வாழ்வாதாரம் குறித்து ஓர் கண்ணோட்டம்…
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا شُعْبَةُ أَنْبَأَنِى سُلَيْمَانُ الأَعْمَشُ قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - وَهْوَ الصَّادِقُ الْمَصْدُوقُ قَالَ « إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ فِى بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا ، ثُمَّ عَلَقَةً مِثْلَ ذَلِكَ ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ ، ثُمَّ يَبْعَثُ اللَّهُ مَلَكًا فَيُؤْمَرُ بِأَرْبَعٍ بِرِزْقِهِ ، وَأَجَلِهِ ، وَشَقِىٌّ ، أَوْ سَعِيدٌ ،
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் கருவாக உருவாக்கம் பெறுகின்றார். பிறகு அதைப் போன்றே நாற்பது நாட்கள் கரு ஒரு கட்டியாக மாற்றம் பெறுகின்றார். பிறகு, அதைப் போன்றே நாற்பது நாட்களில் ஒரு சதைப் பிண்டமாக மாற்றம் பெறுகின்றார்.
பிறகு, கருவறையினுள் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகின்றான். அவர் நான்கு விஷயங்களை எழுதுமாறு பணிக்கப்படுகின்றார். அந்த மனிதனின் வாழ்வாதாரம், ஆயுட்காலம், அவன் துர்பாக்கியசாலியா? அல்லது நற்பாக்கியசாலியா? ஆகியவைகளை அவர் எழுதுகின்றார். பிறகு அவனுள் உயிர் ஊதப்படும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
இன்னொரு அறிவிப்பில்….. அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِى بَكْرِ بْنِ أَنَسٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ - رضى الله عنه - عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - قَالَ « وَكَّلَ اللَّهُ بِالرَّحِمِ مَلَكًا فَيَقُولُ أَىْ رَبِّ نُطْفَةٌ ، أَىْ رَبِّ عَلَقَةٌ ، أَىْ رَبِّ مُضْغَةٌ . فَإِذَا أَرَادَ اللَّهُ أَنْ يَقْضِىَ خَلْقَهَا قَالَ أَىْ رَبِّ ذَكَرٌ أَمْ أُنْثَى أَشَقِىٌّ أَمْ سَعِيدٌ فَمَا الرِّزْقُ فَمَا الأَجَلُ فَيُكْتَبُ كَذَلِكَ فِى بَطْنِ أُمِّهِ » .
“அல்லாஹ், தாயின் கருவறையில் ஒரு வானவரை நியமிக்கின்றான். அவர் ”இறைவா! இது ஒரு துளி விந்து. இறைவா! இது பற்றித் தொங்கும் கருக்கட்டி, இறைவா! இது சதைத்துண்டு” என்று கூறிக்கொண்டிருப்பார்.
அதன் படைப்பை அல்லாஹ் முழுமையாக்கிட விரும்பும் போது “இறைவா! இது ஆணா? அல்லது பெண்ணா? இது துர்பாக்கியம் உடையதா? நற்பாக்கியம் உடையதா? இதன் வாழ்வாதாரம் எவ்வளவு? இதன் ஆயுள் எவ்வளவு?” என்று வானவர் கேட்பார்.
அவ்வாறே இவையனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டு அது தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே எழுதப்படுகிறது” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: புகாரி, கிதாபுல் கத்ர் )
وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ ()
“வாழ்வாதாரம் - ரிஸ்க் வழங்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும், அது வசிக்குமிடத்தையும், சென்று சேரும் இடத்தையும் அவன் நன்கறிகின்றான். அனைத்தும் ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டு உள்ளன”. ( அல்குர்ஆன்: 11: 6 )
اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ ()
“அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ரிஸ்க் – வாழ்வாதாரத்தை தாராளமாக வழங்குகின்றான். மேலும், தான் நாடியவர்களுக்கு அவன் அளவோடு வழங்குகின்றான். எனினும், இவர்கள் உலக வாழ்வில் மூழ்கி, அதைக் கொண்டே பெரிதும் மன நிறைவு அடைகின்றார்கள். ஆனால், மறுமையைக் கவனிக்கும் போது இவ்வுலக வாழ்க்கை சொற்ப இன்பமேயன்றி வேறில்லை”. (அல்குர்ஆன்: 13: 26 )
إِنَّ اللَّهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ ()
“திண்ணமாக, அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ரிஸ்க் – வாழ்வாதாரத்தை கணக்கின்றி வழங்குகின்றான்”. (அல்குர்ஆன்: 3: 37 )
وَاللَّهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ فِي الرِّزْقِ
“மேலும், (சிந்தித்துப் பாருங்கள்!) அல்லாஹ் உங்களில் சிலருக்கு வேறு சிலரை விட ரிஸ்க் – வாழ்வாதாரத்தில் சிறப்பு அளித்துள்ளான்”.
( அல்குர்ஆன்: 16:71 )
وَلَوْ بَسَطَ اللَّهُ الرِّزْقَ لِعِبَادِهِ لَبَغَوْا فِي الْأَرْضِ وَلَكِنْ يُنَزِّلُ بِقَدَرٍ مَا يَشَاءُ إِنَّهُ بِعِبَادِهِ خَبِيرٌ بَصِيرٌ ()
“அல்லாஹ் தன் அடிமைகள் அனைவருக்கும் தாராளமாக வாழ்வாதரத்தை வழங்கியிருந்தால், அவர்கள் பூமியில் அராஜகப் போக்கை பரவச் செய்திருப்பார்கள். ஆகவே, அவன் ஒரு கணக்குப்படி, தான் விரும்புகிற அளவில் இறக்கி வைக்கின்றான். திண்ணமாக, அவன் தன் அடிமைகள் குறித்து நன்கு தெரிந்தவனாகவும்,அவர்களைக் கண்காணிப்பவனாகவும் இருக்கின்றான்”.
(அல்குர்ஆன்: 42: 25 )
No comments:
Post a Comment