Wednesday, 21 January 2015

"இருதி பேருரை"

முஹம்மது நபி (ஸல்) அவர்களின்
"இருதி பேருரை"
மக்களே !
என் பேச்சை கவனமாகக்
கேளுங்கள்!
இந்த ஆண்டிற்குப்
பிறகு மீண்டும் இந்த இடத்தில்
சந்திப்பேனா என்பது எனக்குத்
தெரியாது.
(இப்னு ஹிஷாம்)
பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
மக்களே !
உங்களது இறைவன் ஒருவனே;
அறிந்து கொள்ளுங்கள்:
எந்த ஒர்
அரபிக்கும் ஒர்
அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர்
அரபி அல்லாதவருக்கும் ஒர்
அரபியை விடவோ எந்த மேன்மையும்
சிறப்பும் இல்லை.
எந்த
ஒரு வெள்ளையருக்கும்
ஒரு கருப்பரை விடவோ, எந்த
கருப்பருக்கும்
ஒரு வெள்ளையரை விடவோ எந்த
மேன்மையும் சிறப்பும் இல்லை.
இறையச்சம் மட்டுமே ஒருவரின்
மேன்மையை நிர்ணயிக்கும்.
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்
உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில்
அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அல்பைஹகீ)
தலைமைக்குக் கீழ்ப்படிவீர் !
மக்களே !
அல்லாஹ்வை அஞ்சிக்
கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய)
அடிமை ஒருவர் உங்களுக்குத்
தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர்
அல்லாஹ்வின் வேதத்தைக்
கொண்டு உங்களை வழி நடத்தி அதை
உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும்
காலமெல்லாம் (அவரது சொல்லைக்)
கேட்டு நடங்கள்;
(அவருக்குக்)
கீழ்ப்படியுங்கள்!
(ஸுனன் நஸாயி , ஜாமிவுத்
திர்மிதி)
அராஜகம் செய்யாதீர்கள் !
அறிந்து கொள்ளுங்கள் !
எனக்குப்
பிறகு ஒருவர் மற்றவரின்
கழுத்தை வெட்டி மாய்த்துக்
கொள்ளும் வழிகெட்டவர்களாய்
இறை நிராகரிப்பாளர்களாய்
மாறி விடாதீர்கள்.
(ஸஹீஹுல் புகாரி )
உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும்
வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள்
அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின்
முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள் !
அப்போது அல்லாஹ்
உங்களது செயல்களைப்
பற்றி விசாரிப்பான். நான்
மார்க்கத்தை உங்களுக்கு
எடுத்துரைத்து விட்டேன். உங்களில்
எவராவது மற்றவருடைய பொருளின்
மீது பொறுப்பேற்றிருந்தால்,
அதை அவர் உரிய முறையில் அதன்
உரிமையாளரிடம்
ஒப்படைத்து விடட்டும்!
(ஸஹீஹ் முஸ்லிம் , ஸஹீஹுல்
புகாரி)
பணியாளர்களைப் பேணுவீர் !
மக்களே !
முஸ்லிம்கள் அனைவரும்
சகோதரர்கள்.
உங்கள் பணியாளர்கள்
விஷயத்தில்
பொறுப்புணர்வோடு நடந்து
கொள்ளுங்கள் !
அவர்களை நன்றாகப்
பராமரியுங்கள் !
நீங்கள்
உண்பதையே அவர்களுக்கும் உண்ணக்
கொடுங்கள்; நீங்கள்
உடுத்துவதையே அவர்களுக்கும்
உடுத்தச் செய்யுங்கள்!
(தபகாத் இப்னு ஸஅது)
அநீதம் அழிப்பீர் !
அறியாமைக்கால
அனைத்து விவகாரங்களும் என்
பாதங்களுக்குக் கீழ்
புதைப்பப்பட்டு விட்டன. மேலும்,
இன்று வரையிலான எல்லா வட்டிக்
கணக்குகளையும் ரத்துச்
செய்து விட்டேன். எனினும்,
உங்களது மூலதனம்
உங்களுக்கே உரியது.
(ஸஹீஹ் முஸ்லிம், இப்னு மாஜா)
முறைதவறி நடக்காதீர் !
அறிந்து கொள்ளுங்கள்!
குழந்தை விரிப்புக்கே சொந்தமானது
(அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன்
இருக்கும்
கணவனுக்கே குழந்தை உரியதாகும்)
மணமுடித்துக் கொண்ட பிறகும்
விபசாரம் செய்பவர்
கல்லெறிந்து கொல்லப்பட
வேண்டும்.எவர் தம்
தந்தை அல்லாதவரை தம்முடைய
தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம்
உரிமையாளர் அல்லாதவருடன்
தம்மை இணைத்துக் கொள்கிறாரோ,
அவர்கள் மீது அல்லாஹ்வுடைய,
வானவர்களுடைய இன்னும், மக்கள்
அனைவருடைய சாபமும்
உண்டாகட்டும் !
அவர்களின் கடமையான
உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக்
கொள்ளப்படாது.
(இப்னு மாஜா )
உரிமைகளை மீறாதீர் !
மக்களே !
ஒவ்வொருவருக்கும் சொத்தில்
அவரவரின் உரிமைகளை அல்லாஹ்
வழங்கி இருக்கின்றான். இனி, எவரும்
தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக்
கூடாது.(நஸாயி , ஸுனன்
அபூதாவூத்)
பெண்களை மதிப்பீர் !
கவனியுங்கள் !
பெண்கள் விஷயத்தில்
அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்;
அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்;
அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்.
அல்லாஹ்வுடைய அமானிதமாக
அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்!
எப்படி உங்கள் மனைவியர்
மீது உங்களுக்கு உரிமைகள்
இருக்கின்றனவோ, அதே போல் உங்கள்
மனைவியருக்கும் உங்கள்
மீது உரிமைகள் இருக்கின்றன.
அவர்கள் உங்களுக்குச் சிறந்த
முறையில் பணிவிடை ஆற்றட்டும்!
அவர்களுக்குரிய
கடமை என்னவென்றால், நீங்கள்
எவரை விரும்ப மாட்டீர்களோ,
அவரை அவர்கள் வீட்டுக்குள்
அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும்,
மானக்கேடான செயலைச் செய்யாமல்
இருக்கட்டும் !
அவர்கள் குற்றம்
புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற
உரிமையும் உங்களுக்கு உண்டு.
அது அவர்களை இலேசாக
காயம்படாதபடி தண்டிப்பதாகும்.
அவர்களுக்கு ஒழுங்கான முறையில்
உணவும் உடையும் வழங்குங்கள்;
அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்;
அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும்
உங்களைச் சார்ந்தவர்களாகவும்
இருக்கிறார்கள். அல்லாஹ்வின்
பெயரை முன்மொழிந்தே நீங்கள்
அவர்களுடன்
மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள் !
(ஸஹீஹ் முஸ்லிம்)
இரண்டைப் பின்பற்றுவீர் !
மக்களே !
சிந்தித்துப்
புரிந்து கொள்ளுங்கள்;
எனது பேச்சை கவனமாக கேட்டுக்
கொள்ளுங்கள். நான்
எனது பிரசாரத்தை உங்களுக்கு
எடுத்துரைத்து விட்டேன்.
உங்களிடையே அல்லாஹ்வின்
வேதத்தை(யும் அவனது தூதரின்
வழிமுறையும்) விட்டுச்
செல்கிறேன்.(குர்ஆன்&ஹதீஸ்)
நீங்கள் அவற்றைப்
பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட
மாட்டீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம், இப்னு மாஜா 3074)
எச்சரிக்கையாக இருப்பீர் !
மக்களே !
உங்களது இந்த நகரத்தில், தான்
வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான்
நம்பிக்கை இழந்து விட்டான்.
ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும்
விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில
விஷயங்களில் அவனுக்கு நீங்கள்
கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க
விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக
இருந்து கொள்ளுங்கள்!
(ஸஹீஹுத் தர்கீப்)
இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப்
பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன்.
அல்லாஹ் அனுப்பிய எந்த
இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம்
சமுதாயத்தாரை எச்சரிக்காமல்
இருந்ததில்லை.
(இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம்
சமுதாயத்தாருக்கு) அவனைப்
பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப்
பின்னால் வருகை தந்த
இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள்.
மேலும், (என் சமுதாயத்தினரான)
உங்களிடையேதான் (இறுதிக்
காலத்தில்) அவன் தோன்றுவான்.
அவனது (அடையாளத்) தன்மைகளில்
எதேனும் சில உங்களுக்குப்
புலப்படாமல் போனாலும், நிச்சயமாக
உங்களுடைய இறைவன் உங்களுக்குத்
தெரியாதவனல்லன்
என்பது உங்களுக்கு நன்றாகவே
தெரியும்!
உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன்
அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ)
வலது கண் குருடானவன். அவனது கண்
(ஒரே குலையில்) துருத்திக்
கொண்டிருக்கும்
திராட்சை போன்று இருக்கும்.
(ஸஹீஹ்ல் புகாரி)
சொர்க்கம் செல்ல வழி!
மக்களே !
உங்கள்
இறைவனையே வணங்குங்கள்; உங்கள்
இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்;
கடமையான ஐவேளைத்
தொழுகைகளையும்
தவறாது பேணுங்கள்; (ரமழானில்)
நோன்பு நோற்று வாருங்கள்;
விருப்பமுடன் ஸகாத்
கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின்
இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில்
அதிகாரம் உடையோருக்குக்
கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம்
செல்வீர்கள்!.
(ஸஹீஹுத் திர்மிதி516, முஸ்னத்
அஹ்மத்)
குற்றவாளியே தண்டிக்கபடுவார் !
ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான
தண்டனை அவருக்கே கொடுப்படும்;
மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ,
தந்தையின் குற்றத்திற்காக
மகனோ தண்டிக்கப்பட மாட்டார்.
(ஸஹீஹுத் திர்மிதி, ஸஹீஹ்
இப்னு மாஜா)
மக்களே !
எனக்குப்பின் எந்த ஒர்
இறைத்தூதரும் இல்லை;
உங்களுக்குப்பின் எந்த
ஒரு சமுதாயமும் இல்லை.
( ளிலாலுஸ் ஜன்னா)
இஸ்லாம் முழுமையாகி விட்டது!
இறுதியில் மக்களை நோக்கி,
மறுமை நாளில் உங்களிடம் என்னைப்
பற்றி விசாரிக்கப்படும்போது
நீங்கள்
என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள்,
""நீங்கள் (மார்க்க
போதனைகள் அனைத்தையும்
எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்;
(உங்களது தூதுத்துவப் பொறுப்பை)
நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்;
(சமுதாயத்திற்கு)
நன்மையை நாடினீர்கள் என நாங்கள்
சாட்சியம் அளிப்போம் என்றார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள்,
தமது ஆட்காட்டி விரலை வானை
நோக்கி உயர்த்தி சைகை
செய்துவிட்டுப் பிறகு,
அதை மக்களை நோக்கித்
தாழ்த்தி
""இறைவா!
இதற்கு நீயே சாட்சி! இறைவா!
இதற்கு நீயே சாட்சி! இறைவா!
இதற்கு நீயே சாட்சி!
என்று முடித்தார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்)
இறுதி இறை வசனம்.
இவ்வாறு அவர்கள் கூறிய
அதே இடத்தில் அல்லாஹ்வின்
புறத்திலிருந்து கீழ்
வருமாறு இறைவசனம் இறங்கியது:
""இன்றைய தினம் உங்களுக்காக
உங்களுடைய
மார்க்கத்தை முழுமையாக்கி
விட்டேன்; மேலும், நான் உங்கள்
மீது என் அருட்கொடையைப்
பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும்,
உங்களுக்காக நான் இஸ்லாம்
மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக்
கொண்டேன். (அங்கீகரித்துக்
கொண்டேன்.) (அல்குர்அன் 5:3)
(ஸஹீஹ்ல புகாரி )

நபிமொழி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ எந்த ஓர் இறைநம்பிக்கையாளருக்கும், இந்த உலகிலும் மறுமையிலும் நானே மக்களில் மிக நெருக்கமானவன் ஆவேன். நீங்கள் விரும்பினால், “திண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரை விட நபிதான் முன்னுரிமை பெற்றவராவார்“ எனும் (திருக்குர்ஆன் 33:6 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள். ஒரு நம்பிக்கையாளர் (அவர் எவராயினும் சரி, இறந்துபோய்) செல்வத்தைவிட்டுச்சென்றால் அவரின் தந்தை வழி உறவினர்கள் “அவர்கள் எவ்வகையினராயினும் சரி - அதற்கு அவர்கள் வாரிசாகட்டும்! (இறக்கும் போது) ஒரு கடனை (அடைக்காமல்)விட்டுச் செல்கிறவர்கள், அல்லது (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) மனைவி மக்களைவிட்டுச் செல்கிறவர்கள் என்னிடம் வரட்டும். நானே அவர்களுக்குரிய காப்பாளன் (பொறுப்பேற்றுப் பராமரிப்பவன்) ஆவேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
ஷஹீஹ் புகாரி

Tuesday, 28 October 2014

‪#‎தனக்காக_பிறர்_எழுந்து_நிற்பதை_கூட_விரும்பாத_உத்தம_தூதர்‬(ஸல்) அவர்கள் →→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→

‪#‎தனக்காக_பிறர்_எழுந்து_நிற்பதை_கூட_விரும்பாத_உத்தம_தூதர்‬(ஸல்) அவர்கள்
→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→→
நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் ‘அமருங்கள்’ என்றனர். ‘‪#‎தனக்காக_மக்கள்_எழுந்து_நிற்க_வேண்டும்‬ என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது ‪#‎தங்குமிடத்தை_நரகத்தில்‬ஏற்படுத்திக் கொள்கிறார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன். என்றும் முஆவியா (ரலி) கூறினார்கள்.
நூல்கள்: திர்மிதீ 2769
அபூதாவூத் 4552
உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள்‪#‎அவர்களுக்காக_எழ_மாட்டோம்‬. இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: அஹ்மத் 12068, 11895
திர்மிதீ 2678

Sunday, 26 October 2014

நபிமொழி

நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை), “சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; அகம்பாவம் கொண்டவர்கள்; பெருமை பிடித்தவர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி).
நூல்: ஸஹீஹுல் புகாரீ, பாகம்:5 ஹதீஸ் எண்: 6071.

நபிமொழி

பிறருக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற நன்மைகளைக் கண்டு பொறாமை கொள்ளாத குணம் மிகவும் சிறந்த குணமாகும். அத்தகைய நபர் மனிதர்களில் சிறந்தவரும் கூட.
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ حَدَّثَنَا زَيْدُ بْنُ وَاقِدٍ حَدَّثَنَا مُغِيثُ بْنُ سُمَيٍّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ النَّاسِ أَفْضَلُ قَالَ كُلُّ مَخْمُومِ الْقَلْبِ صَدُوقِ اللِّسَانِ قَالُوا صَدُوقُ اللِّسَانِ نَعْرِفُهُ فَمَا مَخْمُومُ الْقَلْبِ قَالَ هُوَ التَّقِيُّ النَّقِيُّ لَا إِثْمَ فِيهِ وَلَا بَغْيَ وَلَا غِلَّ وَلَا حَسَدَ
நபி (ஸல்) அவர்களிடம் மக்களில் சிறந்தவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் உண்மை பேசும் ஒவ்வொருவரும் மற்றும் ‪#‎தூய_உள்ளம்_கொண்டவரும்‬ஆவர் என்று பதிலளித்தார்கள். அப்போது மக்கள் உண்மை பேசுபவரைப் பற்றி அறிவோம். ஆனால் தூய உள்ளம் கொண்டவர் என்றால் யார்? என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தூய உள்ளம் கொண்டவர் யாரெனில் அவரது உள்ளத்தில் பாவமோ, அநியாயமோ, குரோதமோ, பொறாமையோ இருக்காது என்றார்கள்.
அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
இப்னுமாஜா 4206
‪#‎பிறர்_மீது_பொறாமைப்படாமல்_இருப்பதை_நம்_குணமாக்கி‬கொண்டால் இறைவன் நாடினால் அது நம்மை‪#‎சொர்க்கத்திற்கு‬ அழைத்து செல்லும் காரணியாக ஆகலாம்.
இது தொடர்பாக வரும் பின்வரும் ஹதீஸைப் படிக்கும்போது மறுப்பேதுமின்றி யாரும் இந்தக் கருத்தை ஒப்புக் கொள்வோம்.
“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது தற்போது‪#‎சுவர்க்கவாசிகளில்_ஒருவர்_உங்களிடத்தில்_வருவார்‬ என்று அவர்கள் கூறினார்கள். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் ஒழூ செய்ததால் தாடியில் தண்ணீர் வடிகின்ற நிலையில் இடது கையில் தனது செருப்புகளைத் தூக்கிக் கொண்டு வந்தார்.
மறு நாளும் அதுபோன்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதே மனிதர் அவ்வாறே வந்தார். மூன்றாவது நாளும் நபி (ஸல்) அவர்கள் முன்பு கூறியதைப் போன்றே கூறினார்கள். அந்த மனிதர் மூன்றாவது நாளும் அதே நிலையில் வந்தார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் சென்றபோது அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அந்த மனிதரை (கண்காணிப்பதற்காக) பின்தொடர்ந்து சென்றார். (பிறகு கூறினார்)
நான் எனது தந்தையுடன் சண்டையிட்டு மூன்று நாட்கள் அவரிடம் செல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டேன். ஆகவே அந்நாட்கள் கழியும் வரை உங்களிடம் தங்க எனக்கு இடமளிப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர் சரி என்றார்.
أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ كُنَّا جُلُوسًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَطْلُعُ عَلَيْكُمْ الْآنَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَطَلَعَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ تَنْطِفُ لِحْيَتُهُ مِنْ وُضُوئِهِ قَدْ تَعَلَّقَ نَعْلَيْهِ فِي يَدِهِ الشِّمَالِ فَلَمَّا كَانَ الْغَدُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ مِثْلَ الْمَرَّةِ الْأُولَى فَلَمَّا كَانَ الْيَوْمُ الثَّالِثُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ مَقَالَتِهِ أَيْضًا فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ عَلَى مِثْلِ حَالِهِ الْأُولَى فَلَمَّا قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبِعَهُ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ فَقَالَ إِنِّي لَاحَيْتُ أَبِي فَأَقْسَمْتُ أَنْ لَا أَدْخُلَ عَلَيْهِ ثَلَاثًا فَإِنْ رَأَيْتَ أَنْ تُؤْوِيَنِي إِلَيْكَ حَتَّى تَمْضِيَ فَعَلْتَ قَالَ نَعَمْ قَالَ أَنَسٌ وَكَانَ عَبْدُ اللَّهِ يُحَدِّثُ أَنَّهُ بَاتَ مَعَهُ تِلْكَ اللَّيَالِي الثَّلَاثَ فَلَمْ يَرَهُ يَقُومُ مِنْ اللَّيْلِ شَيْئًا غَيْرَ أَنَّهُ إِذَا تَعَارَّ وَتَقَلَّبَ عَلَى فِرَاشِهِ ذَكَرَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَكَبَّرَ حَتَّى يَقُومَ لِصَلَاةِ الْفَجْرِ قَالَ عَبْدُ اللَّهِ غَيْرَ أَنِّي لَمْ أَسْمَعْهُ يَقُولُ إِلَّا خَيْرًا فَلَمَّا مَضَتْ الثَّلَاثُ لَيَالٍ وَكِدْتُ أَنْ أَحْتَقِرَ عَمَلَهُ قُلْتُ يَا عَبْدَ اللَّهِ إِنِّي لَمْ يَكُنْ بَيْنِي وَبَيْنَ أَبِي غَضَبٌ وَلَا هَجْرٌ ثَمَّ وَلَكِنْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَكَ ثَلَاثَ مِرَارٍ يَطْلُعُ عَلَيْكُمْ الْآنَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَطَلَعْتَ أَنْتَ الثَّلَاثَ مِرَارٍ فَأَرَدْتُ أَنْ آوِيَ إِلَيْكَ لِأَنْظُرَ مَا عَمَلُكَ فَأَقْتَدِيَ بِهِ فَلَمْ أَرَكَ تَعْمَلُ كَثِيرَ عَمَلٍ فَمَا الَّذِي بَلَغَ بِكَ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا هُوَ إِلَّا مَا رَأَيْتَ قَالَ فَلَمَّا وَلَّيْتُ دَعَانِي فَقَالَ مَا هُوَ إِلَّا مَا رَأَيْتَ غَيْرَ أَنِّي لَا أَجِدُ فِي نَفْسِي لِأَحَدٍ مِنْ الْمُسْلِمِينَ غِشًّا وَلَا أَحْسُدُ أَحَدًا عَلَى خَيْرٍ أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ فَقَالَ عَبْدُ اللَّهِ هَذِهِ الَّتِي بَلَغَتْ بِكَ وَهِيَ الَّتِي لَا نُطِيقُ
அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்:
நான் மூன்று நாட்களும் அவரிடத்தில் தங்கி கழித்ததில்‪#‎அவர்_இரவில்_நின்று_வணங்கவில்லை‬; ஆனால் இரவில் படுக்கைக்கு செல்கின்றபோது அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள்; பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறுவார்கள்;
பிறகு பஜ்ரு வரையும் தூங்குவார்கள். அந்த நாட்களில் பிறரைப் பற்றி தவறாக பேசி நான் அவரிடம் கேட்டதில்லை. மூன்று நாட்கள் கழிந்த பிறகு அவரின் நற்செயல்களைக் குறைவாக மதிப்பிட முற்பட்டேன். எனவே அந்த மனிதரிடம் இறையடியாரே (உண்மையில்) எனக்கும் என் தந்தைக்கும் இடையில் எந்த சண்டை, சச்சரவும் இல்லை, எனினும் ‘நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் சுவர்க்கவாசிகளில் ஒருவர் இப்போது உங்களிடம் வருவார் என்று மூன்று முறை கூறினார்கள்;
மூன்று முறையும் நீங்களே வந்தீர்கள். எனவே தான் நான் உங்களிடம் தங்கி (சொர்க்கத்தில் நுழைவிக்கும் படி) தாங்கள் செய்யும் நற்செயல் எது? என்பதைப் பார்த்து நானும் அதை செய்ய விரும்பினேன். (அதற்காகவே தங்கினேன்) ஆனால் அதிகமான நற்செயல் எதுவும் செய்தததாக தங்களைக் காணவில்லை’ என்று கூறிவிட்டு அவ்வாறு ‘நபி (ஸல்) அவர்கள் உங்களை சுவர்க்கவாசி என்று கூறுவதற்குக் காரணம் என்னவென்று’ அவரிடம் கேட்டேன். நீங்கள் பார்த்ததைத் தவிர வேறொன்றும் (விசேஷமாக) என்னிடம் இல்லை என்று கூறினார்.
நான் திரும்பிச் சென்ற போது என்னை திரும்ப அழைத்து நீங்கள் பார்த்ததை தவிர வேறொன்றும் (விசேஷமாக) என்னிடம் இல்லை எனினும் “‪#‎நான்_எந்த_முஸ்லிமுக்கும்_தீங்கிழைக்கும்_எண்ணம்_என்_உள்ளத்தில்_இருந்ததில்லை‬. மேலும் அல்லாஹ் யாருக்கு நன்மையை வழங்கியிருந்தாலும் (அதற்காக) அவர் மீது நான்‪#‎பொறாமை_கொள்ள_மாட்டேன்‬.” என்று கூறினார்.
அதற்கு அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் இதுவே உங்களிடம் உள்ள(சிறந்த)து. ஆனால் இது நம்மால் இயலாது என்று கூறினார்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
அஹ்மத் 12236
இறையருளிலிருந்து நம்மைத் தூரமாக்கும் பொறாமையிலிருந்து எப்போதும் நாம் தூரமாகவே இருக்க வேண்டும். இறைவன் பிறருக்கு வழங்கியவற்றில் ஒரு போதும் நாம் ‪#‎தீய_எண்ணம்_கொள்ளாமலிருக்க_வேண்டும்‬. ஏனெனில் ஒரு முஸ்லிம் தனக்கு விரும்புவதை தம் சகோதரனுக்கும் விரும்ப வேண்டும் என்று இஸ்லாம் பணிக்கின்றது.
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ قَالَ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.
அறிவிப்பவர் அனஸ் (ரலி)
புகாரி 13
பிறர் மீது நாம் எதில் பொறாமை கொள்கிறோமோ அது நமக்குக் கிடைத்திருந்தால் நாம் சந்தோஷம் அடையவே செய்வோம். அல்லாஹ் அதை நம் சகோதரர்களுக்கு (பிறருக்கு) வழங்கியிருக்கின்றான் என்று பெருந்தன்மை உணர்வைப் பெற்றால் பொறாமை நம் உள்ளத்தில் துளிர்விடுவதை முற்றிலும் தடுத்து விடலாம். இந்தப் பக்குவத்தை அடையும் போது தான் நம் இறைநம்பிக்கை முழுமை பெறுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

குடிப்பவர்கலை;செருப்பாலை அடிப்போம்

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்திலும், 
அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சியிலும், 
உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் தொடக்கத்திலும் எங்களிடம்#மது_அருந்தியவர் கொண்டுவரப்பட்டால் அவரை நாங்கள்#கையாலும_காலணியாலும்_மேலங்கியாலும்_அடிப்போம்

உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் (குடிகாரருக்கு) #நாற்பது_சாட்டையடி வழங்கிடுமாறு அன்னார் உத்தரவிட்டார்கள். 

(மது அருந்தும் விஷயத்தில்) மக்கள் அத்துமீறி நடந்துகொண்டு கட்டுப்பட மறுத்தபோது (குடிகாரருக்கு) அன்னார் எண்பது சாட்டையடி வழங்கினார்கள். 

அறிவிப்பவர்: சாயிப் இப்னு யஸீத்(ரலி) 

நூல்: ஸஹீஹுல் புகாரி 6779.

Saturday, 25 October 2014

நபிமொழி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

*(பெற்றெடுத்த) #தாய்மார்களுக்குத்_துன்பம் தருவதையும், 

*பெண் குழந்தைகளை #உயிருடன்_புதைப்பதையும் 

*(நிறைவேற்றக் #கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) #நிறைவேற்றாமலிருப் பதையும் 

*பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் 

*தேவையற்ற #வீண்_பேச்சகள் பேசுவதையும்

*அதிகமாக #கேள்விகள்_கேட்பதையும்,

*#செல்வத்தை_வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு #ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான்.

அறிவிப்பவர்: முகீரா இப்னு ஷுஅபா(ரலி)

நூல்: ஸஹீஹுல் புகாரி 2408.