Friday, 23 October 2020

இறையச்சமும், ஈமானும்...

 இறையச்சமும், ஈமானும் வாழ்வாதாரத்தை விஸ்தீரணமாக்கும்…


وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ


”மேலும், யாரேனும் அல்லாஹ்வுக்கு அஞ்சியவண்ணம் வாழ்வாரேயானால், அவருக்கு சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழியை ஏற்படுத்துவான். மேலும், அவர் நினைத்துப் பார்த்திராத வகையில் அவருக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தை வழங்குவான்”.              (அல்குர்ஆன்: 65: 2,3 )


وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ


”மேலும், எந்த ஊர் மக்கள் ஈமான் கொண்டு, இறையச்சமுள்ள வாழ்க்கையை மேற்கொள்கின்றார்களோ அவர்களுக்காக வானம், பூமி ஆகியவற்றின் அருள் வளங்கள் அனைத்தையும் நாம் திறந்து விடுவோம்”.


( அல்குர்ஆன்: 7: 96 )


பாவத்தை விடுவது வாழ்வாதாரத்தை விஸ்தீரணமாக்கும்…


والنبي عليه الصلاة والسلام يقول قد يُحْرَمُ المرء بعض الرِّزْق بالمَعْصِيَة


நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ஓர் அடியான் செய்கிற சில பாவங்களால் அவனுடைய வாழ்வாதாரங்களின் விஸ்தீரணம் தடைபடுகின்றது”.


ஆகவே, மேற்கூறிய இறைவசனங்கள், நபிமொழிகள் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளவைகளின் துணை கொண்டு நாம் ரிஸ்க் விஸ்தீரணத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சி மேற்கொள்வோம்.

No comments:

Post a Comment