Saturday, 7 December 2019

விபச்சாரத்தின் பக்கம் நெறுங்க வேண்டாம்!!!

அருவருப்பான விபச்சாரம் 
அதன் அருகில் கூட நெருங்க வேண்டாம்...

அல்லாஹ்(தஆலா) தன் திருமறையில்.

وَلَا تَقْرَبُوا الزِّنٰٓى اِنَّهٗ كَانَ فَاحِشَةً   وَسَآءَ سَبِيْلًا‏ 
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
(அல்குர்ஆன் : 17:32)


العين تزني وزناها النظر،

அபூ ஹுரைரா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“அந்நியப் பெண்களைப் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரமாகும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

( நூல்:ஸஹீஹ் புகாரி "6243 )

قالَ أبو هُرَيْرَةَ: عَنِ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: إنَّ اللَّهَ كَتَبَ علَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنَ الزِّنَا، أدْرَكَ ذلكَ لا مَحَالَةَ، فَزِنَا العَيْنِ النَّظَرُ، وزِنَا اللِّسَانِ المَنْطِقُ، والنَّفْسُ تَمَنَّى وتَشْتَهِي، والفَرْجُ يُصَدِّقُ ذلكَ أوْ يُكَذِّبُهُ.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
விபசாரத்தில் மனிதனுக்குள் பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு 
இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது. 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்

ஸஹீஹ் புகாரி : 6243. 


رواه الطبراني والبيهقي ولفظه
لأن يطعن في رأس أحدكم بمخيط من حديد خير له من أن يمس امرأة لا تحل له. وقد حسنّه جمع من أهل العلم منهم العلامة الألباني ـ رحمه الله.

மஃகல் பின் யஸார் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:

“இரும்பினாலான ஊசியால் உங்களின் ஒருவருடைய தலையில் குத்துவது, அவருக்கு அனுமதி இல்லாத பெண்ணைத் தொடுவதை விட அவருக்குச் சிறந்ததாகும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

  ( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ லில் அல்பானீ, ஹதீஸ் எண்:5045. )

இப்னு உமர் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“ஓர் ஆண், அந்நியப் பெண்ணுடன் தனித்திருந்தால் அங்கு நிச்சயமாக மூன்றாமவனாக ஷைத்தான் இருக்கின்றான்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                      

( நூல்: அஹ்மத், திர்மிதீ )

அம்ருப்னுல் ஆஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“எனது இன்றைய நாளிற்குப் பிறகு எந்தவொரு ஆணும், அவனுடன் ஒன்று அல்லது இரண்டு ஆண்கள் சேர்ந்தே தவிர கணவன் வீட்டில் இல்லாத பெண்களிடம் வர வேண்டாம்.” என்று கூறினார்கள்.

( நூல்: அஹ்மத், ஹதீஸ்:6559 )

ஸஹ்ல் பின் ஸஅத் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“எவர் தம் இரு தாடைகளுக்கு மத்தியில் உள்ள நாவிற்கும், தம் இரு கால்களுக்கு மத்தியில் உள்ள மர்ம உறுப்பிற்கும் என்னிடம் (தவறான வழியில் அதைப் பயன்படுத்த மாட்டேன் என்று) உத்தரவாதம் அளிக்கின்றாரோ அவருக்காகச் சொர்க்கத்திற்கு நான் உத்தரவாதம் அளிக்கின்றேன்.”
                               
( நூல்:ஸஹீஹ் புகாரி : 6474)

     
அல்லாஹ்(தஆலா) முஃமின்கள் பார்வை விஷயத்தில் பேணவேண்டிய ஒழுக்கங்களையும், ஹிஜாப் என்னும் ஒழுக்கத்தையும்,

கற்பொழுக்கம் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது என்ற நியதிகளையும், படிப்படியாக இறக்கியருளினான்.

விபச்சாரம் என்பது ஒரு நல்ல முஃமினின் பண்பாடாக இருக்கமுடியாது
விபச்சாரம் அது மாபாதகச் செயல் அதன் அருகே கூட நெருங்கிடாதீர்கள் 

விபச்சாரம் புரிபவனுக்கான தண்டனை என்ன என்பதை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு  வகுத்தார்கள்.

திருமணமானவர்கள் விபச்சாரம் செய்தால்...

திருமணமாகாதவர்கள் விபச்சாரம் செய்தால்...

ஆண்களோ, பெண்களோ விபச்சாரத் தில் ஈடுபட்டால் அவர்களுக்கு நூறு கசையடிகளைத் தண்டனையாக வழங்க வேண்டும் என்று இவ்வசனம் (24:2) கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விபச்சாரத்திற்கான தண்டனையை இரு வகைகளாகப் பிரித்துள்ளனர்.

திருமணம் ஆனவர்கள் விபச்சாரம் செய்வார்களானால் அவர்களுக்கு மரண தண்டனையும், 

திருமணம் ஆகாத வர்கள் விபச்சாரம் செய்தால் நூறு கசையடி என்ற தண்டனையும் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

( நூல்: புகாரி - 2649, 2696, 2725, 6633, 6828, 6836, 6843, 6860, 7195, 7260, 2315, 5270, 5272, 6812, 6815, 6820, 6824, 6826, 6829, முஸ்லிம் உள்ளிட்ட ஏராளமான ஹதீஸ் நூல்களில் இதற்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன.

அல்லாஹ்(தஆலா)
விபச்சாரத்தின் பக்கம் அருகில்கூட நெருங்காமல்
வாழ வைப்பானாக!

No comments:

Post a Comment