Wednesday, 4 December 2019

நண்மைமையானதை தேர்வு செய்க!


நண்மைமையானதை தேர்வு செய்க!


عن أبي أمامة الباهلي قال: " جاء ثعلبة بن حاطب الأنصاري إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله، ادع الله أن يرزقني مالاً، فقال: " ويحك يا ثعلبة، قليل تؤدي شكره خير من كثير لا تطيقه " . ثم أتاه بعد ذلك فقال: يا رسول الله، ادع الله أن يرزقني مالاً، قال: " أما لك في أسوة حسنة، والذي نفسي بيده لو أردت أن تسير الجبال معي ذهباً وفضة لسارت " ، ثم أتاه بعد ذلك فقال: يا رسول الله، ادع الله أن يرزقني مالاً، والذي بعثك بالحق لئن رزقني الله مالاً لأعطين كل ذي حق حقه، فقال رسول الله صلى الله عليه وسلم: " اللهم ارزق ثعلبة مالاً، الله ارزق ثعلبة مالاً " ، قال: فاتخذ غنماً فنمت كما ينمي الدود، فكان يصلي مع رسول الله صلى الله عليه وسلم الظهر والعصر، ويصلي في غنمه سائر الصلوات، ثم كثرت ونمت، فتقاعد أيضاً حتى صار لا يشهد إلا الجمعة، ثم كثرت ونمت فتقاعد أيضاً حتى كان لا يشهد جماعة ولا جماعة، وكان إذا كان يوم جمعة خرج يتلقى الناس يسألهم عن الأخبار فذكره رسول الله صلى الله عليه وسلم ذات يوم فقال: " ما فعل ثعلبة " ؟ فقالوا: يا رسول الله، اتخذ ثعلبة غنماً لا يسعها واد، فقال رسول الله صلى الله عليه وسلم: " يا ويح ثعلبة، يا ويح ثعلبة، يا ويح ثعلبة " ، وأنزل الله آية الصدقة، فبعث رسول الله صلى الله عليه وسلم رجلاً من بني سليم، ورجلاً من بني جهينة، وكتب لهما أسنان الصدقة كيف يأخذان وقال لهما: " مرا بثعلبة بن حاطب، وبرجل من بني سليم، فخذا صدقاتهما " ، فخرجا حتى أتيا ثعلبة فسألاه الصدقة، وأقرآه كتاب رسول الله صلى الله عليه وسلم فقال: ما هذه إلا جزية: ما هذه إلا أخت الجزية: انطلقا حتى تفرغا ثم عودا إلي، فانطلقا وسمع بهما السلمي، فنظر إلى خيار أسنان إبله، فعزلها للصدقة، ثم استقبلهما بها، فلما رأياها قالا: ما هذا عليك، قال: خذاه فإن نفسي بذلك طيبة، فمرا على الناس وأخذا الصدقة، ثم رجعا إلى ثعلبة، فقال: أروني كتابكما، فقرأه فقال: ما هذه إلا جزية، ما هذه إلا أخت الجزية، اذهبا حتى أرى رأيي، فأقبلا فلما رآهما رسول الله صلى الله عليه وسلم قبل أن يكلماه قال: " يا ويح ثعلبة " ، ثم دعاء للسلمي بخير، وأخبراه بالذي صنع ثعلبة، فأنزل الله عز وجل: " ومنهم من عاهد الله لئن آتانا من فضله " إلى قوله " وبما كانوا يكذبون " وعند رسول الله صلى الله عليه وسلم رجل من أقارب ثعلبة سمع ذلك، فخرج حتى أتاه، فقال: ويحك يا ثعلبة، قد أنزل الله عز وجل فيك كذا وكذا فخرج ثعلبة حتى أتي النبي صلى الله عليه وسلم، فسأله أن يقبل منه صدقته فقال: " إن الله تبارك وتعالى منعني أن أقبل منك صدقتك " ، فجعل يحثي التراب على رأسه، فقال رسول الله صلى الله عليه وسلم " هذا عملك، قد أمرتك فلم تطعني " ، فلما أبى رسول الله صلى الله عليه وسلم أن يقبض صدقته رجع إلى منزله، وقبض رسول الله صلى الله عليه وسلم ولم يقبض منه شيئاً.
ثم أتى أبا بكر رضي الله عنه حين استخلف، فقال: قد علمت منزلتي من رسول الله صلى الله عليه وسلم وموضعي من الأنصار فاقبل صدقتي، فقال أبو بكر: لم يقبلها رسول الله منك، أنا أقبلها؟ فقبض أبو بكر رضي الله عنه ولم يقبلها.
فلما ولي عمر أتاه فقال: يا أمير المؤمنين، اقبل صدقتي، فقال: لم يقبلها منك رسول الله صلى الله عليه وسلم ولا أبو بكر، أنا أقبلها؟ فقبض ولم يقبلها.
ثم ولي عثمان رضي الله عنه فأتاه فسأله أن يقبل صدقته، فقال: لم يقبلها رسول الله ولا أبو بكر ولا عمر، أنا أقبلها؟ ولم يقبلها. وهلك ثعلبة في خلافة عثمان رضي الله عنه.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் ஸஅலபா இப்னு ஹாத்தப் என்கிற நபித்தோழர் வந்தார்.
”அல்லாஹ்வின் தூதரே! செல்வச் செழிப்பான வாழ்விற்காக அல்லாஹ்விடம் எனக்காக பிரார்த்தியுங்கள்” என்றார்.

ஸஅலபா “குறைவாக வழங்கப்பட்டு அதற்காக நீர் நன்றி செலுத்துவது இருக்கிறதே, நிறைவான செல்வம் வழங்கப்பட்டு நன்றி செலுத்தாமல் வாழ்வதைக் காட்டிலும் மிகச் சிறந்ததாகும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
மீண்டும் முன்பு போலவே ஸஅலபா, அண்ணலாரிடம் வந்து கேட்டுக் கொண்டார்.
அதற்கு அண்ணலார், உனக்கு என் வாழ்க்கையில் அழகிய முன் மாதிரி இல்லையா? “என்னைப் பாரும்! என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது ஆணை! நான் விரும்பினால் இதோ தெரிகிற இந்த மலைகளை தங்கமாகவும், வெள்ளியாகவும் அல்லாஹ் மாற்றித்தருவான்!” (என்றாலும் எளிமையாக நான் வாழவில்லையா?) என்று கூறினார்கள்.
மூன்றாவது முறை நபிகளாரின் முன்வந்து நின்ற போது, அல்லாஹ்வின் தூதரே! எனக்காக துஆ செய்யுங்கள்! அல்லாஹ் எனக்கு வழங்குகின்ற செல்வத்திலிருந்து நான் யார் யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அவைகளை முறையாக முழுமையாக கொடுப்பேன்! இது உங்களை சத்தியத்தை கொண்டு அனுப்பிய அந்த இறைவனின் மீது ஆணை” என்று முழங்கினார்.
அப்போது, அண்ணலார் அவருக்காக மூன்று முறை பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் துஆ பரக்கத்தால் ஸஅலபாவின் (ஆடு, மாடு, ஒட்டகை) மந்தை பல்கிப் பெருகியது.
எப்போதும் பள்ளிவாசலிலேயே சுற்றித்திரிந்து கொண்டு “ஹமாமுல் மஸ்ஜித்” பள்ளிப்புறாவாக இருந்த அவர் இப்போது லுஹர் மற்றும் அஸர் ஆகியவற்றை மட்டும் அண்ணலாருடன் தொழுது வந்தார்.
மீதமுள்ள தொழுகைகளை அவரின் மந்தையிலேயே தொழுது கொண்டிருந்தார்.
மந்தை இன்னும் பல்கிப் பெருகியது, ஜும்ஆவிற்கு மட்டும் வந்து கொண்டிருந்தார்.
மதீனாவில் அவரின் மந்தையை வைப்பதற்கு இடமே கிடைக்கவில்லை எனும் நிலை ஏற்படும் அளவிற்கு மந்தை பல்கிப் பெருகியது.
மதீனாவை விட்டு வெகு தூரமிருக்கின்ற ஓர் மலைப்பகுதியில் பிரம்மாண்டமான ஓர் இடத்தில் அவர் மந்தையை அமைத்தார்.
இப்போது அவரிடம் இருந்து ஜும்ஆவிற்கான நற்பேரும் அகன்று போனது.
ஒருமுறை நபிகளார் ஸஅலபா என்ன ஆனார்? என்று வினவியதற்கு, நபித்தோழர்கள் அவரின் நிலையை விளக்கிக் கூறினார்கள்.
அப்போது, அண்ணலார் “யா வய்ஹ ஸஅலபா” ஸஅலபா விற்கு ஏற்பட்ட நாசமே! என்று மூன்று முறை கூறினார்கள்.
இந்நிலையில் அல்லாஹ் ஜகாத்தின் சட்டத்தை அருளினான். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஸஅலபாவிடமும், ஸுலைம் கோத்திரத்தைச் சார்ந்த இன்னொரு நபித்தோழரிடமும் ஜகாத் வசூலிக்க இரண்டு நபர்களை, ஜகாத் பற்றிய விவரத்தோடும், என்னென்ன பொருளுக்கு என்னென்ன ஜகாத் வழங்க வேண்டும் என்கிற தகவலும் அடங்கிய ஒரு கடிதத்தையும் கொடுத்து அனுப்பினார்கள்.
அவர்கள் நேராக ஸஅலபாவிடம் வந்து, கடிதத்தைக் கொடுத்து தம்மை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அனுப்பிவைத்ததின் நோக்கத்தைக் கூறினார்கள்.
ஜகாத்தின் விவரங்களைப் படித்த பிறகு, ஸஅலபா சொன்னார்: ”என்ன இது ஒரு முஸ்லிமிடம் ஜிஸ்யா வரி கேட்பது போலல்லவா இருக்கிறது” என்றார்.
அவர்கள் அங்கிருந்து கிளம்பி ஸுலைம் கோத்திரத்தைச் சார்ந்த இன்னொரு நபித்தோழரைச் சந்தித்து, கடிதத்தைக் கொடுத்து தங்களை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அனுப்பி வைத்ததின் நோக்கத்தைக் கூறினார்கள்.
”ஜகாத்தின் விவரங்களைப் படித்த அவர் சற்று ஓய்வெடுங்கள். இதோ கணக்கெடுத்து விட்டு ஜகாத்தைத் தருகின்றேன்” என்றார்கள்.
இதோ! என்னுடைய ஜகாத்! கொண்டு செல்லுங்கள். இப்போது தான் இதை வழங்கியதன் மூலம் என் மனம் நிம்மதி அடைவதை உணர்கின்றேன்” என்றார்கள்.
அதைப் பெற்றுக் கொண்ட இருவரும், மீண்டும் ஸஅலபாவிடம் வந்தனர். முன்பு போலவே கூறிய அவர் ஜகாத் தர முடியாது என மறுத்து விட்டார்.
அங்கிருந்து விடை பெற்று இருவரும் மதீனா நோக்கி வந்தார்கள். நேராக மஸ்ஜிதுன் நபவீயில் வந்திறங்கினார்கள்.
அவர்கள் இருவரும் பேச்சு கொடுக்கும் முன்பாகவே “யா வைஹ ஸஅலபா” என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

பின்பு நடைபெற்ற சம்பவங்களை அவ்விருவரும் நபிகளாரிடம் விவரித்தார்கள். ஸஅலபாவை சபித்த நபிகளார் {ஸல்} அவர்கள், ஸுலைம் கோத்திரத்தைச் சார்ந்த அந்த நல்ல நபித்தோழருக்கு துஆ செய்தார்கள்.
அப்போது அல்லாஹ் ஸஅலபாவின் இந்தச் செயலை இடித்துரைத்து வசனங்களை இறக்கியருளினான்.
وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ (75) فَلَمَّا آتَاهُمْ مِنْ فَضْلِهِ بَخِلُوا بِهِ وَتَوَلَّوْا وَهُمْ مُعْرِضُونَ (76) فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَى يَوْمِ يَلْقَوْنَهُ بِمَا أَخْلَفُوا اللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا يَكْذِبُونَ (77)
அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களில் இப்படிச் சிலர் இருக்கின்றனர்; “அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து எங்களுக்கு வழங்கினால், நிச்சயம் நாங்கள் தானதர்மங்கள் செய்வோம் மேலும், நல்லவர்களாக வாழ்வோம்” என்று அல்லாஹ்விடம் அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள்.
ஆனால், அல்லாஹ் தன்னுடைய அருட்கொடையிலிருந்து அவர்களுக்கு வழங்கிய போது, அதில் அவர்கள் கஞ்சத்தனம் செய்தார்கள். மேலும், சிறிதும் பொருட்படுத்தாதவர்களாய் (தமது வாக்குறுதியிலிருந்து) நழுவிச் சென்றார்கள்.
ஆகவே, அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதிக்கு அவர்கள் மாறுசெய்த காரணத்தினாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அல்லாஹ் அவர்களின் உள்ளத்தில் நயவஞ்சக எண்ணத்தை ஏற்படுத்தினான்.”
                                                       (அல்குர்ஆன்:9:75-77)
நபிகளாரின் அவையிலிருந்த ஸஅலபாவின் உறவினர் ஒருவர் ஓடோடிச் சென்று இந்தச் செய்தியை ஸஅலபாவிடம் தெரிவித்தார்.
இதைக் கேட்டதும் பதறித்துடித்த ஸஅலபா தமக்கான ஜகாத்தை கணக்கிட்டு, எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்தார். அதைப் பெற்றுக் கொள்ளுமாறும் கூறினார்.
அதற்கு, அண்ணல் {ஸல்} அவர்கள் “அல்லாஹ் உம்மிடமிருந்து உம்முடைய ஜகாத்தைப்பெறுவதற்கு தடை செய்துவிட்டான்” என்று கூறினார்கள்.
அங்கிருந்து விடை பெற்ற ஸஅலபா தம் தலை மீது மண்ணை அள்ளி தூவிய வாறு சென்றார்.
அப்போது நபி {ஸல்} அவர்கள் “ஸஅலபாவே! இது தான் உம்முடைய செயலாகும். முன்னரே உமக்கு உணர்த்தினேன். ஆனால், நீர் என் சொல்லை ஏற்க மறுத்து விட்டீர்” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் காலத்தில் ஸஅலபாவிட மிருந்து ஜகாத் பெற மறுத்து விட்டார்கள்.
முறையே பின்னர் ஆட்சியாளர்களாக இருந்த அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரும் வாங்க மறுத்து விட்டார்கள்.
இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஸஅலபா இறந்து போனார்.
(நூல்: உஸ்துல் ஃகாபா, பாகம்:1, பக்கம்:333, அல் இஸாபா, பாகம்:1, பக்கம்:930)

No comments:

Post a Comment