Wednesday, 18 December 2019

பொறுப்புக்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும்…


பொறுப்புக்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும்…




إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنْسَانُ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا ()

அல்லாஹ்(தஆலா) கூறுகின்றான்:
“நாம் பொறுப்புகள் எனும் அமானிதத்தை வானங்கள் பூமி, மலைகள் ஆகியவற்றின் முன்பாக வைத்த போது அவை அதனை ஏற்கத் தயாராகவில்லை. மேலும், அதன் சுமையைக் கண்டு அஞ்சின. ஆனால், மனிதன் அதனை ஏற்றுக் கொண்டான். திண்ணமாக, அவன் பெரிதும் அநீதி இழைப்பவனாகவும் அறியாதவனாகவும் இருக்கின்றான்”
( அல்குர்ஆன்: 33: 72 )

إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا

அல்லாஹ்(தஆலா) கூறுகின்றான்:
(முஸ்லிம்களே!) அல்லாஹ்(தஆலா) உங்களுக்கு கட்டளை பிறப்பிக்கின்றான். 
அமானத் – பொறுப்புக்களை அவற்றிற்குரியவர்களிடம் நீங்கள் முழுமையாக நிறைவேற்றி விடுங்கள்”.   
( அல்குர்ஆன்: 4: 58 )

நபி {ஸல்} அவர்கள் பொறுப்புகள் குறித்து விவரிக்கும் போது 

حدثنا بشر بن محمد المروزي قال أخبرنا عبد الله قال أخبرنا يونس عن الزهري قال أخبرنا سالم بن عبد الله عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وزاد الليث قال يونس كتب رزيق بن حكيم إلى ابن شهاب وأنا معه يومئذ بوادي القرى هل ترى أن أجمع ورزيق عامل على أرض يعملها وفيها جماعة من السودان وغيرهم ورزيق يومئذ على أيلة فكتب ابن شهاب وأنا أسمع يأمره أن يجمع يخبره أن سالما حدثه أن عبد الله بن عمر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول

 كلكم راع وكلكم مسئول عن رعيته

 الإمام راع ومسئول عن رعيته

 والرجل راع في أهله وهو مسئول عن رعيته والمرأة راعية في بيت زوجها ومسئولة عن رعيتها والخادم راع في مال سيده ومسئول عن رعيته قال وحسبت أن قد قال والرجل راع في مال أبيه ومسئول عن رعيته

 وكلكم راع ومسئول عن رعيته

அய்லாவின் அதிகாரியாக இருந்த ருஸைக் இப்னு ஹகீம்,
வாதில்குரா கிராமத்தில், 
தாம் ஜும்ஆ நடத்தலாமா என 
இப்னு ஷீஹாபுக்கு எழுதிக் கேட்டார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். அக்கிரமாத்தில் சூடான் நாட்டவரும் பிறரும் இருந்தனர். இப்னு ஷீஹாப், ஜும்ஆ நடத்துமாறு 
ருஸைக் இப்னு ஹகீமுக்குக் கட்டளையிட்டார்கள். 
இப்னு உமர்(ரலி) வழியாக ஸாலிம் அறிவிக்கும் பின்வரும் நபிமொழியை அதற்கு ஆதாரமாக காட்டினார்கள்.

'உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் 
தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள்.

 தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்கள்.

ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான்.
 தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப் படுவான்.

 ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள்.

ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்.

'ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான்' என்றும் கூறினார்கள் எனக் கருதுகிறேன். 
(ஸஹீஹ் புகாரி : 893)



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார்.

ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.

ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள்.

பணியாள் தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான்.

நினைவில் கொள்க! 
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் : 3733)


حدثنا محمد بن سنان حدثنا فليح بن سليمان حدثنا هلال بن علي عن عطاء بن يسار عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة قال كيف إضاعتها يا رسول الله قال إذا أسند الأمر إلى غير أهله فانتظر الساعة

'மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)' இறைத்தூதர் அவர்களே! இதோ நானே' என்றார். அப்போது கூறினார்கள்.' அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்.' அதற்கவர், 'அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?' எனக் கேட்டதற்கு, 'எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்
(ஸஹீஹ் புகாரி : 59)


No comments:

Post a Comment