு செய்து மதீனாவிற்குச் சென்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் {ஸல்} அவர்களிடம் கொடுத்து விட்டு, அவசியம் பதிலை வாங்கி வாருங்கள் என்று அனுப்பி வைத்தான்.

وفوجئ الرسول يوما بمبعوث بعثه مسيلمة يحمل منه كتابا يقول فيه "من مسيلمة رسول الله، الى محمد رسول الله.. سلام عليك.. أم بعد، فاني قد أشركت في الأمر معك، وان لنا نصف الأرض، ولقريش نصفها، ولكنّ قريشا قوم يعتدون"..!!!
ودعا رسول الله أحد أصحابه الكاتبين، وأملى عليه ردّه على مسيلمة:
" بسم الله الرحمن الرحيم..
من محمد رسول الله، الى مسيلمة الكذاب.
السلام على من اتبع الهدى..
أما بعد، فان الأرض لله يورثها من يشاء من عباده، والعاقبة للمتقين"..!!
وجاءت كلمات الرسول هذه كفلق الصبح. ففضحت كذاب بني حنيفة الذي ظنّ النبوّة ملكا، فراح يطالب بنصف الأرض ونصف العباد..!
وحمل مبعوث مسيلمة رد الرسول عليه السلام الى مسيلمة الذي ازداد ضلالا واضلالا..

அண்ணல் நபி {ஸல்} அவர்களின் சபை நபித்தோழர்களின் சங்கமத்தால் நிறைந்திருந்தது. முஸைலமாவின் இருதூதர்களும் அவைக்கு வருகை புரிந்து, கடிதத்தை நபிகளாரிடம் வழங்கினார்கள்.

கடிதத்தின் உள்ளே “அல்லாஹ்வின் தூதர் முஸைலமாவிடமிருந்து அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் {ஸல்} அவர்களுக்கு, ”உம்முடன் தூதுச் செய்தியில் தூதராக நானும் பங்கு தாரராக நியமிக்கப்பட்டுள்ளேன்” என்பதை இதன் மூலம் அறியத்தருகின்றேன்.

எங்களுக்கு பாதி நிலமும், குறைஷியர்களாகிய உங்களுக்கு பாதி நிலமுமாக ஆட்சி புரிய வேண்டும் என்பது தான் இறைவனின் நியதி. ஆனால், குறைஷிகளான நீங்களோ வரம்பு மீறிவிட்டீர்கள்.” என்று எழுதப்பட்டிருந்தது.

அப்போது, அண்ணலார் {ஸல்} அவர்கள் தூதுவராக வந்திருந்த இருவரையும் நோக்கி “முஸைலமா குறித்து நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு, அவ்விருவரும் “முஸைலமா உண்மை சொல்பவராக இருக்கிறார் என்று நாங்கள் கருதுகிறோம்” என்றனர்.

அதற்கு, மாநபி {ஸல்} அவர்கள் “தூதுவர்கள் கொல்லப்படக்கூடாது எனும் நடைமுறை மாத்திரம் இல்லை என்றிருப்பின் உங்கள் இருவரையும் நான் கொலை செய்யுமாறு ஏவியிருப்பேன்” என்று எச்சரிக்கை செய்து விட்டு, பதில் கடிதம் ஒன்றை எழுதி கொடுத்து விடுமாறு நபித்தோழர்களுக்கு ஆணையிட்டார்கள் {ஸல்} அவர்கள்.

அதில், “அன்பாளன், அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்! அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மத் {ஸல்} அவர்களிடமிருந்து பொய்யனான முஸைலமாவிற்கு….. “ நேரிய வழி நடப்போரின் மீதே இறைவனின் சாந்தி நிலவும்! பரந்து விரிந்த மொத்த பூமி யாவும் அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீ உணர்ந்து கொண்டாக வேண்டும். அவன், தான் நாடுபவர்களுக்கே அதை உரிமையாக்குகின்றான். மேலும், இறுதி தீர்ப்பு நாளின் நற்கூலியும் அவனை அஞ்சுபவர்களுக்கே கிடைக்கும்”. என்று எழுதச் சொன்னார்கள்.

ومضى الكذب ينشر افكه وبهتانه، وازداد أذاه للمؤمنين وتحريضه عليهم، فرأى الرسول أن يبعث اليه رسالة ينهاه فيها عن حماقاته..
ووقع اختياره على حبيب بن زيد ليحمله الرسالة مسيلمة..
وسافر حبيب يغذّ الخطى، مغتبطا بالمهمة الجليلة التي ندبه اليها رسول الله صلى الله عليه وسلم ممنّيا نفسه بأن يهتدي الى الحق، قلب مسيلمة فيذهب حبيب بعظيم الأجر والمثوبة.

இந்த கடிதத்தை பெற்றுக் கொண்ட தூதுவர்கள் இருவரும் நஜ்துக்கு சென்று முஸைலமாவிடம் கொடுத்தார்கள்.

தன் நிலையை மாற்றியமைப்பதற்குப் பதிலாக தன்னுடைய அக்கிரமத்தை அதிகரித்துக் கொண்டான்.

அவனை ஏற்றுக் கொள்ளாத முஸ்லிம்களை கொடுமை படுத்தி, கொன்றொழித்தான்.

தானும் கெட்டு, பிறரையும் வழிகேட்டில் அழைத்துச் செல்கிற முஸைலமாவின் தறி கெட்ட செயலை தடுத்து நிறுத்தும் முகமாக, எச்சரிக்கையுடன் கூடிய ஒரு கடிதத்தை அண்ணலார் {ஸல்} எழுதி, அதை கொண்டு சேர்க்கும் அரும்பணியை ஹபீப் இப்னு ஜைத் (ரலி) எனும் 20 அல்லது 21 வயது நிரம்பிய இளம் வாலிபரிடம் ஒப்படைத்து, நஜ்துக்கு அனுப்பினார்கள்.

”இத்தோடு, முஸைலமாவும் அவனது ஆதரவாளர்களும் மனம் திருந்தி மீண்டும் சத்திய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, தங்களின் ஈமானை புதுப்பித்துக் கொள்வார்கள்” எனும் ஆசையோடு பாலை, சுடுமணல், மலை, காடு என பல சிரமங்களைத் தாண்டி நஜ்தை அடைந்து பொய்யன் முஸைலமாவின் கோட்டைக்கு வந்தார்.

கடுமையான கெடுபிடிக்குப் பின்னால் அவன் முன் வந்து நின்று, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் தூதுவராக நான் வந்திருக்கின்றேன்! இதோ இந்த கடிதத்தை நபி {ஸல்} அவர்கள் தங்களிடம் தரச் சொன்னார்கள் என்று கூறியவாறே கடிதத்தை முஸைலமாவிடம் கொடுத்தார் ஹபீப் (ரலி) அவர்கள்.

جمع الكذاب مسيلمة قومه، وناداهم الى يوم من أيامه المشهودة..
وجيء بمبعوث رسول الله صلى الله عليه وسلم، حبيب بن زيد، يحمل آثار تعذيب شديد أنزله به المجرمون، مؤملين أن يسلبوا شجاعة روحه، فيبدو امام الجميع متخاذلا مستسلما، مسارعا الى الايمان بمسيلمة حين يدعى الى هذا الايمان أمام الناس.. وبهذا يحقق الكذاب الفاشل معجزة موهومة أمام المخدوعين به..

கடிதத்தைப் பிரித்துப் படித்ததும் கடும் சினம் கொண்டவனாக மாறினான். தூதுவருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை காற்றில் பறக்க விட்ட அவன் “இவரைச் சிறையில் அடையுங்கள்! நாளைக் காலையில் இவரை நம் அவையின் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்” என்று மதம் கொண்ட யானை போல் பிளிறினான்.

கைது செய்யப்பட்ட ஹபீப் (ரலி) கலங்கிடவில்லை. மறுநாள் காலைப் பொழுது எல்லோருக்குமான காலைப் பொழுதாக விடியவில்லை. ஷஹாதத் உடைய காலைப் பொழுதாக விடிந்தது நபித்தோழர் ஹபீப் இப்னு ஜைத் (ரலி) அவர்களுக்கு.

ஆம்! பொய்யன் முஸைலமா, தமது ஆதரவாளர்களின் புடைசூழ ஆனந்தமாக அமர்ந்திருக்கும் சபைக்கு சங்கிலியோடு இழுத்து வரப்பட்டார் ஹபீப் (ரலி) அவர்கள்.

قال مسيلمة لـ حبيب:
" أتشهد أن محمدا رسول الله..؟
وقال حيب:
نعم أشهد أن محمدا رسول الله.
وكست صفرة الخزي وجه مسيلمة وعاد يسألأ:
وتشهد أني رسول الله..؟؟
وأجاب حبيب في سخرية قاتلة:
اني لا أسمع شيئا..!!

ஏளனத்தோடு, ஏறிட்டுப்பார்த்த முஸைலமா முகத்தில் எவ்வித சலனமும் இன்றி நின்றிருந்த ஹபீப் (ரலி) அவர்களை நோக்கி “முஹம்மத் யார்? அவர் அல்லாஹ்வின் தூதரா? என்று கேட்டான்.

”ஆம்! முஹம்மத் {ஸல்} அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகின்றேன்!” என்று உரக்கக் கூறினார்.

முஸைலமா, கோபத்தால் முகம் சிவந்தவனாக ஹபீபை நோக்கி சுட்டெரிக்கும் பார்வையில் “நான் அல்லாஹ்வின் தூதன் தான் என்பதற்கு நீ சாட்சி கூறுகின்றாயா?” என்று கேட்டான்.

“நீ ஏதோ சொல்கிறாய் என்று எனக்குத் தெரிகிறது. ஆனால், நீ என்ன சொல்கிறாய் என்று என் காதில் விழவில்லை” என்று நக்கலாக அதே நேரத்தில், முகத்தில் வெளிக்காட்டாமல் பதில் கூறினார் ஹபீப் (ரலி) அவர்கள்.

وتحوّلت صفرة الخزي على وجه مسيلمة الى سواد حاقد مخبول..
لقد فشلت خطته، ولم يجده تعذيبه، وتلقى أمام الذين جمعهم ليشهدوا معجزته.. تلقى لطمة قوية أشقطت هيبته الكاذبة في الوحل..
هنالك هاج كالثور المذبوح، ونادى جلاده الذي أقبل ينخس جسد حبيب بسنّ سيفه..
ثم راح يقطع جسده قطعة قطعة، وبضعة بضعة، وعضوا عضوا..
والبطل العظيم لا يزيد على همهمة يردد بها نشيد اسلامه:
" لا اله الا الله محمد رسول الله"..

முகம் வெளுத்தது முஸைலமாவிற்கு. சினத்தின் உச்சத்திற்கே சென்ற அவன் “அவர் உடலின் ஒரு பகுதியை வெட்டி எறியுங்கள்” என ஆணை பிறப்பித்தான்.

குருதி வழிந்தோடினாலும் ஈமானிய சுருதி குறையாமல் ”ஆம்! முஹம்மத் {ஸல்} அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகின்றேன்!” என்று உரக்கக் கூறினார்.

மீண்டும், முஸைலமா, கோபத்தால் முகம் சிவந்தவனாக ஹபீபை நோக்கி “நான் அல்லாஹ்வின் தூதன் தான் என்பதற்கு நீ சாட்சி கூறுகின்றாயா?” என்று கேட்டான்.

ஹபீப் (ரலி) அவர்கள் முன்பு போலவே, “நீ ஏதோ சொல்கிறாய் என்று எனக்குத் தெரிகிறது. ஆனால், நீ என்ன சொல்கிறாய் என்று என் காதில் விழவில்லை” என்று உறுதி படக்கூறினார்.

ஹபீப் (ரலி) அவர்களின் உடலின் ஒவ்வொரு பகுதியும் இவ்வாறே துண்டு, துண்டாக வெட்டப்படுகின்றது.

இந்த உரையாடலும் தொடர்கின்றது. முக்கால் வாசி உடல் பாகங்கள் வெட்டப்பட்டு, ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றது.

“அல்லாஹ் அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, முஹம்மத் {ஸல்} அவர்கள் அல்லாஹ்வின் தூதரென்று நான் சாட்சி கூறுகின்றேன்.” என்று கூறியவாறே அவரின் இறுதி மூச்சும் பிரிந்தது.

இன்னா லில்லாஹ்…. அல்லாஹ்(தஆலா) அன்னாரைப் பொருந்திக்கொள்வானாக!

No comments:

Post a Comment