உயிருள்ள அனைவருக்கும் உபகாரம் செய்ய வேண்டும்!
وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ
”அல்லாஹ்( தஆலா) உமக்கு உபகாரம் செய்திருப்பதைப் போன்று நீயும் சக மனிதர்களுக்கு உபகாரம் செய்”
( அல்குர்ஆன்: 28: 77)
( அல்குர்ஆன்: 28: 77)
لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
“தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயங்களில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ – உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்ற வில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களைத் தடுப்பதில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்”
( அல்குர்ஆன்: 60:8 )
( அல்குர்ஆன்: 60:8 )
وعَنْ أَبِي هُرَيْرَةَ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :¬«بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ إِذْ اشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ، فَوَجَدَ بِئْرًا، فَنَزَلَ فِيهَا فَشَرِبَ، وَخَرَجَ، فَإِذَا كَلْبٌ يَلْهَثُ يَأْكُلُ الثَّرَى مِنْ الْعَطَشِ، فَقَالَ الرَّجُلُ: لَقَدْ بَلَغَ هَذَا الْكَلْبَ مِنْ الْعَطَشِ مِثْلُ الَّذِي بَلَغَ مِنِّي، فَنَزَلَ الْبِئْرَ، فَمَلَأَ خُفَّهُ، ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ، حَتَّى رَقِيَ، فَسَقَى الْكَلْبَ، فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ». فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ لَأَجْرًا؟ فَقَالَ: «فِي كُلِّ ذِي كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ»[البخاري ومسلم].
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு மனிதன் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான். அவனுக்குக் கடுமையாக தாகம் ஏற்பட்டது. அருகில் இருந்த கிணற்றுக்குள் இறங்கி நீர் அருந்தினான். தாகம் தீர நீர் அருந்திய பின்னர் மேலே வந்தான். அங்கே நாயொன்று தாகத்தின் கொடுமையால் தரையை நக்கிக் கொண்டிருந்தது.
அப்போது அந்த மனிதன் ”நாம் எவ்வாறு தாகத்தால் துடித்துக் கொண்டிருந்தோமோ அவ்வாறு தானே இந்த நாயும் தாகத்தால் துடித்துக் கொண்டிருக்கின்றது” என்று தன் மனதினுள் எண்ணினான்.
உடனே, கிணற்றுக்குள் இறங்கி தனது காலுறைக்குள் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வெளியே வந்து அந்த நாய்க்குத் தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனது இந்தச் செயலை மிகவும் மதித்தான். அதன் விளைவாக அவனது பாவங்களை மன்னித்தான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
அப்போது, நபித்தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! பிராணிகளுக்குச் சேவை செய்தாலும் நன்மை கிடைக்குமா?” என்று கேட்டார்கள்.
அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “ஈரமான ஈரலுடைய எந்த ஒன்றுக்கும் அதாவது எந்த ஓர் உயிர் பிராணிக்கும் சேவை செய்தாலும் நன்மை கிடைக்கும்” என்று பதில் கூறினார்கள்.
(நூல்: புகாரி -173-2363)
(நூல்: புகாரி -173-2363)
وعن أبي هريرة رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني قال يا رب كيف أعودك وأنت رب العالمين قال أما علمت أن عبدي فلانا مرض فلم تعده أما علمت أنك لو عدته لوجدتني عنده يا ابن آدم استطعمتك فلم تطعمني قال يا رب كيف أطعمك وأنت رب العالمين قال أما علمت أنه استطعمك عبدي فلان فلم تطعمه أما علمت أنك لو أطعمته لوجدت ذلك عندي يا ابن آدم استسقيتك فلم تسقني قال يا رب كيف أسقيك وأنت رب العالمين قال استسقاك عبدي فلان فلم تسقه أما علمت أنك لو سقيته لوجدت ذلك عندي رواه مسلم
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எங்களை நோக்கி “மறுமை நாளில் அல்லாஹ் மனிதனிடம் “மனிதனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். நீயோ என்னை நலம் விசாரிக்க வரவில்லையே!” என்று கேட்பான்.
மனிதன் பதைபதைப்போடு “என் இறைவனே! நீ தானே அனைத்துலகையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கின்றாய்! உன்னை எப்படி நான் வந்து நலம் விசாரிப்பது” என்று கேட்பான்.
அப்போது, அல்லாஹ் “இன்ன மனிதன் நோயுற்றிருந்ததை நீ அறிந்திருந்தாய் தானே! ஆனால், அவனது உடல் நலம் பற்றி நீ விசாரிக்கச் செல்லவில்லையே! நீ அவனை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்!” என்று கூறுவான்.
மீண்டும், அல்லாஹ் “மனிதா! உன்னிடம் நான் உணவு கேட்டேனே? நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லை?” என்று கேட்பான்.
அதற்கு, மனிதன் “அகில உலகங்களின் இரட்சகன் நீ! எப்போது நீ பசியோடு இருந்தாய்? நான் உனக்கு எப்படி உணவளிப்பது?” என்று கேட்பான்.
அப்போது, அல்லாஹ் ““இன்ன மனிதன் பசியோடு இருந்ததை நீ அறிந்திருந்தாய் தானே! ஆனால், அவனது பசியை போக்கிட உணவு கொடுக்க வில்லையே! நீ அவனுக்கு உணவு கொடுத்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்!” நீ அவனது தேவையை நிறைவேற்றி இருந்தால் அதற்கான நற்கூலியை இப்போது இங்கு பெற்றிருப்பாய்!” என்று கூறுவான்.
மீண்டும், அல்லாஹ் “மனிதா! நான் தாகித்த நிலையில் உன்னிடம் வந்து தண்ணீர் கேட்டேனே? ஏன் எனக்கு நீ குடிக்கத் தண்ணீர் தரவில்லை?” என்று கேட்பான்.
அதற்கு, மனிதன் “அகில உலகங்களின் அதிபதி நீ! எப்போது தாகித்திருந்தாய்? உனக்கு எவ்வாறு நான் தண்ணீர் புகட்டுவது?” என்று கேட்பான்.
அப்போது, அல்லாஹ் ““இன்ன மனிதன் தாகத்தோடு இருந்ததை நீ அறிந்திருந்தாய் தானே! ஆனால், அவனது தாகத்தைப் போக்கிட நீ தண்ணீர் கொடுக்க வில்லையே! நீ அவனுக்கு தண்ணீர் கொடுத்து தாகத்தை தீர்த்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்!” நீ அவனது தேவையை நிறைவேற்றி இருந்தால் அதற்கான நற்கூலியை இப்போது இங்கு பெற்றிருப்பாய்!” என்று கூறுவான்,
( நூல்: முஸ்லிம்-5021 )
( நூல்: முஸ்லிம்-5021 )
மனிதர்களுக்கு செய்யும் சேவையின் முக்கியத்துவத்தை அல்குர்ஆனின் மூலமாகவும் நபிகளாரின் பொன்மொழிகளின்
மூலமாகவும் அறிந்து உபகாரம் செய்ய முண் வர வேண்டும்
No comments:
Post a Comment