Monday, 12 October 2020

ஹலாலான கோபம்-தலாக் ...


-ஹலாலான கோபம்-தலாக் ...

சமீபகாலங்களில் இஸ்லாமிய குடும்பவியல் சட்டங்களின் மீது பொய்யான அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது.அதில் குறிப்பாக தலாக் போன்ற விஷயங்களின் எதார்த்த உண்மைகளை புரிந்துகொள்ளாமல் மக்களிடம் இஸ்லாம் பற்றி தவறாக சித்தரிக்கப்படுகிறதுமுதலில் இஸ்லாமிய சட்டங்களை விமர்சனம் செய்யும் முன்னால் அதைப்பற்றி சரியாக தெரிந்துவைத்திருக்கவேண்டும்.
இந்திய சட்டங்கள் இரண்டு வகை
 கிரிமினல் சட்டம் – குற்றவியல் சட்டம்
சிவில் சட்டம்     - உரிமையியல் சட்டம்

இந்திய சுதந்திரம் பெற்ற பின் 1949 நவம்பர் 26 ல் அரசியல் சாசனம் இயற்றி அதில் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று பிரகடனப்படுத்தப்பட்டது. அரசியல் சாசனம் விதி எண் 26 ன் படி இந்தியர்கள் அவரவர் விரும்பிய மதத்தின்படி வாழலாம் என்கிறது. மதச்சார்பற்ற இந்தியாவில், குற்றவியல் சட்டம் எல்லா மதத்தவருக்கும் பொதுவானது.

சிவில் – உரிமையியல் சட்டத்தை பொருத்தவரை அனைத்து மதத்தவரும் அவரவர் சார்ந்த மதக் கோட்பாட்டின்படி செயல்படலாம்.

இதில் திருமணம், விவகாரத்து, ஜீவனாம்சம், உயில், சொத்துப்பரிவினை , மஹர் ( திருமணம் நன்கொடை), அறக்கட்டளை சொத்து, வளர்ப்பு பிள்ளை, அன்பளிப்பு, வக்ஃப், போன்ற சில விஷயங்கள் மட்டும் அவரவர் சார்ந்த மதத்தின் தனியார் சட்டத்தின் படி  செயல்பட அரசியல் சாசனமே உரிமை வழங்கியுள்ளது. விதி எண் 26 ல் இதன்படி இந்தியாவில் இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்திற்கு இந்திய சட்ட வடிவு தான் முஸ்லிம் தனியார் சட்டம் அல்குர்ஆன் ஹதீஸ் இஜ்மா, மற்றும் கியாஸ் என்று ஷரிஅத்தின் அடிப்படை மூலாதாரங்களிலிருந்து ஆய்வு செய்து பெறப்பட்ட சட்டங்களை கொண்டது தான் முஸ்லிம் தனியார் சட்டம்.

முஸ்லிம் தனியார் சட்டத்தை பொருத்தவரையில் அல்லாஹ்வின் சட்டமே எல்லா காலமும் ஒரு முஸ்லிம் அமல்படுத்தவேண்டும் என்பது அல்லாஹ்வின் உறுதியான கட்டளையாகும்.அதை மாற்றவோ,திருத்தவோ, யாருக்கும் அருகதை கிடையாது.அதை மீறி அதில் கை வைத்தால்,அல்லது அதை வைக்க நினைத்தால் முஸ்லிம்கள் உயிரை கொடுத்தேனும் அதை மீட்பார்கள்.
இதை தான் ஷாபானு முதல் இம்ரானா வரை உலகம் கண்டது.

முதலில் விவாகரத்து போன்ற விஷயங்களில் இஸ்லாம் கனவனுக்கு அதிகாரம் வழங்கியிருப்பது உண்மைதான்.அதேசமயம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று உடனடியாக தலாக்கை பயன்படுத்துவதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
இஸ்லாத்தை பொருத்தவரையில் தலாக் என்பது உயிரை காப்பாற்றும் இறுதி கட்ட முயற்சியாகும்.ஒரு சக்கரை நோயாளி தன் உயிரை காப்பாற்ற காலை எடுப்பதுபோல, மனதளவில் ஒத்துவராமல் கசந்துப்போய்விட்ட குடும்ப வாழ்க்கையில் ஆணிடமிருந்து பெண்ணுக்கு பெற்றுத்தரும் உரிமையாகும். ஒருவகையில் இதையும் கூட இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியிருக்கும் உரிமையாகவே பார்க்கப்படவேண்டும்.

வாழ்வில் விவாகரத்தை தவிர்ப்பதற்கான அத்துனை வழிமுறைகளையும் இஸ்லாம் கையாள்கிறது என்பதை இஸ்லாமிய குடும்ப
வியல் சட்டங்களை ஆய்வு செய்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

இஸ்லாமிய இல்லங்களில் மட்டும் தான் விவாகரத்து மிக மிக  குறைவாக நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகிறது.,காரணம் இஸ்லாம் அதற்காக வகுத்திருக்கிற  சட்டங்கள் தான்.

தலாக் ஷைத்தானின் மிகப்பெரும் ஆயுதமாகும்.
அதைமுறையின்றி  கையில் எடுப்பவன் அல்லாஹ்வின் சோதனைக்குள்ளாக்கப்படுவான் மாத்திரமல்ல அல்லாஹ்வின் சாபத்திற்குறியவன் என்று மார்க்கம் சொல்கிறது.

தேவையின்றி,அவசியமின்றி தன் கணவனிடம் தலாக் கேட்கும் ஒரு பெண் சுவனத்தின் வாடையை கூட நுகரமாட்டாள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

أخرج الأمام مسلم في صحيحه عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ  صلى الله عليه وسلم : ((إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً  يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ قَالَ فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ قَالَ الْأَعْمَشُ أُرَاهُ قَالَ فَيَلْتَزِمُهُ

இப்லீஸ் ஒவ்வொரு நாளும் தன் சிம்மாசனத்தை கடலில் அமைத்து, தன் படைகளை மக்களை வழிகெடுக்க அனுப்பி வைக்கிறான்.

அவனின் படைகள் படைகள் அவனிடம் திரும்பி வந்து தான் வழிகெடுத்ததை சொல்லிக்கொண்
டிருக்கும் போது  அவர்களில் ஒரு ஷைத்தான் வந்து-
நான் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினையை உண்டு பன்னிவிட்டேன் என்றதும், அவனை அழைத்து தன் பக்கத்தில் இப்லீஸ் வைத்துக்கொள்வான் என ஹதீஸில் வருகிறது.

இஸ்லாம் கூறும் அறிவுரைகள்.

பார்வையை மாற்றிப்பாருங்கள்.

உங்கள் துணைவியரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு குணம் சரியில்லாத போது சோர்ந்துபோகாமல், அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களின் பக்கம் உங்களின் கவனத்தை திருப்புங்கள் என்று கூறுகிறது..  
நூறு சதவீதம் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியாகுவது சுவனத்துப்பெண்களுக்கு மட்டுமே சாத்தியமாகும்.
அழகு இல்லை,அறிவு இருக்கலாம்.அன்பு இருக்கலாம்.உங்களை புரிந்து நடக்கலாம்.
பணம் இல்லை.ஆனால் உங்களின் மீது பாசம் இருக்கலாம்.நற்குணம் இருக்கலாம்.பணிவு இருக்கலாம்.

فَإِنْ كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا ﴾ [النساء: 19
நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்

لاَ يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً، إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا، رَضِيَ مِنْهَا آخَرَ" مسلم
ஒரு முஃமினான ஆண் ஒரு முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒருகுணம் வெறுக்கும்படியிருந்தால் இன்னொரு குணம் நல்ல குணம் இருக்கும் அதை கொண்டு திருப்திபட்டுக்கொள்ளுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.குடும்ப வாழ்க்கை கசந்து ஒரு கட்டத்தில் வேறு வழியில்லை எனும் நிலையில் தலாக் தான் தீர்வு என்ற இறுதிநிலையில் கனவனுக்கு அந்த அதிகாரத்தை வழங்குகிறது.
நிக்காஹ்வை ஏற்றுக் கொண்டவனே தான் அதை விடுவிக்கவும் வேண்டும் என்பது தானே அறிவார்ந்த முறை அதுவும் எடுத்த எடுப்பில் அல்ல. விவாகரத்துக்கு முன்பு இஸ்லாம் நான்கு முறைகளை கூறுகிறது.

1 மனைவிக்கு உபதேசம் செய்ய வேண்டும்.

2.படுக்கையறையை விட்டும் பிரித்து வைக்க வேண்டும்

3.காயப்படுத்தாமல் முகம் அல்லாத பகுதியில் லேசாக அடிக்க வேண்டும்

4 சமாதானப் பேச்சுவார்த்தை இரு குடும்பத்தார்கள் மத்தியில் மூலம் நடத்தி சுமூக தீர்வு காண்பது

இந்த நான்கு முறைகளை சுமூகம் ஏற்படாவிட்டால் மட்டுமே விவாகரத்தை இஸ்லாம் அனுமதிக்கிறது

No comments:

Post a Comment