Wednesday, 21 January 2015

நபிமொழி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ எந்த ஓர் இறைநம்பிக்கையாளருக்கும், இந்த உலகிலும் மறுமையிலும் நானே மக்களில் மிக நெருக்கமானவன் ஆவேன். நீங்கள் விரும்பினால், “திண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரை விட நபிதான் முன்னுரிமை பெற்றவராவார்“ எனும் (திருக்குர்ஆன் 33:6 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள். ஒரு நம்பிக்கையாளர் (அவர் எவராயினும் சரி, இறந்துபோய்) செல்வத்தைவிட்டுச்சென்றால் அவரின் தந்தை வழி உறவினர்கள் “அவர்கள் எவ்வகையினராயினும் சரி - அதற்கு அவர்கள் வாரிசாகட்டும்! (இறக்கும் போது) ஒரு கடனை (அடைக்காமல்)விட்டுச் செல்கிறவர்கள், அல்லது (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) மனைவி மக்களைவிட்டுச் செல்கிறவர்கள் என்னிடம் வரட்டும். நானே அவர்களுக்குரிய காப்பாளன் (பொறுப்பேற்றுப் பராமரிப்பவன்) ஆவேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
ஷஹீஹ் புகாரி

No comments:

Post a Comment