Wednesday, 26 November 2025

நாணம் கொள்வதற்கு மக்களைவிட அல்லாஹ் தான் மிகவும் தகுதிவாய்ந்தவன்...

 நாணம் கொள்வதற்கு மக்களைவிட அல்லாஹ் தான் மிகவும் தகுதிவாய்ந்தவன்


عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَوْرَاتُنَا مَا نَأْتِي مِنْهَا وَمَا نَذَرُ قَالَ ‏"‏ احْفَظْ عَوْرَتَكَ إِلاَّ مِنْ زَوْجَتِكَ أَوْ مَا مَلَكَتْ يَمِينُكَ ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذَا كَانَ الْقَوْمُ بَعْضُهُمْ فِي بَعْضٍ قَالَ ‏"‏ إِنِ اسْتَطَعْتَ أَنْ لاَ يَرَيَنَّهَا أَحَدٌ فَلاَ يَرَيَنَّهَا ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذَا كَانَ أَحَدُنَا خَالِيًا قَالَ ‏"‏ اللَّهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا مِنْهُ مِنَ النَّاسِ ‏"‏ ‏.


முஆவியா பின் ஹைதா ( ரலி ) அவர்கள் கூறியதாவது :


அல்லாஹ்வின் தூதரே ! எங்களுடைய மறைக்க வேண்டிய உடலுறுப்புகளில் எதனை நாங்கள் மறைக்க வேண்டும் ? எதனை நாங்கள் மறைக்காமல் விட்டுவிடலாம் என்று கேட்டேன்.


அதற்கு அவர்கள் உன்னுடைய மனைவி அல்லது உன் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட( அடிமையான)வர்களைத் தவிர( மற்றவர்களிடமிருந்து) உன்னுடைய மறைவிடத்தைப் பாதுகாத்துக் கொள்! என்று கூறினார்கள்.


( மீண்டும் )  நான் அல்லாஹ்வின் தூதரே ! ஒரு கூட்டத்தினர் சிலர் சிலருடன் கலந்து வாழும் சூழல் இருந்தால் யாது செய்வது ? என்று கேட்டேன்.


அதற்கு அவர்கள் உன்னுடைய மறைவான உறுப்பை எவரும் பார்க்காதவாறு ( மறைக்க ) நீர் சக்தி பெற்றால் எவரும் அதனைப் பார்க்க வேண்டாம்( யாரும் பார்க்க முடியாதவாறு மறைத்துக்கொள்)  என்று கூறினார்கள்.

( மீண்டும் ) நான் அல்லாஹ்வின் தூதரே ! எங்களில் ஒருவர் தனிமையில் இருந்தால் ( மறைவிடத்தை மறைக்க வேண்டுமா ?) என்று கேட்டேன்.


அதற்கு நபி ( ஸல் ) அவர்கள், அந்நிலையில் நாணம் கொள்வதற்கு மக்களைவிட அல்லாஹ் தான் மிகவும் தகுதிவாய்ந்தவன் என்று கூறினார்கள்.


 நூல் : ஸுனன் அபூதாவூத் 4017 

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...