Thursday, 22 October 2020

நெஞ்சை நெகிழவைக்கும் நிகழ்வுகள்...

 நெஞ்சை நெகிழவைக்கும் நிகழ்வுகள்


தூதரின் மீது சான்றோரின் நேசம்

 

حدثنا ابن حميد، قال: ثنا سلمة: قال: ثني محمد بن إسحاق، عن يزيد بن زياد، عن محمد بن كعب القرظي، قال: قال فتى من أهل الكوفة لحُذيفة بن اليمان: يا أبا عبد الله، رأيتم رسول الله صلى الله عليه وسلم وصحبتموه؟ قال: نعم يا بن أخي، قال: فكيف كنتم تصنعون؟ قال: والله لقد كنا نجهد، قال الفتى: والله لو أدركناه ما تركناه يمشي على الأرض، لحملناه على أعناقنا.


முஹம்மது இப்னு கஅப் ரஹிமஹுல்லாஹ் அறிவிக்கின்றார்:

கூஃபா நகர வாசிகளில் ஒரு வாலிபர், ஹுதைஃபா இப்னுல் யமான் ரழியல்லாஹு அன்ஹு இடம் கேட்டார்: அபூ அப்தில்லாஹ் அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களைப் பார்த்திர்க்கிரீர்களா? அவர்களுடன் பழகி இருக்கிறீர்களா?


அவர் (ஹுதைஃபா) கூறினார்: என் ஆம் சகோதரரின் மகனே!


அவர் (வாலிபர்) கேட்டார்: நீங்கள் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடன்) எப்படி நடந்துகொண்டீர்கள்.


அவர் (ஹுதைஃபா ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: அல்ல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் சிரமப்பட்டுக் கொண்டுதான் இருந்தோம்.


அந்த வாலிபர் கூறினார்: அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் அவர்களை (-நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களைப்) பார்த்தால் (-அவர்களுடைய காலத்தில் வாழ்ந்திருந்தால்) அவர்களை பூமியில் நடக்கவிட்டிருக்க மாட்டோம். அவர்களை எங்கள் கழுத்துகளில் சுமந்திருப்போம்.


நூல்: தஃப்சீர் தபரி, வசனம் 33:9, பாகம் 20, பக்கம் 215


அல்லாஹ் அந்த வாலிபர் மீது கருணை காட்டுவானாக! ஆமீன்!!


படிப்பினை: இன்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் நம்முடன் இல்லை என்றாலும் அவர்களது மார்க்ம் நம்முடன் இருக்கின்றது. அவர்களது சுன்னா நம்முடன் இருக்கின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது நமக்கு உண்மையான மதிப்பும் அன்பும் நேசமும் இருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் மார்க்கத்தையும் சுன்னாவையும் மதிப்போமாக! அவர்களின் சுன்னாவை நேசிப்போமாக!


மார்க்கம் இன்னும் சுன்னாவை மதிப்பதும் நேசிப்பதும் அவ்விரண்டையும் பேணுதலுடன் பின்பற்றுவதில்தான் இருக்கின்றது.


அல்லாஹ்வே! உனது நபியின் மீது மதிப்பும் நேசமும் உடையவர்களில் எங்களை ஆக்குவாயாக! ஆமீன்!

No comments:

Post a Comment