Tuesday, 2 December 2025

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் .!!!

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் :


أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا سَافَرَ قَالَ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمُنْقَلَبِ وَالْحَوْرِ بَعْدَ الْكَوْرِ وَدَعْوَةِ الْمَظْلُومِ وَسُوءِ الْمَنْظَرِ فِي الأَهْلِ وَالْمَالِ ‏"‏ ‏.‏


அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :


அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் பயணம் புறப்படும்போது,


“ அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் வஉஸாயிஸ் ஸஃபரி , வ கஆபத்தில் முன்கலபி , வல்ஹவரி பாதல் கவரி , வ தஅவத்தில் மழ்லூமி ,வ சூயில் மன்ழரி ஃபில் அஹ்லி வல்மால் “.


பொருள் : இறைவா ! பயனத்தின் சிரமங்களிலிருந்தும் ,துயரத்தோடு திரும்பி வருவதிலிருந்தும் , வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்குமாறுவதிலிருந்தும் , அநீதிக்குள்ளானவனின் ( சாபப் ) பிரார்த்தனைக்கு உள்ளாவதிலிருந்தும், குடும்பத்திலும் செல்வத்திலும் தீய மாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன் என்று கூறுவார்கள்.


நூல் : நஸாயீ 5498 

Sunday, 30 November 2025

தேவையான அளவே சாப்பிட வேண்டும்!!!


 

தேவையான அளவே சாப்பிட வேண்டும்.


 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ وَاقِدِ بْنِ مُحَمَّدٍ عَنْ نَافِعٍ قَالَ كَانَ ابْنُ عُمَرَ لَا يَأْكُلُ حَتَّى يُؤْتَى بِمِسْكِينٍ يَأْكُلُ مَعَهُ فَأَدْخَلْتُ رَجُلًا يَأْكُلُ مَعَهُ فَأَكَلَ كَثِيرًا فَقَالَ يَا نَافِعُ لَا تُدْخِلْ هَذَا عَلَيَّ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ رواه البخاري


இப்னு உமர் (ரலி) அவர்கள் தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்து வரப்படாமல்  உணவு உண்ண மாட்டார்கள். ஆகவே, (ஒரு நாள்) அவர்களுடன்        சாப்பிட ஒருவரை நான் அழைத்துச்சென்றேன். அம்மனிதர்   நிறைய உண்டார். இப்னு உமர் (ரலி) அவர்கள் நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்’ எனக் கூறுவதை நான் கேட்டிருக்கின்றேன் என்று சொன்னார்கள்.


அறிவிப்பவா் : நாஃபிஉ(ரலி)

நுால் : புகாரி (5393)

Saturday, 29 November 2025

திருக்குர்ஆனை ஓதுபவர்களின் உதாரணம்...



 திருக்குர்ஆனை ஓதுபவர்கள்.


 حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ شُعْبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُؤْمِنُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَعْمَلُ بِهِ كَالْأُتْرُجَّةِ طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ وَالْمُؤْمِنُ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ وَيَعْمَلُ بِهِ كَالتَّمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ وَلَا رِيحَ لَهَا وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَالرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَالْحَنْظَلَةِ طَعْمُهَا مُرٌّ أَوْ خَبِيثٌ وَرِيحُهَا مُرٌّ – رواه البخاري


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


குர்ஆனை ஓதி அதன்படி செயலும் ஆற்றக்கூடிய இறைநம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர்; அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரீச்சம் (பழம்) போன்றவர். அதன் சுவை நன்று; (ஆனால்,) அதற்கு மணமில்லை. குர்ஆனை ஓதுகின்ற நயவஞ்சகனின் நிலை, துளசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை, குமட்டிக்காய் போன்றதாகும். அதன் சுவையும் கசப்பானது’ அல்லது அருவருப் பானது.’ அதன் வாடையும் வெறுப்பானது.


அறிவிப்பவா் : அபூமூசா (ரலி)

நுால் : புகாரி (5059)

ஒற்றுமையே பேணுவோம்...

 கட்டடத்தைப் போன்றவர்கள்


 حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ جَدِّهِ عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْمُؤْمِنَ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا وَشَبَّكَ أَصَابِعَهُ  – رواه البخاري


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


இறைநம்பிக்கையாளர்கள் (மூமின்கள்) ஒருவருக்கொருவர் (துணைநிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.


(இப்படிக் கூறும் போது) நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைவிரல்களை ஒன்றுடன் ஒன்றை கோர்த்துக் காட்டினார்கள்.


அறிவிப்பவா் : அபூமூசா (ரலி)

நுால் : புகாரி (481)

Friday, 28 November 2025

மறுமை நாளில் அர்ஷின் நிழல் பெறும் ஏழு பிரிவினர்...

மறுமை நாளில் அர்ஷின் நிழல் பெறும் ஏழு பிரிவினர்...

‎حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ الإِمَامُ الْعَادِلُ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَوَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தனது (அர்ஷின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பிரிவினருக்கு நிழல் அளிப்பான். அந்த ஏழு கூட்டத்தார்:

1. நீதி மிக்க தலைவர்.

2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.

3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.

4. அல்லாஹ்வுக்காகவே நட்புக் கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகிலிருந்து) பிரிந்து சென்ற இருவர்.

5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும் நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவர்.

6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.

7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 660


மழை வேண்டும் போது ஓதும் துஆ...

 


மழை வேண்டும் போது

இரு கைகளையும் உயர்த்தி


اَللّهُمَّ اسْقِنَا اَللّهُمَّ اسْقِنَا اَللّهُمَّ اسْقِنَا


அல்லாஹும்மஸ்கினா

அல்லாஹும்மஸ்கினா

அல்லாஹும்மஸ்கினா

எனக் கூற வேண்டும்.

இதன் பொருள் :

இறைவா! எங்களுக்கு மழையைத் தா.

ஆதாரம்: புகாரி 1013

அல்லது

اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا


அல்லாஹும்ம அகிஸ்னா

அல்லாஹும்ம அகிஸ்னா

அல்லாஹும்ம அகிஸ்னா

எனக் கூற வேண்டும்.

பொருள்:

இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு!

ஆதாரம்: புகாரி 1014



அளவுக்கு மேல் மழை பெய்தால்

اَللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا


அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா

என்று இரு கைகளையும் உயர்த்தி 

கூற வேண்டும்.

பொருள் :

இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே!

ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342

அல்லது

اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ


அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(B]லி வல் ஆஜாமி வள்ளிராபி(B] வல் அவ்திய(த்)தி வ மனாபி(B]திஷ் ஷஜரி

பொருள் 

இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும்,கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக.

ஆதாரம்: புகாரி 1013, 1016

அல்லது

اَللّهُمَّ عَلَى رُءُوْسِ الْجِبَالِ وَالآكَامِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ


அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(B]லி வல் ஆகாமி வபு(B]தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(B]திஷ் ஷஜரி

ஆதாரம்: புகாரி 1017



மழை பொழியும் போது

اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا


அல்லாஹும்ம ஸய்யிப(B]ன் நாபி[F]அன்

இதன் பொருள் :

இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்குவாயாக!

ஆதாரம்: புகாரி 1032




புயல் வீசும் போது ஓத வேண்டிய துஆ...


 


اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ


அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ[F]ஹா வகைர மா உர்ஸிலத் பி(B]ஹி. வஅவூது பி(B](க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ[F]ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(B]ஹி

பொருள் :

இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 1496


ஒர் அடியான் அல்லாஹ்விற்காக ஒன்றை கைவிடுவது...

 ஒர் அடியான் அல்லாஹ்விற்காக ஒன்றை கைவிட்டால் :


عَنْ أَبِي قَتَادَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّكَ لَنْ تَدَعَ شَيْئًا لِلَّهِ عَزَّ وَجَلَّ إِلَّا بَدَّلَكَ اللَّهُ بِهِ مَا هُوَ خَيْرٌ لَكَ مِنْهُ




 

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:


“நீங்கள் அல்லாஹ்வுக்காக ஏதாவது ஒன்றை விட்டுவிட்டால், அதற்குப் பதிலாக அல்லாஹ் உங்களுக்கு அதைவிட நன்மையானதைத் தருவான்.”


-அபூ கதாதா (ரலி) அறிவிக்கிறார்கள்


📖முஸ்னத் அஹ்மத் 23074 


இமாம் இப்னு கைய்யிம் رحمه الله அவர்கள் இந்த நபிமொழிக்கும் அளித்த விளக்கம் பின்வருமாறு :


قال ابن القيم رحمه الله:

«من ترك لله شيئًا عوَّضه الله خيرًا منه، كما قال النبي ﷺ: "إنك لن تدع شيئًا لله إلا بدّلك الله به ما هو خير لك منه"، وهذا العوض قد يكون عاجلًا في الدنيا، وقد يكون أعظم منه في الآخرة».




இமாம் இப்னு கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:


“யார் அல்லாஹ்வுக்காக ஏதாவது ஒன்றை விட்டுவிட்டாரோ, அல்லாஹ் அவனுக்கு அதைவிடச் சிறந்ததை அருளுவான். நபி ﷺ அவர்கள் கூறியதுபோல: ‘நீங்கள் அல்லாஹ்வுக்காக ஏதாவது ஒன்றை விட்டுவிட்டால், அல்லாஹ் அதற்கு பதிலாக உமக்குச் சிறந்ததை தருவான்.’ இந்த ஈடுசெய்தல் சில நேரங்களில் உலகிலேயே உடனடியாக நிகழலாம், அல்லது அதைவிட மிகப் பெரிய பலனாக மறுமையில் கிடைக்கலாம்.”


📚 (அல்-ஃபவாயித், பக்கம் 166)

Thursday, 27 November 2025

முஃமீனுடைய உயிர் வெளியேறும் நேரம்...

 முஃமீனுடைய உயிர் பிரியும் போது 


  ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ :  النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .... 

(إِنَّ الْمُؤْمِنَ تَخْرُجُ نَفْسُهُ مِنْ بَيْنِ جَنْبَيْهِ، وَهُوَ يَحْمَدُ اللَّهَ عَزَّ وَجَلَّ )".




இறை நம்பிக்கையாளர் ஒருவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துகொண்டிருக்கும் நிலையிலேயே அவரது உயிர் அவருடைய விலாப் புறங்களுக்கிடையிலிருந்து வெளியேறும் என்று நபி ஸல் கூறியதாக இப்னு அப்பாஸ் ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : முஸ்னத் அஹ்மத் 2412 

பிரிவினை,நயவஞ்சகத்தன்மை கெட்ட குணங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு பெற...

பிரிவினை,நயவஞ்சகத்தன்மை கெட்ட குணங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு தேடுதல்.


قال أبو هريرة: إن رسول صلى عليه وسلم كان يدعو يقول: «اللهم إني أعوذ بك من الشقاق، والنفاق، وسوء الأخلاق»


அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் :


அல்லாஹும்ம ! இன்னீ அஊது பிக்க மினஷ்ஷிகாகி வந்நிஃபாகி வ சூயில் அக்லாகி


பொருள் : இறைவா ! உன்னிடம் நான் பிரிவினை உண்டாக்குதல், நயவஞ்சகத்தன்மை ,கெட்ட குணங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.


நூல் : ஸுனன் அபூதாவூத் 1546 

Wednesday, 26 November 2025

நபி (ஸல் )அவர்கள் வழமையாக ஓதிய துஆக்கள்

 நபி (ஸல் )அவர்கள் வழமையாக ஓதிய துஆக்கள்


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ  ، حَدَّثَنَا شُعْبَةُ  ، عَنْ أَبِي إِسْحَاقَ  ، عَنْ أَبِي عُبَيْدَةَ  ، عَنْ عَبْدِ اللَّهِ  رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ مِمَّا يُكْثِرُ أَنْ يَقُولَ : " سُبْحَانَكَ رَبَّنَا وَبِحَمْدِكَ ، اللَّهُمَّ اغْفِرْ لِي " ، قَالَ : فَلَمَّا نَزَلَتْ : إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ سورة النصر آية 1 ، قَالَ : " سُبْحَانَكَ رَبَّنَا وَبِحَمْدِكَ ، اللَّهُمَّ اغْفِرْ لِي ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ "  .



அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறியதாவது :


நபி ( ஸல் ) அவர்கள் ( பொதுவாக ) , சுப்ஹானக்க ரப்பனா வ பிஹம்திக்க , அல்லாஹும் மஃக்ஃபிர் லீ ( எங்கள் இறைவா ! நீ தூய்வன் என உன்னைப் புகழ்ந்து துதிக்கிறேன் . இறைவா ! எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக ) என்று அதிகமாகப் பிரார்த்தனை புரிந்துவந்தார்கள்.


பிறகு , அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது எனத் தொடங்கும் அத்தியாயம் (110) அருளப்பெற்றபோது, சுப்ஹானக்க ரப்பனா வ பிஹம்திக்க, அல்லாஹும மஃக்ஃபிர் லீ , இன்னக்க அன்த்தத் தவ்வாபுர் ரஹீம் என்று பிரார்த்திக்கலானார்கள்.


( பொருள் : எங்கள் இறைவா ! நீ தூயவன் என உன்னைப் புகழ்ந்து துதிக்கிறேன் . இறைவா ! எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக நிச்சயமாக நீயே மிகவும் பாவமீட்சி அளிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய்)


நூல் : முஸ்னத் அஹ்மத் 3796 

கவலையும் வறுமையும் நீங்க...

கவலையும் வறுமையும் நீங்க...


عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ - وَلاَ أَعْلَمُهُ إِلاَّ قَدْ رَفَعَهُ - قَالَ ‏ "‏ يَقُولُ اللَّهُ سُبْحَانَهُ يَا ابْنَ آدَمَ تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلأْ صَدْرَكَ غِنًى وَأَسُدَّ فَقْرَكَ وَإِنْ لَمْ تَفْعَلْ مَلأْتُ صَدْرَكَ شُغْلاً وَلَمْ أَسُدَّ فَقْرَكَ ‏"‏ ‏.‏


அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள் :


தூயோன் அல்லாஹ் கூறுவதாக நபி ( ஸல் ) அவர்கள் அறிவித்ததாவது :


ஆதமுடைய மகனே ! என்னை வழிபடுவதற்காக நேரத்தை ஒதுக்கிக்கொள்.


நான் உன்னுடைய உள்ளத்தைத் தன்னிறைவால் நிரப்புவேன்.மேலும் உன் வறுமையைப் போக்கிவிடுவேன்.


நீ அவ்வாறு செய்யவில்லையென்றால் உன் உள்ளத்தை உலகக் கவலைகளால் நிரப்பிவிடுவேன். உன் வறுமையைப் போக்கமாட்டேன்.


நூல் : ஸுனன் இப்னுமாஜா 4107 

அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு ஆரோக்கியம் மிகச் சிறந்தது...

 அல்லாஹ்வை அஞ்சுவோருக்குச் செல்வ நிலையைவிட ஆரோக்கியம் மிகச் சிறந்தது.


عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمِّهِ، قَالَ كُنَّا فِي مَجْلِسٍ فَجَاءَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَعَلَى رَأْسِهِ أَثَرُ مَاءٍ فَقَالَ لَهُ بَعْضُنَا نَرَاكَ الْيَوْمَ طَيِّبَ النَّفْسِ ‏.‏ فَقَالَ ‏"‏ أَجَلْ وَالْحَمْدُ لِلَّهِ ‏"‏ ‏.‏ ثُمَّ أَفَاضَ الْقَوْمُ فِي ذِكْرِ الْغِنَى فَقَالَ ‏"‏ لاَ بَأْسَ بِالْغِنَى لِمَنِ اتَّقَى وَالصِّحَّةُ لِمَنِ اتَّقَى خَيْرٌ مِنَ الْغِنَى وَطِيبُ النَّفْسِ مِنَ النِّعَمِ ‏"‏ ‏.‏


உபைத் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :


 நாங்கள் ஒர் அவையில் அமர்ந்திருந்தோம் அப்போது நபி ( ஸல் ) அவர்கள் தம்முடைய தலையில் தண்ணீரின் அடையாளம் இருந்த நிலையில் (குளித்துவிட்டு) வந்தார்கள்.

அப்போது எங்களுள் ஒருவர்,`` தாங்கள் இன்று மன மகிழ்ச்சியுடன் இருப்பதை நாங்கள் காண்கிறோம்"என்று கூறினார். அதற்கு நபி ( ஸல் ) அவர்கள்,"ஆம்.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்றார்கள். 


பின்னர் மக்கள்,செல்வ நிலையைப் பற்றிப் பேசத் தொடங்கினர் அப்போது நபி ( ஸல் ) அவர்கள்,

செல்வ நிலையால் இறையச்சமுடைய வருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறினார்கள்.


அல்லாஹ்வை அஞ்சுவோருக்குச் செல்வ நிலையைவிட ஆரோக்கியம் மிகச் சிறந்தது.


மனமகிழ்ச்சி என்பது ( இறைவனின்) அருட்கொடைகளுள் ஒன்றாகும்  என்று கூறினார்கள்.


நூல் : ஸுனன் இப்னுமாஜா 2141

நாணம் கொள்வதற்கு மக்களைவிட அல்லாஹ் தான் மிகவும் தகுதிவாய்ந்தவன்...

 நாணம் கொள்வதற்கு மக்களைவிட அல்லாஹ் தான் மிகவும் தகுதிவாய்ந்தவன்


عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَوْرَاتُنَا مَا نَأْتِي مِنْهَا وَمَا نَذَرُ قَالَ ‏"‏ احْفَظْ عَوْرَتَكَ إِلاَّ مِنْ زَوْجَتِكَ أَوْ مَا مَلَكَتْ يَمِينُكَ ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذَا كَانَ الْقَوْمُ بَعْضُهُمْ فِي بَعْضٍ قَالَ ‏"‏ إِنِ اسْتَطَعْتَ أَنْ لاَ يَرَيَنَّهَا أَحَدٌ فَلاَ يَرَيَنَّهَا ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذَا كَانَ أَحَدُنَا خَالِيًا قَالَ ‏"‏ اللَّهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا مِنْهُ مِنَ النَّاسِ ‏"‏ ‏.


முஆவியா பின் ஹைதா ( ரலி ) அவர்கள் கூறியதாவது :


அல்லாஹ்வின் தூதரே ! எங்களுடைய மறைக்க வேண்டிய உடலுறுப்புகளில் எதனை நாங்கள் மறைக்க வேண்டும் ? எதனை நாங்கள் மறைக்காமல் விட்டுவிடலாம் என்று கேட்டேன்.


அதற்கு அவர்கள் உன்னுடைய மனைவி அல்லது உன் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட( அடிமையான)வர்களைத் தவிர( மற்றவர்களிடமிருந்து) உன்னுடைய மறைவிடத்தைப் பாதுகாத்துக் கொள்! என்று கூறினார்கள்.


( மீண்டும் )  நான் அல்லாஹ்வின் தூதரே ! ஒரு கூட்டத்தினர் சிலர் சிலருடன் கலந்து வாழும் சூழல் இருந்தால் யாது செய்வது ? என்று கேட்டேன்.


அதற்கு அவர்கள் உன்னுடைய மறைவான உறுப்பை எவரும் பார்க்காதவாறு ( மறைக்க ) நீர் சக்தி பெற்றால் எவரும் அதனைப் பார்க்க வேண்டாம்( யாரும் பார்க்க முடியாதவாறு மறைத்துக்கொள்)  என்று கூறினார்கள்.

( மீண்டும் ) நான் அல்லாஹ்வின் தூதரே ! எங்களில் ஒருவர் தனிமையில் இருந்தால் ( மறைவிடத்தை மறைக்க வேண்டுமா ?) என்று கேட்டேன்.


அதற்கு நபி ( ஸல் ) அவர்கள், அந்நிலையில் நாணம் கொள்வதற்கு மக்களைவிட அல்லாஹ் தான் மிகவும் தகுதிவாய்ந்தவன் என்று கூறினார்கள்.


 நூல் : ஸுனன் அபூதாவூத் 4017 

Tuesday, 25 November 2025

மார்க்க கல்வி கற்பதற்கான நற்கூலி...

 மார்க்க கல்வி கற்பதற்கான நற்கூலி


عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ يَعْلَمَهُ كَانَ لَهُ أَجْرُ مُعْتَمِرٍ تَامِّ الْعُمْرَةِ، فَمَنْ رَاحَ إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ يُعَلِّمَهُ فَلَهُ أَجْرُ حَاجٍّ تَامِّ الْحِجَّةِ».


அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) கூறியதாக அபூஉமாமா (ரலி) அறிவிக்கிறார்கள்:


 யார் ஒருவர் காலையில், கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்று கருதி மஸ்ஜிதுக்குச் செல்கிறாரோ அவருக்கு முழுமையான ஓர் உம்ரா செய்த நன்மை கிடைக்கும். 


யார் ஒருவர் மாலையில், கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்று கருதி மஸ்ஜிதுக்குச் செல்கிறாரோ அவருக்கு முழுமையான ஹஜ் செய்த நன்மை கிடைக்கும். 


நூல் : ஹாகிம் 311 


திக்ர் செய்வதன் சிறப்பு...

 திக்ர் செய்வதன் சிறப்பு...



أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ السَّلامِ مَكْحُولٌ  ، بِبَيْرُوتَ ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هَاشِمٍ الْبَعْلَبَكَيُّ  ، قَالَ : حَدَّثَنَا الْوَلِيدُ  ، عَنِ ابْنِ ثَوْبَانَ  ، عَنْ أَبِيهِ  ، عَنْ مَكْحُولٍ  ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ  ، عَنْ مَالِكِ بْنِ يُخَامِرَ  ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ  ، قَالَ : سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَيُّ الأَعْمَالِ أَحَبُّ إِلَى اللَّهِ ؟ قَالَ : " أَنْ تَمُوتَ وَلِسَانُكَ رَطْبٌ مِنْ ذِكْرِ اللَّهِ "  .

ابن حبان: أورده في صحيحه


முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:


எந்த நல்லறம் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது என்று நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் “ உன் நாவு அல்லாஹ்வை நினைவு கூர்வதனால் ஈரமாக உள்ள நிலையில் நீ மரணிப்பது “ என்று பதிலளித்தார்கள்.


நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 818 

திக்ருகளை விரல்களால் எண்ணி ஒதவேண்டும்...

 திக்ர் செய்வதன் சிறப்பு...


திக்ருகளை விரல்களால் எண்ணி ஒதவேண்டும்.


أنَّ النَّبيَّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ أمرَهنَّ أن يُراعينَ بالتَّكبيرِ والتَّقديسِ والتَّهليلِ وأن يعقِدنَ بالأناملِ فإنَّهنَّ مَسئولاتٌ مُستَنطَقاتٌ


நபி ஸல் அவர்கள் பெண்களுக்கு அல்லாஹு அக்பர்,ஸுப்ஹானல் மலிகுல் குத்தூஸ்,லாயிலாஹ இல்லல்லாஹு ஆகிய மூன்று திக்ருகளை விரல்களால் எண்ணி ஒதுமாறு கட்டளையிட்டார்கள் .


ஏனெனில் விரல்களிடம் மறுமை நாளில் விசாரணை செய்யப்படும் போது அவை ( சாட்சி கூறிப்) பேசும் என்று கூறினார்கள்.


இதை யுஸைரா ( ரலி) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 1501 தரம் 

இறையச்சமே இவ்வுலகில் பெரியது...

 இறையச்சமே இவ்வுலகில் பெரியது


عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: (الْحَسَبُ الْمَالُ، وَالْكَرَمُ التَّقْوَىٰ).


( பொதுமக்கள் பார்வையில் ) பொருளாதாரமே நன்மதிப்பாக உள்ளது( உண்மையில் ) கண்ணியம் என்பது இறையச்சமே ஆகும் என்று

நபி (ஸல்) கூறினார்கள் என சமுரா பின் ஜுன்துப் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸுனன் இப்னுமாஜா 4219 

தரம் : ஸஹீஹ்

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் .!!!

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் : أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْح...